அஷ்ரப் கனி அதிபராக இருக்கும் வரை தலிபான்கள் பேச மாட்டார்கள்: இம்ரான்கான்

Updated : ஆக 12, 2021 | Added : ஆக 12, 2021 | கருத்துகள் (10)
Share
Advertisement
இஸ்லாமாபாத்: ஆப்கன் அதிபராக அஷ்ரப் கனி இருக்கும் வரை தலிபான்கள் பேச்சுவார்த்தை நடத்த மாட்டார்கள் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கூறியுள்ளார்.ஆப்கனில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதை தொடர்ந்து, தலிபான் பயங்கரவாத அமைப்பினருக்கும், அந்நாட்டு ராணுவத்திற்கும் கடுமையான மோதல் நடந்து வருகிறது. அதில், பல நகரங்களை தலிபான்கள் கைப்பற்றி உள்ளனர். மொத்தமுள்ள 34
afghanistan, pakistan, Ashrafgan, taliban, imrankhan, kabul, afghan, ஆப்கன், ஆப்கானிஸ்தான், தலிபான்கள், இம்ரான்கான், பாகிஸ்தான்,

இஸ்லாமாபாத்: ஆப்கன் அதிபராக அஷ்ரப் கனி இருக்கும் வரை தலிபான்கள் பேச்சுவார்த்தை நடத்த மாட்டார்கள் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கூறியுள்ளார்.

ஆப்கனில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதை தொடர்ந்து, தலிபான் பயங்கரவாத அமைப்பினருக்கும், அந்நாட்டு ராணுவத்திற்கும் கடுமையான மோதல் நடந்து வருகிறது. அதில், பல நகரங்களை தலிபான்கள் கைப்பற்றி உள்ளனர். மொத்தமுள்ள 34 மாகாணங்களில் 10 மாகாணங்களை கைப்பற்றி உள்ளனர். உள்நாட்டு போரில் ஏராளமான பொதுமக்களும் கொல்லப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தலிபான்களுக்கு பாகிஸ்தான் உதவி வருவதாக ஆப்கன் அதிபர் அஸ்ரப் கனி அரசு தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது.

இந்நிலையில், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பேட்டி ஒன்றில் கூறியதாவது: கடந்த 3 மாதங்களுக்கு முன்னர், பேச்சுவார்த்தைக்கு வந்த போது தலிபான்களை சமாதானப்படுத்த முயன்றேன். அவர்களுடன் பேசியதன் முடிவில், ஆப்கனின் அதிபராக அஷ்ரப் கனி இருக்கும் வரை அரசுடன் பேச மாட்டார்கள் என புரிந்தது. இவ்வாறு அவர் கூறினார்.


90 நாளில் காபூல் வீழும்


latest tamil news


இந்நிலையில், பெயர் வெளியிட விரும்பாத அமெரிக்க ராணுவ அதிகாரி ஒருவர் கூறியதாவது: தலிபான் பயங்கரவாதிகள், இன்னும் 30 நாட்களில் காபூல் நகரை தனிமைப்படுத்தி விடுவார்கள். அதிகபட்சம் 90 நாட்களில் ஒட்டுமொத்த நகரையும் தங்களின் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துவிடுவார்கள். காபூல் நகரம் இன்னும் எத்தனை நாட்கள் தாக்கு பிடிக்கும் என்பது, தலிபான் பயங்கரவாதிகள் முன்னேறி செல்லும் வேகத்தை பொருத்து அமையும் எனக்கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Siva Kumar - chennai,இந்தியா
13-ஆக-202106:09:10 IST Report Abuse
Siva Kumar பாகிஸ்தான் இருக்கும் வரை ஆப்கானிஸ்தானில் பிரச்சனைகள் முடியப்போவதில்லை.
Rate this:
Cancel
NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
13-ஆக-202104:41:58 IST Report Abuse
NicoleThomson தீவிரவாதிகளின் செய்தி தொடர்பாளர் ஆகிவிட்டார் முஸ்லீம் தீவிரவாத நாட்டின் பிரதமர்?
Rate this:
Cancel
Ramesh Sargam - Bangalore,இந்தியா
13-ஆக-202100:01:39 IST Report Abuse
Ramesh Sargam இந்த தலிபான்கள் ஆப்கானிஸ்தானை முழுமையாக பிடித்தவுடன், அடுத்து பாகிஸ்தானை பிடிக்க உள்ளனர். அது தெரியாமல் இந்த இம்ரான் ஏதோ பேசுகிறான். ஹலோ இம்ரான், முதலில் உன் நாட்டை இந்த தாலிபான்களிடம் இருந்து காப்பாற்றும் நடவடிக்கையில் இறங்கு.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X