திருப்பூர் : தி.மு.க., எம்.எல்.ஏ., எதிர்ப்பு தெரிவித்ததால், கோர்ட் உத்தரவுப்படி, ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்க சென்ற வருவாய்த்துறையினர் அதிர்ச்சி அடைந்தனர்.
திருப்பூர் மாநகராட்சி, அணைமேடு பகுதியில், 110க்கும் அதிகமான குடும்பத்தினர் வசிக்கின்றனர். மொத்தம், 3.60 ஏக்கர் பரப்பளவுள்ள இந்த இடம் தனியார் ஒருவருக்கு சொந்தமானது என கோர்ட் தீர்ப்பு வழங்கியது. கோர்ட் உத்தரவின்படி, வருவாய்த்துறை அதிகாரிகள், நேற்று நிலம் மீட்பு பணியில் இறங்கினர்.முன்னதாக, நிலத்தை சர்வே செய்து மீட்க இருப்பதாக, நில உரிமையாளர் மற்றும் ஆக்கிரமிப்பாளருக்கு நோட்டீஸ் கொடுத்தனர்.
திருப்பூர் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ., செல்வராஜ் (தி.மு.க.,) மற்றும் ஆதரவாளர்கள், ஆக்கிரப்பாளர்களுக்கு ஆதரவாக களமிறங்கினர்.இதனால், ஆக்கிரமிப்பு அகற்ற சென்ற, வருவாய்த்துறையினர் அதிர்ச்சியடைந்தனர். உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய தாசில்தார் ஜெகநாதன், சர்வே பணி ஒத்தி வைக்கப்படுவதாக அறிவித்து சென்றார். பொதுமக்களும் கலைந்து சென்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE