சென்னை: அரசு திவாலாக உள்ளதால் வரிகளை உயர்த்தியே ஆக வேண்டும் என தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது: தேர்தல் அறிக்கையில் சொன்ன வாக்குறுதிகள் கண்டிப்பாக நிறைவேற்றப்படும். வருவாய் இல்லாமல் அரசாங்கம் திவாலாக உள்ளது. எனவே வரியை உயர்த்தியே ஆக வேண்டும். முன்னாள் அமைச்சர் பாண்டியராஜானுக்கு பொருளாதாரம் தெரியாது. வெள்ளை அறிக்கை சம்பந்தமாக வாய்க்கு வந்தபடி உளறிக்கொண்டு இருக்கிறார். வெளிப்படை தன்மையாக இருக்க வேண்டும் என்கிற நோக்கத்தில் தான் வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது. இதற்கும் தேர்தல் அறிக்கைக்கும் சம்பந்தம் இல்லை.

110 விதியில் ஜெயலலிதா, பழனிச்சாமி அறிவித்த திட்டங்களின் நிலை குறித்து எனக்கே இன்னும் தெளிவு கிடைக்கவில்லை. முன்னாள் முதல்வர் பழனிச்சாமி கோர்ட்டில் ஆஜராகி சொல்வது போல, வருவாய் பற்றாக்குறை இருந்தது என்று ஒப்புக்கொண்டு விட்டார். ஜெயலலிதா அறிவித்த தொலைநோக்கு பார்வை திட்டம் - 2023 நிறைவேறவில்லை. எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு பொறுப்பற்ற ஆட்சி நடைபெற்றுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE