கணவன் -மனைவி பிரிவுக்கு காரணமான ஒரு யூடியூப் வீடியோ

Updated : ஆக 12, 2021 | Added : ஆக 12, 2021 | கருத்துகள் (12) | |
Advertisement
விழுப்புரம் :திருமணமான மூன்றாவது மாதத்திலேயே தன்னை விட்டு பிரிந்து சென்ற கணவன் பத்து மாதங்களுக்கு மேலாகியும் இன்னமும் ஏன் தன்னிடம் வந்து சேரவில்லை என்ற மன உளைச்சலில் இருந்த இளம்பெண்ணுக்கு ஒரு யூடியூப் வீடியோதான் இந்த பிரிவுக்கு காரணம் என்பது தெரிந்து அதிர்ந்து போயிருக்கிறார். போலீசிலும் சென்று முறையிட்டிருக்கிறார். விழுப்புரம் மாவட்டம் தெளி கிராமத்தைச்

விழுப்புரம் :திருமணமான மூன்றாவது மாதத்திலேயே தன்னை விட்டு பிரிந்து சென்ற கணவன் பத்து மாதங்களுக்கு மேலாகியும் இன்னமும் ஏன் தன்னிடம் வந்து சேரவில்லை என்ற மன உளைச்சலில் இருந்த இளம்பெண்ணுக்கு ஒரு யூடியூப் வீடியோதான் இந்த பிரிவுக்கு காரணம் என்பது தெரிந்து அதிர்ந்து போயிருக்கிறார். போலீசிலும் சென்று முறையிட்டிருக்கிறார்.latest tamil newsவிழுப்புரம் மாவட்டம் தெளி கிராமத்தைச் சேர்ந்தவர் அகிலா. இவர் செங்காடு கிராமத்தை சேர்த்த ஆரோக்கியராஜ் என்பவரை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பின்னர் செங்காடு கிராமத்தில் இருவரும் வாழ்ந்து வந்தனர்.

திருமணத்திலிருந்து மூன்றாவது மாதத்திலேயே கருத்து வேறுபாடு ஏற்பட்டு ஆரோக்கியராஜ் அவரை விட்டு பிரிந்து சென்றுவிட்டார். தன் கணவர் தன்னை விட்டு பிரிந்து செல்ல என்ன காரணம் என்று இத்தனை மாதங்களாக மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார் அகிலா. அப்போதுதான் அவரது செல்போனுக்கு அந்த யூடியூப் வீடியோ வந்திருக்கிறது. அதை பார்த்த பின்னர்தான் இந்த வீடியோதான் தன் கணவரை தன்னிடமிருந்து பிரித்திருக்கிறது என்பதை உணர்ந்து கொண்டிருக்கிறார்.

ஆரோக்கியராஜாவை திருமணம் செய்வதற்கு முன்பாக அகிலாவிற்கு பலரும் மாப்பிள்ளை பார்த்து வந்திருந்த நிலையில் செல்வராஜ் என்பவரின் மனைவியும் அகிலாவுக்கு மாப்பிள்ளை பார்த்து வந்துள்ளார். அப்போது கண்டாச்சிபுரம் அடுத்த ஆற்காடு கிராமத்தைச் சேர்ந்த மைக்கேல் ஜெயக்குமார் என்பவரை மாப்பிள்ளை பார்த்திருக்கிறார். அகிலாவிற்கு பிடித்துப்போக இரு தரப்பிலும் பேச்சுவார்த்தை நடந்து வந்திருக்கிறது .திருமணம் செய்து கொள்ளப் போகிறோம் என்கிற முறையில் இருவரும் செல்போனில் பேசி வந்திருக்கின்றனர். பின்னர் நேரிலும் சந்தித்து இருவரும் நெருங்கி பழகி வந்துள்ளனர். ஆனால் திருமணம் வரைக்கும் செல்லாமல் அந்த உறவு இழுத்துக் கொண்டே சென்றிருக்கிறது. இந்த நிலையில்தான் ஆரோக்கியராஜ் என்பவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டு திருமணம் ஆகியிருக்கிறது.


latest tamil newsஇதனால் ஆத்திரம் கொண்ட மைக்கேல் ஜெயக்குமார் மற்றும் செல்வராஜ் மனைவி இருவரும் இணைந்து அகிலாவை பழிவாங்க திட்டம் போட்டுள்ளனர். அதன்படி மாப்பிள்ளை பார்ப்பதற்காக கொடுத்த அகிலா போட்டோவை வைத்து மார்பிங் செய்து ஒரு வீடியோவை தயார் செய்து அதை செங்காடு பகுதியினருக்கும் தெளி கிராமத்தைச் சேர்ந்த பலருக்கும் அனுப்பி வைத்திருக்கின்றனர். குறிப்பாக ஆரோக்கிய ராஜாவுக்கு இந்த வீடியோ சென்று சேரும்படி அனுப்பி இருக்கின்றனர்.

அந்த வீடியோவை பார்த்த பின்னர் தான் அகிலாவை விட்டுப்பிரிந்து சென்றிருக்கிறார் ஆரோக்கிய ராஜா . தனது திருமண வாழ்க்கை இந்தநிலைக்கு ஆனதற்கு காரணம் மைக்கேல் ஜெயக்குமாரும் செல்வராஜின் மனைவி தான் என்பதை உறுதிசெய்த அகிலா, விழுப்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு சென்று இருவரும் மீதும் புகார் அளித்திருக்கிறார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement
வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Lion Drsekar - Chennai ,இந்தியா
13-ஆக-202109:29:20 IST Report Abuse
Lion Drsekar படித்து விட்டு வேலைக்குசெல்பவர்கள்தான் முன் அனுபவம் எவ்வளவு என்று கேட்டது போல் இன்று .வந்தே மாதரம்
Rate this:
Cancel
LAX - Trichy,இந்தியா
13-ஆக-202100:33:12 IST Report Abuse
LAX அந்த கணவன் காரணத்தை னாகவே தன் மனைவியிடம் தெரிவித்திருக்கலாமே..? அவனுக்கு என்ன கனெக்ஷனோ.. விட்டா போதும் லைன் க்ளியர் னு ஓடிட்டான் போல.. அதான் காரணத்தை வெளிப்படையா சொல்லல..
Rate this:
Cancel
Mohan - Thanjavur ,இந்தியா
12-ஆக-202123:11:45 IST Report Abuse
Mohan அகிலா- ஆரோக்கியராஜ் எப்படிங்க பொருந்தும்.
Rate this:
Sanny - sydney,ஆஸ்திரேலியா
13-ஆக-202106:13:23 IST Report Abuse
Sanny இதே கேள்வியை இந்திய நடிகைகள் ஹொலிவூட் நடிகர்களை திருமணம் செய்யும்போது கேட்கணும், அகில, ஆரோக்கியராஜ் இருவருமே இந்தியர்களே....
Rate this:
suresh kumar - Salmiyah,குவைத்
13-ஆக-202108:11:25 IST Report Abuse
suresh kumarதமிழ்நாட்டில் பெருவாரியான கிருத்துவர்கள் இந்து பெயர்களையே வைத்துள்ளனர் உதாரணத்திற்கு ராஜாமணி, ஜெயமணி, ஜெபமணி, தெய்வசகாயம் அதுபோல் அகிலா, செல்வராஜ்... பெயரை வைத்து மதத்தை கண்டுபிடிக்க முடியாது....
Rate this:
sridhar - Chennai,இந்தியா
13-ஆக-202113:26:54 IST Report Abuse
sridharநடத்தையை வைத்து கண்டு பிடிக்கலாம்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X