யு.பி.எஸ்.சி., வினாத்தாளில் மேற்குவங்க வன்முறை குறித்த கேள்வி? : மம்தா கண்டனம்

Updated : ஆக 12, 2021 | Added : ஆக 12, 2021 | கருத்துகள் (11)
Share
Advertisement
கோல்கட்டா : மத்திய போலீஸ் படை பணிகளுக்கான தேர்வில், மேற்கு வங்க தேர்தல் வன்முறை பற்றி கேட்கப்பட்ட கேள்விக்காக யு.பி.எஸ்.சி., எனப்படும் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்துக்கு, முதல்வர் மம்தா பானர்ஜி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்., ஆட்சி நடக்கிறது.மாநிலத்தில் கொரோனா பரவலை தடுக்க அமல்படுத்தப்பட்ட
  Mamata Banerjee Tears Into UPSC   யு.பி.எஸ்.சி.,  வினாத்தாள், மேற்குவங்க வன்முறை,  மம்தா கண்டனம்For "BJP Question" On Bengal Poll Violence

கோல்கட்டா : மத்திய போலீஸ் படை பணிகளுக்கான தேர்வில், மேற்கு வங்க தேர்தல் வன்முறை பற்றி கேட்கப்பட்ட கேள்விக்காக யு.பி.எஸ்.சி., எனப்படும் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்துக்கு, முதல்வர் மம்தா பானர்ஜி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்., ஆட்சி நடக்கிறது.மாநிலத்தில் கொரோனா பரவலை தடுக்க அமல்படுத்தப்பட்ட கட்டுப்பாடுகளில் தளர்வுகளை அறிவித்த மம்தா, நிருபர்களிடம் கூறியதாவது.


latest tamil news



மத்திய போலீஸ் படை பணிகளுக்காக யு.பி.எஸ்.சி., நடத்திய தேர்வில் மேற்கு வங்க தேர்தல் வன்முறை பற்றிய கேள்வி இடம் பெற்றுள்ளது. மேற்கு வங்க தேர்தல் வன்முறை பற்றி 200 வார்த்தைகளுக்கு மிகாமல் எழுத வேண்டும் என, கேட்கப்பட்டுள்ளது.

வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் பற்றியும் கேள்வி கேட்கப்பட்டுள்ளது. யு.பி.எஸ்.சி., தன்னாட்சி அதிகாரம் உடையது. ஆனால் இப்போது மத்திய பா.ஜ., அரசின் ஊதுகுழலாக செயல்படுகிறது. தன்னாட்சி அதிகாரம் பெற்ற அமைப்புகளை சீரழிப்பதே மத்திய பா.ஜ, அரசின் நோக்கமாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankaseshan - mumbai,இந்தியா
13-ஆக-202109:55:44 IST Report Abuse
sankaseshan அடங்காபி டைரிக்கு உண்மையை சொன்னால் எங்கெல்லாமோ எரிகிறது
Rate this:
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
13-ஆக-202109:31:44 IST Report Abuse
Lion Drsekar மனிதர்கள் எல்லாம் ஒரு நொடி அல்லது ஒரு சில நிமிடங்கள் கோவப்பட்டாலே மீண்டும் உடல் நிலை பழைய நிலைக்கு திரும்ப பல நாட்கள் ஆகும் ... 24 மணிநேரமும் எப்படித்தான் ,,, வந்தே மாதரம்
Rate this:
Cancel
13-ஆக-202106:44:21 IST Report Abuse
அப்புசாமி கவலைப் படாதீங்க. நீங்க ஆட்சிக்கு வந்தால் கருப்பு பண ஒழிப்பு, நோட்பந்தி , ரெண்டு கோடி வேலை, அல்லாருக்கும் வூடு, கைதட்டி வெளக்கேத்தல் பத்தி கட்டுரை எழுதச் சொல்லி ஜமாய்ச்சுரலாம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X