பொது செய்தி

இந்தியா

ரிசர்வ் வங்கி சாதனை தங்க இருப்பு 700 டன்

Updated : ஆக 13, 2021 | Added : ஆக 13, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
மும்பை :ரிசர்வ் வங்கி வசம் இருக்கும் தங்கத்தின் அளவு இதுவரை இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது. தற்போது இதன் வசம் இருக்கும் தங்கத்தின் அளவு 700 டன் என்ற சாதனை உயரத்தை தாண்டியுள்ளது.அண்மைக் காலமாகவே ரிசர்வ் வங்கி அதிகளவிலான தங்கத்தை வாங்கி வருகிறது. நடப்பு ஆண்டின் முதல் பாதியில் மட்டுமே 29 டன் தங்கத்தை வாங்கி இருக்கிறது. இதையடுத்து தங்கத்தின் இருப்பு 700 டன்னை
ரிசர்வ் வங்கி சாதனை  தங்க இருப்பு 700 டன்

மும்பை :ரிசர்வ் வங்கி வசம் இருக்கும் தங்கத்தின் அளவு இதுவரை இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது. தற்போது இதன் வசம் இருக்கும் தங்கத்தின் அளவு 700 டன் என்ற சாதனை உயரத்தை தாண்டியுள்ளது.அண்மைக் காலமாகவே ரிசர்வ் வங்கி அதிகளவிலான தங்கத்தை வாங்கி வருகிறது. நடப்பு ஆண்டின் முதல் பாதியில் மட்டுமே 29 டன் தங்கத்தை வாங்கி இருக்கிறது. இதையடுத்து தங்கத்தின் இருப்பு 700 டன்னை தாண்டியுள்ளது.

கடந்த இரண்டு ஆண்டு களில் மட்டும் ரிசர்வ் வங்கியின் தங்கத்தின் இருப்பு 27 சதவீதம் அதிகரித்துள்ளது. இதை அடுத்து உலகளவில் அதிக தங்கம் இருப்பு வைத்திருக்கும் 10 நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது. உலகளவில் அதிக அளவு தங்கத்தை இருப்பு வைத்திருக்கும் அரசு அமெரிக்காவாகும்.


latest tamil news


இந்திய ரிசர்வ் வங்கியின் தங்க இருப்பு கடந்த 20 ஆண்டுகளில் 12 மடங்கு அதிகரித்திஇருப்பதாக பார்லி.யில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அண்மையில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.கடந்த ஜூன் 30ம் தேதி நிலவரப்படி ரிசர்வ் வங்கி வசம் இருக்கும் தங்கத்தின் இருப்பு 705.6 டன். இதுவே கடந்த 2018ம் ஆண்டு துவக்கத்தில் 558.1 டன் ஆக இருந்தது.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
நல்லவன் - chennai,இந்தியா
13-ஆக-202113:05:49 IST Report Abuse
நல்லவன் ஒன்னு நாட்டோட கடனை அடை, இல்லன்னாக்கா மக்களுக்கு கொடு, இப்படி வெறுப்பேற்த்தாதிங்க...
Rate this:
Cancel
Senthil Kumar - singapore,சிங்கப்பூர்
13-ஆக-202107:52:02 IST Report Abuse
Senthil Kumar இதென்ன பிரமாதம், ஒரு அதிகாரி வீட்டுல நடந்த சோதனையில் ஒரு டன் தங்கம் கிடைத்தது. அப்புறமென்ன அந்த அதிகாரியை நம்ம மோடிஜி புரொமோஷன் கொடுத்து உலக சுகாதார அமைப்புக்கு அனுப்பிட்டார். சாதனையாளர்கள் என்றால் மோடிஜிக்கு ரொம்ப பிடிக்கும்.
Rate this:
Cancel
Balasubramanian - Bangalore,இந்தியா
13-ஆக-202107:44:47 IST Report Abuse
Balasubramanian அபார சாதனை இதையே பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் பாணியில் கூறுவது என்றால், ஒவ்வொரு இந்திய குடும்பத்தினரிடமும் கால் பவுன் தங்கம் வைப்பில் இருக்கிறது 😊
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X