கடம்பத்தூர் ரயில்வே மேம்பாலம் விரைவில் திறப்பு: கலெக்டர்

Added : ஆக 13, 2021 | |
Advertisement
கடம்பத்துார்: '‛கடம்பத்துார் ரயில்வே மேம்பாலத்தை, கலெக்டர் அல்பி ஜான் வர்கீஸ், நேற்று ஆய்வு செய்து, விரைவில் திறந்து பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, தெரிவித்தார்.ரூ.14.5 கோடிதிருவள்ளூர் - பேரம்பாக்கம் நெடுஞ்சாலையில் பொதுமக்கள் வேண்டுகோள்படி, கடம்பத்துார் ரயில் நிலையத்தில், 14.5 கோடி ரூபாய் மதிப்பில், மேம்பாலம் கட்டும் பணி, 2015ல் துவங்கி,

கடம்பத்துார்: '‛கடம்பத்துார் ரயில்வே மேம்பாலத்தை, கலெக்டர் அல்பி ஜான் வர்கீஸ், நேற்று ஆய்வு செய்து, விரைவில் திறந்து பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, தெரிவித்தார்.


ரூ.14.5 கோடி

திருவள்ளூர் - பேரம்பாக்கம் நெடுஞ்சாலையில் பொதுமக்கள் வேண்டுகோள்படி, கடம்பத்துார் ரயில் நிலையத்தில், 14.5 கோடி ரூபாய் மதிப்பில், மேம்பாலம் கட்டும் பணி, 2015ல் துவங்கி, ஆறு ஆண்டுகளாக நடந்து வருகிறது. இதனால், வாகன ஓட்டிகள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி, அவதிப்பட்டு வந்தனர்.
இதுகுறித்து செய்தி வெளியானதையடுத்து, திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அல்பி ஜான் வர்கீஸ், நெடுஞ்சாலைத் துறை திட்டங்கள் கோட்டப் பொறியாளர் அருணா, உதவி கோட்டப்பொறியாளர் இளங்கோ, உதவி பொறியாளர் பிரபாகரன் மற்றும் நெடுஞ்சாலைத் துறையினருடன் ஆய்வு மேற்கொண்டார்.


நெரிசலுக்கு தீர்வு


அப்போது, கலெக்டர், நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளிடம் பணிகள் எப்போது நிறைவடையும். சுரங்கப்பாதை பணிகள் எப்போது துவங்கப்பட உள்ளது எனவும் கேட்டறிந்தார். பின், கலெக்டர் கூறுகையில், 'கடம்பத்துார் ரயில்வே மேம்பால பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளது. விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வந்து போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணப்படும்' என்றார்.
செவ்வாப்பேட்டை பகுதியில் நடந்து வரும் ரயில்வே மேம்பால பணிகளையும், கலெக்டர், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுடன் சென்று பார்வையிட்டு, ஆய்வு செய்து, பணிகள் குறித்து கேட்டறிந்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X