கொசஸ்தலை ஆற்றில் கொட்டப்பட்ட மண் அகற்றம்

Added : ஆக 13, 2021 | |
Advertisement
மீஞ்சூர்: புதிய மின் நிலையத்திற்கு நிலக்கரி கொண்டு செல்ல கன்வேயர் பெல்ட் அமைப்பதற்காக கொசஸ்தலை ஆற்றின் கால்வாய் பகுதியில் கொட்டப்பட்ட மண், மீனவர்களின் தொடர் போராட்டத்தை தொடர்ந்து, அகற்றப்பட்டு வருகிறது.மீஞ்சூர் அடுத்த, ஊரணம்பேடு பகுதியில், அமைந்து வரும் வடசென்னை அனல் மின் நிலையத்தின், 4வது நிலைக்கு, எண்ணுார் துறைமுகத்தில் இருந்து, கன்வேயர் பெல்ட் மூலம், நிலக்கரி

மீஞ்சூர்: புதிய மின் நிலையத்திற்கு நிலக்கரி கொண்டு செல்ல கன்வேயர் பெல்ட் அமைப்பதற்காக கொசஸ்தலை ஆற்றின் கால்வாய் பகுதியில் கொட்டப்பட்ட மண், மீனவர்களின் தொடர் போராட்டத்தை தொடர்ந்து, அகற்றப்பட்டு வருகிறது.

மீஞ்சூர் அடுத்த, ஊரணம்பேடு பகுதியில், அமைந்து வரும் வடசென்னை அனல் மின் நிலையத்தின், 4வது நிலைக்கு, எண்ணுார் துறைமுகத்தில் இருந்து, கன்வேயர் பெல்ட் மூலம், நிலக்கரி கொண்டு செல்லப்பட உள்ளது. இதற்கான கட்டுமான பணிகள் நடைபெறும் நிலையில், காட்டுப்பள்ளி அருகே உள்ள புழுதிவாக்கம் கிராமத்தில், கொசஸ்தலை ஆற்றின் ஒரு பகுதியான கோனமுடக்கு கால்வாய், மண் கொட்டி மூடப்பட்டது.விதிகளை மீறி கன்வேயர் பெல்ட் அமைக்கும் பணிகளுக்கு, மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.


பில்லர் அமைப்பதற்காகவே மண் கொட்டப்பட்டு உள்ளது. அப்பணிகள் முடிந்தவுடன் மண்ணை அகற்றி விடுவோம் என, மின் நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். மீன் வளம் பாதிக்கும், அலையாத்தி காடுகள் அழியும் எனவும், வாழ்வாதாரம் பாதிப்பிற்கு உள்ளாகும் எனக்கூறி, எண்ணுார் காட்டுகுப்பம் மீனவர்கள் பல்வேறு போராட்டங்களிலும் ஈடுபட்டனர்.


தமிழக அரசின் கவனத்திற்கும் கொண்டு செல்லப்பட்டது.மீனவர்களின் போராட்டத்தின் எதிரொலியாக, மேற்கண்ட கால்வாய் பகுதியில் கொட்டப்பட்ட மண்ணை, பொக்லைன் இயந்திரங்கள் மூலம், அகற்றும் பணிகள், இரண்டு தினங்களாக நடைபெற்று வருகிறது. கன்வேயர் பெல்ட் மாற்று வழித்தடத்தில் கொண்டு செல்வதற்கான ஆய்வு செய்யப்பட உள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X