10 சதவீத ரிசர்வ் சைட்டுக்கு பதிலாக பணம் கட்டும் திட்டம்; வேலுமணி உத்தரவு திரும்பப்பெறப்படுமா?

Updated : ஆக 13, 2021 | Added : ஆக 13, 2021 | கருத்துகள் (6)
Advertisement
புதிய 'லே-அவுட்'களில், 10 சதவீத பொது ஒதுக்கீட்டு இடத்துக்குப் பதிலாக பணம் செலுத்தினால் போதுமென்று, கடந்த ஆட்சியில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை திரும்பப் பெற வேண்டுமென்ற கோரிக்கை வலுத்துள்ளது.கடந்த அ.தி.மு.க., ஆட்சியின்போது, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சராக வேலுமணி இருந்தார். நகர ஊரமைப்புத்துறையின் அதிகாரத்தைப் பறிக்கும் வகையில், அவருடைய
Velumani, ADMK, reserve site

புதிய 'லே-அவுட்'களில், 10 சதவீத பொது ஒதுக்கீட்டு இடத்துக்குப் பதிலாக பணம் செலுத்தினால் போதுமென்று, கடந்த ஆட்சியில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை திரும்பப் பெற வேண்டுமென்ற கோரிக்கை வலுத்துள்ளது.

கடந்த அ.தி.மு.க., ஆட்சியின்போது, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சராக வேலுமணி இருந்தார். நகர ஊரமைப்புத்துறையின் அதிகாரத்தைப் பறிக்கும் வகையில், அவருடைய துறையின் சார்பில் பல்வேறு அரசாணைகள் பிறப்பிக்கப்பட்டன. குறிப்பாக, 2019ம் ஆண்டில், ஒருங்கிணைந்த கட்டட வளர்ச்சி விதிகள் கொண்டு வரப்பட்டதில், இந்த எல்லை மீறல் பகிரங்கமாக நடந்தது. நகர ஊரமைப்புச் சட்டத்தின்படியும், 1992 ஆக.20ல் போடப்பட்ட அரசாணை:222ன் படியும் 2500 சதுர மீட்டருக்கு அதிகமான பரப்பில் அமைக்கப்படும் அனைத்து லே-அவுட்களுக்கும், அதன் மொத்தப்பரப்பில் 10 சதவீத இடத்தை பொது ஒதுக்கீட்டு இடமாக (ரிசர்வ் சைட்) ஒதுக்கவேண்டுமென்பது கட்டாயமாக இருந்தது.

இந்த இடங்களை தானப்பத்திரம் மூலமாக, சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்பிடம் ஒப்படைத்த பின்பே, அந்த லே-அவுட்டுக்கு திட்ட அனுமதி வழங்கப்படும். பூங்கா, விளையாட்டு மைதானம், சமுதாயக்கூடம் போன்றவற்றை அமைக்க இந்த இடம் பயன்படுத்தப்படும். பெருநகரங்களில், நுரையீரல் போல செயல்பட்டு மக்களுக்கு உதவுவது இந்த இடங்கள்தான். இந்த இடங்களை எந்தப்பயன்பாட்டுக்கு ஒதுக்கப்பட்டதோடு, அதற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்பதற்கு சுப்ரீம் கோர்ட் மற்றும் ஐகோர்ட்களின் உத்தரவுகள் நிறையவுள்ளன.


latest tamil news




சூழலுக்கு ஆபத்து


'லே-அவுட்'களில் 10 சதவீத இடங்களை விட வேண்டியதில்லை; அதற்குப் பதிலாக பணம் செலுத்தினால் போதுமென்று ஒருங்கிணைந்த கட்டட வளர்ச்சி விதிகளில் தளர்வு வழங்கப்பட்டது. அதாவது, 3,000 சதுர மீட்டருக்கு உட்பட்ட லே-அவுட்களுக்கு, திறந்தவெளியிடம் ஒதுக்க வேண்டியதில்லை என்று அந்த விதிகளில் அனுமதி வழங்கப்பட்டது.

அது மட்டுமின்றி, 3000 சதுர மீட்டரிலிருந்து 10 ஆயிரம் சதுர மீட்டர் வரையிலான பரப்பிலான திட்டங்களுக்கு, 10 சதவீத இடத்தை ஒதுக்கலாம்; அல்லது அந்த 10 சதவீத நிலத்துக்கான வழிகாட்டி மதிப்பை, அரசுக்குச் செலுத்தினால் போதும். அதிலும் ஒரு சலுகையாக, 10 ஆயிரம் சதுர மீட்டரில் 3,000 சதுர மீட்டரைக் கழித்து, 7,000 சதுர மீட்டரில் 10 சதவீத இடத்தை ஒதுக்கினால் போதும் அல்லது அதற்கான வழிகாட்டி மதிப்பைச் செலுத்தினால் போதுமென்றும் அந்த விதிகளில் கூறப்பட்டது.

பெருநகரங்களில் 10 சதவீத இடத்துக்கான வழிகாட்டி மதிப்பை ஒப்பிடுகையில், சந்தை மதிப்பு மிக அதிகமாக இருக்கும் என்பதால், இந்த விதிமுறைகள் வந்தபின், பெரும்பாலான புரமோட்டர்கள் இந்த 10 சதவீத இடத்தை ஒதுக்குவதேயில்லை. அதற்குப் பதிலாக குறைந்த தொகையை அரசுக்குச் செலுத்தி விட்டு, சந்தை மதிப்பில் அந்த நிலத்தை விற்று பெரும் லாபம் பார்க்கின்றனர்.

இதற்காகவே ஒரே நிலத்தை நான்கு திட்டங்களாகப் பிரித்து லே-அவுட் அமைக்கின்றனர். உதாரணமாக, 10 ஏக்கர் பரப்பில் லே-அவுட் போட்டால், ஒரு ஏக்கர் ரிசர்வ் சைட் ஒதுக்க வேண்டும். அதையே நான்காகப் பிரித்து திட்ட அனுமதி வாங்கிவிட்டால் ஒதுக்கவே வேண்டியதில்லை. இதே நிலைமை நீடித்தால், இன்னும் சில ஆண்டுகளில் எந்த நகரத்திலும் பூங்கா, விளையாட்டு மைதானத்துக்கு இடமே இருக்காது.

தற்போது, பூங்கா உள்ளிட்ட பொது ஒதுக்கீட்டு இடங்களில்தான் மரங்கள் வளர்க்கப்படுகின்றன. இந்த இடங்கள் இல்லாதபட்சத்தில், அனைத்து இடங்களும் வீடுகளாக மாறி, கான்கிரீட் காடாக நகரங்கள் மாறிவிடும். எனவே, இந்த விதிகளில் மாற்றம் செய்து, 10 சதவீத பொது ஒதுக்கீட்டு இடங்கள் ஒதுக்குவது கட்டாயம் என்ற நிலையை அரசு உருவாக்க வேண்டும். சூழலியல் கோணத்தில் இப்படியொரு உத்தரவை அனுமதிக்கவே கூடாது.

-நமது சிறப்பு நிருபர்-

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
PKN - Chennai,இந்தியா
13-ஆக-202111:56:22 IST Report Abuse
PKN இது. ஒரு சாம்பிள் இது மட்டுமல்ல ஓடை ஆக்கிரமிப்பு / ஏரி ஆக்கிரமிப்பு இன்னீம் நிறைய முறைகெடுகள் நடந்துள்ளன அதிசயமாக இருக்கிறது அஇஅதிமுக பஜக கூட்டணி அரசின் வில்லங்களை எடுத்து வைப்பது
Rate this:
Cancel
Sivagiri - chennai,இந்தியா
13-ஆக-202110:51:48 IST Report Abuse
Sivagiri அவர்களுக்கு அவ்வளவு மூளை திறமை எல்லாம் கிடையாது
Rate this:
Cancel
Manithan - Tirupur,இந்தியா
13-ஆக-202110:44:17 IST Report Abuse
Manithan வழித்தடமும் ரிசர்வ் சைட்டும் ஒவ்வொரு லேவுட்களின் உயிர் நாடி... குறைந்தது முப்பது அடி அகல முக்கிய சாலை, இருபத்தி ஐந்து அடி குறுக்கு சாலை மற்றும் பத்து சதவீத ரிசர்வ் சைட்டும் அந்த லேவுட்களின் வாழ்நாளை மட்டுமல்ல, அதில் வாழும் மக்களின் வாழ்நாளை என்றுமே காக்கும்....சாலைகள் அகலமாக இருப்பதால் மரம் நடுதல், மின் கம்பங்கள், குடிநீர் மற்றும் சாக்கடை வசதி, என அனைத்து வசதிகளையும் மக்கள் என்றுமே பெற முடியும்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X