அரசின் கடன் சுமை அதிகரிப்பால் வேளாண் பட்ஜெட் திட்டங்கள் குறைப்பு?

Updated : ஆக 13, 2021 | Added : ஆக 13, 2021 | கருத்துகள் (6) | |
Advertisement
சென்னை : அரசின் கடன் சுமை அதிகரித்துள்ளதால், நிதித் துறையால் வேளாண் பட்ஜெட்டில் பல்வேறு திட்டங்கள் குறைக்கப்பட்டு உள்ளன. விவசாயிகளின் நீண்ட கால கோரிக்கையை ஏற்று, வேளாண் துறைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்ய, அரசு முடிவெடுத்துள்ளது.சட்டசபையில் இன்று பொது பட்ஜெட்டும், நாளை வேளாண் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட உள்ளன. வேளாண் பட்ஜெட் தயாரிப்பிற்காக, விவசாயிகள், வேளாண்
TN budget, Agri Budget, Budget

சென்னை : அரசின் கடன் சுமை அதிகரித்துள்ளதால், நிதித் துறையால் வேளாண் பட்ஜெட்டில் பல்வேறு திட்டங்கள் குறைக்கப்பட்டு உள்ளன. விவசாயிகளின் நீண்ட கால கோரிக்கையை ஏற்று, வேளாண் துறைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்ய, அரசு முடிவெடுத்துள்ளது.

சட்டசபையில் இன்று பொது பட்ஜெட்டும், நாளை வேளாண் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட உள்ளன. வேளாண் பட்ஜெட் தயாரிப்பிற்காக, விவசாயிகள், வேளாண் வல்லுனர்கள் உள்ளிட்டோரிடம் கருத்துகள் கேட்கப்பட்டன. மாவட்ட வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் பொறியியல், வேளாண் வணிகப்பிரிவு அதிகாரிகளும் பல்வேறு திட்டங்களை தெரிவித்தனர்.


latest tamil newsஇந்த கருத்துகளின் அடிப்படையில் இரவு, பகலாக பணியாற்றி, பல்வேறு திட்டங்களுக்கு வேளாண் துறை உயர் அதிகாரிகள் இறுதி வடிவம் கொடுத்துள்ளனர். இந்த திட்டங்கள், விவசாயிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெறும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், அரசின் கடன் சுமை அதிகரித்துள்ளதை காரணம் காட்டி, பல திட்டங்களை இப்போது செயல்படுத்த வாய்ப்பில்லை என, நிதித் துறை உயர் அதிகாரிகள் மறுத்துள்ளனர்.

பல திட்டங்களை பட்ஜெட்டில் இடம்பெற அவர்கள் அனுமதிக்கவில்லை. 'அடுத்த பட்ஜெட்டில் பார்த்துக் கொள்ளலாம்' எனக் கூறியுள்ளனர். இதனால், வேளாண் துறையினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Advertisement
வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sriram V - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
13-ஆக-202115:58:43 IST Report Abuse
Sriram V Farmers enjoy the benefits
Rate this:
Cancel
N.Purushothaman - Cuddalore,மலேஷியா
13-ஆக-202109:45:51 IST Report Abuse
 N.Purushothaman இந்த ஆண்டு வேளாண் உற்பத்தி மற்றும் விளை பொருட்களை அதிகம் ஏற்றுமதி செய்து உலக வரலாற்றிலேயே இந்தியா முதல் முதலாக முதல் பத்து இடங்களுக்குள் வந்துள்ளது ....அதாவது இந்தியா ஒரு விவசாய நாடுன்னு பீத்திக்கிட்டோமே தவிர ஏற்றுமதியில் முதல் பத்து இடங்களுக்குள் வருவதற்கு நமக்கு எழுபத்தைந்து ஆண்டுகள் எடுத்துள்ளது... அதுவும் பா .ஜ அரசால் இந்த மைல்கல்லை எட்ட முடிந்துள்ளது...விரைவில் முதலிடத்திற்கு வர வேண்டும் ...அதற்கான தகுதியையும் விவசாய பொருட்களின் உற்பத்தி தரத்தையும் சர்வதேச தர அளவிற்கு கொண்டு செல்ல வேண்டும் ...அதுவும் நடந்து கொண்டு இருக்கிறது ... சரியானவர்களுக்கு சரியான உதவி சென்றால் அவர்களால் சாதிக்க முடியும் என்பதற்கு இது ஒரு சான்று ...மாநிலங்கள் மத்திய அரசுடன் இணைந்து செயல்பாட்டால் இன்னும் பல சாதனைகளை நாம் எட்டலாம் ...
Rate this:
Cancel
ram -  ( Posted via: Dinamalar Android App )
13-ஆக-202108:38:35 IST Report Abuse
ram தேவையற்ற இலவசங்களை வாரிவழங்கும் வீனாப்போன ஆளுமையில்லாதவங்க கைககளில் இந்த நாடு இருக்கும் வரை மக்கள் கடணாளிதான்.. இந்த ஆளுமையற்ற அரசியல்வாதிங்க மக்கள் பணத்தை சுரண்டி திண்ணு கொழுப்பவங்க இருக்கும் வரை நாடு உறுப்படாது...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X