ரூ.2.63 லட்சம் கடனுக்கு தி.மு.க.,வே காரணம்| Dinamalar

'ரூ.2.63 லட்சம் கடனுக்கு தி.மு.க.,வே காரணம்'

Updated : ஆக 13, 2021 | Added : ஆக 13, 2021 | கருத்துகள் (53) | |
திண்டுக்கல் : 'ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் ரூ.2.63 லட்சம் கடனுக்கு தி.மு.க., தான் காரணம்' என, பா.ஜ., சிறுபான்மை பிரிவு தேசிய செயலாளர் வேலுார் இப்ராஹிம் கூறினார்.திண்டுக்கல்லில் அவர் கூறியது: பா.ஜ., அனைத்து மக்களையும் சமமாக கருதும் கட்சி. முஸ்லிம்கள், கிறிஸ்தவர்களிடையே நம்பிக்கையை பெற்று வருகிறது.பார்லிமென்டில் எதிர்க்கட்சிகள் ஜனநாயக வரம்பை மீறி நடந்து கொண்டது
DMK, Vellore Ibrahim, BJP

திண்டுக்கல் : 'ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் ரூ.2.63 லட்சம் கடனுக்கு தி.மு.க., தான் காரணம்' என, பா.ஜ., சிறுபான்மை பிரிவு தேசிய செயலாளர் வேலுார் இப்ராஹிம் கூறினார்.

திண்டுக்கல்லில் அவர் கூறியது: பா.ஜ., அனைத்து மக்களையும் சமமாக கருதும் கட்சி. முஸ்லிம்கள், கிறிஸ்தவர்களிடையே நம்பிக்கையை பெற்று வருகிறது.பார்லிமென்டில் எதிர்க்கட்சிகள் ஜனநாயக வரம்பை மீறி நடந்து கொண்டது கண்டிக்கத்தக்கது.


latest tamil news



முன்னாள் அமைச்சர் வேலுமணி வீட்டில் நடத்திய சோதனை அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை. முஸ்லிம்களை மூளைச் சலவை செய்து பயங்கரவாத சக்திகள் தவறான வழியில் வழிநடத்தி செல்கின்றன. சிறுபான்மையினர் ஓட்டுக்காக அந்த மக்கள் மத்தியில் ஊடுருவியுள்ள தீவிரவாத சக்திகளை கண்டு கொள்ளாமல் விட்டால் தமிழகம் ஆபத்தை சந்திக்கும்.

குடும்ப தலைவிக்கு மாதம் ரூ.1000, நீட் தேர்வு ரத்து வாக்குறுதிகளை தி.மு.க., நிறைவேற்றவில்லை. அத்தியாவசிய பொருட்கள் விலை அதிகரித்துள்ளது. ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் ரூ.2.63 லட்சம் கடன் இருக்கிறது என்றால் இதற்கு 90 சதவீதம் தி.மு.க., தான் காரணம். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X