ஆத்தூர் பெண்ணுடன் பிரதமர் மோடி பேச்சு

Added : ஆக 13, 2021 | கருத்துகள் (56) | |
Advertisement
புதுடில்லி: மகளிர் சுய உதவி குழுவினருடன் 'வீடியோ கான்பரன்ஸ்' முறையில் பிரதமர் மோடி பேசினார். அப்போது நாடு முழுதும் உள்ள நான்கு லட்சம் சுய உதவி குழுக்களுக்கு 1,625 கோடி ரூபாய் உதவிகளை அவர் வெளியிட்டார்.நிகழ்ச்சியில், திண்டுக்கல் மாவட்டம் ஆத்துார் அருகே என். பஞ்சம்பட்டி ஊராட்சியில் திடக்கழிவு மேலாண்மை மூலம் பாலிதீன் மறுசுழற்சி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள மகளிர்
PM Modi, Modi, ஆத்தூர் பெண்

புதுடில்லி: மகளிர் சுய உதவி குழுவினருடன் 'வீடியோ கான்பரன்ஸ்' முறையில் பிரதமர் மோடி பேசினார். அப்போது நாடு முழுதும் உள்ள நான்கு லட்சம் சுய உதவி குழுக்களுக்கு 1,625 கோடி ரூபாய் உதவிகளை அவர் வெளியிட்டார்.

நிகழ்ச்சியில், திண்டுக்கல் மாவட்டம் ஆத்துார் அருகே என். பஞ்சம்பட்டி ஊராட்சியில் திடக்கழிவு மேலாண்மை மூலம் பாலிதீன் மறுசுழற்சி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள மகளிர் கூட்டமைப்பு மேலாளர் ஜெயந்தி குழுவினரும் பங்கேற்றனர்.

இதில், ஜெயந்தி பேசியதாவது: கடந்த 2010ல் 5 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் துவங்கிய பாலிதீன் கழிவு மறுசுழற்சி மையத்தில் 36 பேர் வேலை பார்க்கின்றனர். 1 கிலோ ஐந்து ரூபாய்க்கு பாலிதீன் கழிவுகளை வாங்கி மதிப்பு கூட்டுப் பொருட்களாக உற்பத்தி செய்கிறோம். கடந்த ஓராண்டில் மட்டும் 32 டன் பாலிதீன் கழிவுகளை சேகரித்து, அரசின் தார் ரோடு பணிக்கு கொடுத்துள்ளோம். நிரந்தர வேலை, வருவாய் வாய்ப்பு கிடைத்துள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.


latest tamil news



வணக்கம் என்று தமிழில் கூறி பிரதமர் மோடி பேசுகையில், ''வாழ்வாதாரம், வேலைவாய்ப்பு, வருமான நோக்கு மட்டுமின்றி சமூகம் சார்ந்த அக்கறையுடன் பணியை மேற்கொள்வதற்கு பாராட்டுகள். ''இதை, சமுதாயத்துடன் இணைந்த வளர்ச்சி சார்ந்த செயல்பாடுகளாக முன்னேற்றம் பெற செய்ய வேண்டும். ''மகளிர் அனைவரும் தொழில் வாய்ப்புகளை தேடி கற்க வேண்டும். தொழில் நுட்பங்களை நேரடி களப் பயிற்சி மூலம் கற்பதால் சாதனை எளிதாகும். ''வருவாய் மட்டுமின்றி, சமுதாய நோக்கோடு தொழிலை மேம்படுத்த முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்,'' என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (56)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
13-ஆக-202113:56:43 IST Report Abuse
தமிழவேல் ஒவவ்வொரு மாநிலத்திலேயும் இதுபோல ஓரிருவர் இருக்கத்தான் செய்யும். அவர்களைத் தேடிப்போய் பேசுவது பெயருக்கு உதவும். ஆனால், பத்திரிகை நிருபர்கள் மட்டும், தீண்டாத தகாதவர்கள். காரணம், அனைத்துமே அவர் பின்னால் இருந்து நடத்துபவர்களால் வருவது. தானாக இயங்க முடியாது, இயலாது.
Rate this:
RAMAKRISHNAN NATESAN - LAKE VIEW DR, TROY 48084,யூ.எஸ்.ஏ
14-ஆக-202107:52:12 IST Report Abuse
RAMAKRISHNAN NATESANஊடகங்களை உன்னுடைய காங்கிரஸ் கையில் வைத்துள்ளது அதனால் ஊடகங்களுக்கு பதில் சொல்லத்தேவையில்ல...
Rate this:
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
14-ஆக-202119:08:15 IST Report Abuse
தமிழவேல் கையாலாகாத்தனம்....
Rate this:
Cancel
Siva - Aruvankadu,இந்தியா
13-ஆக-202113:02:14 IST Report Abuse
Siva ஆனால் ஓட்டு போடும் போது பாரத பிரதமர் போன்ற திறமை மிக்கவர்களை மறந்து காசு தரும் களவாணி களுக்கு போட்டு விடுவார்கள்..
Rate this:
Cancel
Ganesh -  ( Posted via: Dinamalar Android App )
13-ஆக-202113:00:45 IST Report Abuse
Ganesh ஜெய்ஹிந்த். வாழ்த்துக்கள்.எதிர்கட்சிகள் ஏதாவது பேசிக்கிட்டு தான் இருப்பார்கள்.சிறந்த கொள்கைகள் தொடர்ந்து செயல்படுங்கள்.நாடு முன்னேறும்.
Rate this:
13-ஆக-202119:22:59 IST Report Abuse
தர்மராஜ் தங்கரத்தினம்எப்படி CORPORATE காரன் தான் முன்னேறி விட்டான் .ரிலையன்ஸ் JIO வளர BSNK முடக்கம் / ரிலையன்ஸ் PETROLEUM வளர BPCL முடக்கம் / ரிலையன்ஸ் insurance வளர LIC முடக்கம் / ரிலையன்ஸ் GAS வளர ONGC முடக்கம் / ரிலையன்ஸ் defence வளர HAL முடக்கம் , இப்போ சொல்லுங்கள் யார் இந்தியாவின் உண்மையான பிரதமர் மோடியா இல்லை அம்பானியா...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X