வெள்ளி முதல் வியாழன் வரை ( 13.8.2021- 19.8.2021) இந்த வாரம் எந்த ராசிக்கு என்ன பலன். உங்கள் ராசிக்கான பலனும் இந்த வாரம் செய்ய வேண்டிய பரிகாரமும் காணுங்கள்.
மேஷம்
புதன். குரு சாதக நிலையில் உள்ளனர். விநாயகர் வழிபாடு நலம் அளிக்கும்
அசுவினி: சுப செலவுகள் ஏற்படும். புதிய மாற்றங்கள் முன்னேற்றத்தைக் கொடுக்கும். அரசுத் துறையில் உள்ளவர்களுக்கு நன்மை நடைபெறும். நீங்கள் விரும்பிய இடத்தில் நல்ல வேலை கிடைக்கும்.
பரணி: தேவையற்ற விஷயங்களில் தலையிட வேண்டாம். உணவும், உறக்கமும் நல்ல முறையில் இருக்கும். உறவினர் தொடர்பு மகிழ்ச்சியளிக்கும். செல்வமும், செல்வாக்கும் கூடும்.
கார்த்திகை, 1ம் பாதம்: பணவரவு அதிகமாக இருக்கும். பிள்ளைகளின் வழியில் சுப செலவுகளும் ஏற்படும். உஷ்ண தொடர்பான நோய் வரலாம். வேலை பார்க்கும் இடத்தில் தற்பெருமை கொள்ளாமல் பொறுப்புடன் செயல்படுங்கள்.
சந்திராஷ்டமம்: 15.8.2021 இரவு 11:28 மணி - 17.8.2021 இரவு 1:48 மணி
ரிஷபம்
புதன், சுக்கிரன், சந்திரனால் நற்பலன் உண்டு. மகாலட்சுமி வழிபாடு பலம் தரும்.

கார்த்திகை 2,3,4: சுய தொழில் செய்பவர்களுக்கு லாபம் அதிகரிக்கும். பணத்தை இந்த மாதம் எதிலும் முதலீடு செய்ய வேண்டாம். பங்கு வர்த்தக முதலீடுகளைத் தவிர்த்து விடுங்கள். சகோதரவழியில் உதவி கிடைக்கும்.
ரோகிணி: எதிர்பாராத திருப்பங்கள் ஏற்படும். உங்களின் முயற்சிக்கு ஏற்றபடி வெற்றிகள் தேடி வரும். புகழும் பெருமையும் வந்து சேரும். கவலைகளைக் குறைக்கும்படியான நல்லவர்களின் சந்திப்புகள் நிகழும்.
மிருகசீரிடம் 1,2: பணியில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. குழந்தைகள் நலனில் ஆர்வம் கூடும். வாகன பயணத்தில் மிதவேகம் பின்பற்றவும்.
சந்திராஷ்டமம்: 17.8.2021 இரவு 1:49 மணி - 20.8.2021 அதிகாலை 4:44 மணி
மிதுனம்
ராகு, கேது, செவ்வாய், சுக்கிரனால் நன்மை சேரும்.சனீஸ்வரர் வழிபாடு நன்மை தரும்.
மிருகசீரிடம் 3,4: கடினமான வேலையைக் கூட சுறுசுறுப்பாகவும் ஆர்வமாகவும் செய்வீர்கள். எந்தச் சூழ்நிலையிலும் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. வீண் கவலைகள் குறையும். வெளிநாட்டுத் தொடர்பு மகிழ்ச்சி தரும்.
திருவாதிரை: குடும்பத்தில் இருந்த பிரச்னை நீங்கும். அனைவரையும் அரவணைத்துச் செல்வது அவசியம். பிள்ளைகளின் தேவையறிந்து நிறைவேற்றுவீர்கள். உறவினர் வீட்டு சுபவிசேஷங்களுக்கு சென்று மகிழ்வீர்கள்.
புனர்பூசம், 1,2,3: சுபவிஷயங்களுக்கான முன்னேற்பாட்டில் ஈடுபடுவீர்கள். உடல்நிலை திருப்தியளிக்கும். எதிலும் அவசர முடிவு எடுப்பதை தவிருங்கள். தொழில் வியாபாரத்தில் ஆதாயம் கூடுதலாகும். பணிச்சுமை குறையும்.
கடகம்
புதன், சுக்கிரன், சந்திரன் நன்மை தருவர்.குரு வழிபாடு துன்பம் போக்கும்.
புனர்பூசம்4: வேறு வேலைக்கு முயற்சிப்பவர்கள் பொறுமை காப்பது நல்லது. பெண்களுக்கு எதிர்பார்ப்பு நிறைவேறும். குடும்பத்தில் சுபவிஷய பேச்சில் சுமுகமான முடிவு கிடைக்கும்.
பூசம்: கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்பு தேடி வரும். சிக்கலான விஷயங்களில் உடனடி முடிவு எடுக்க முடியாமல் தடுமாற்றம் அடையலாம். திடீர் மருத்துவ செலவு ஏற்பட்டாலும் ஓரளவு சமாளிப்பீர்கள்.
ஆயில்யம்: பணியாளர்கள் வேலையில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும். புதிய வேலைக்கு முயற்சிப்பவர்களுக்கு நிதானம் தேவை. உறவினர்களின் வருகையால் செலவு அதிகரிக்கும்.
சிம்மம்
குரு, புதன், சூரியன் அதிர்ஷ்டம் அளிப்பர். சனீஸ்வரர் வழிபாடு சங்கடம் தீர்க்கும்.

மகம்: சக பணியாளர்களிடம் கருத்து வேற்றுமை உண்டாகலாம். பிள்ளைகளி்ன் தேவையறிந்து நிறைவேற்றுவீர்கள். உறவினர்களிடம் ஏற்பட்ட வருத்தம் மறையும்.
பூரம்: குடும்பத்தில் சுப விஷயங்களுக்கான ஏற்பாடு நடக்கும். நிதானமாக செயல்பட்டு நன்மை அடைவீர்கள் கலைத்துறையினர் தீர ஆலோசித்து புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடவும்.
உத்திரம்1: எந்த விஷயத்திலும் அவசரம் காட்டுவீர்கள். நிதானமுடன் செயல்படுவது அவசியம். வீண் வாக்குவாதத்தை தவிர்க்கவும். அரசியல்வாதிகளுக்கு நன்மையான வாரம் இது.
கன்னி
குரு, சந்திரன் புதன் அனுகூலமாக உள்ளனர்.காமாட்சி வழிபாடு வளம் தரும்.
உத்திரம் 2,3,4: பிள்ளைகளின் வழியில் ஏற்பட்ட கவலை நீங்கும். நல்லவர்களின் நட்பால் நன்மை நடக்கும். மாணவர்களுக்குக் கல்வித்தடை அகலும். சேமிக்கும் விதத்தில் வருமானம் வரும்.
அஸ்தம்: பணியில் கூடுதல் ஆர்வம் பிறக்கும். இப்போதைக்கு எல்லோரையும் அனுசரித்து செல்லுங்கள். அதுவே நிம்மதிக்கு வழிவகுக்கும். குடும்பத்தில் பிரச்னை தலைதுாக்காதபடி திறம்பட சமாளிப்பீர்கள்.
சித்திரை 1,2: தள்ளிப்போன திருமண வாய்ப்புகள் தேடி வரும். பணியில் இருந்த நெருக்கடிகள் நீங்கும். கற்பனை பயம் அகலும். பணவிஷயத்தில் யாரையும் நம்பாமல் எச்சரிக்கையுடன் இருங்கள்.
துலாம்
குரு, புதன், சூரியனால் கூடுதல் நற்பலன்களை தருவர்.மகாலட்சுமி வழிபாடு சுபிட்சம் அளிக்கும்.
சித்திரை 3,4: பெண்களின் அழகும், பொலிவும், அறிவுத்திறனும் கூடும். நண்பர்கள் நன்மை செய்யக் காத்திருப்பர். உயர் அதிகாரிகளின் ஆதரவால் பணியில் இருந்த கடுமை குறையும்.
சுவாதி: நல்லவர்களின் அறிமுகத்தால் நன்மை காண்பீர்கள். கவனச் சிதறல்களால் பணியில் ஆர்வம் குறையலாம் கவனம். பெற்றோரின் தேவையறிந்து நிறைவேற்றுவீர்கள்.
விசாகம் 1,2,3: சிலருக்கு எதிர்பாராத பிரச்னை குறுக்கிடலாம். ஆன்மிக ஈடுபாட்டுடன் அமைதியை பாதுகாப்பீர்கள். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். ஆடை, ஆபரணம் சேரும்.
விருச்சிகம்
சூரியன், சந்திரன், குரு நற்பலனைத் தருவர்.முருகன் வழிபாடு வளம் தரும்.
விசாகம் 4: பிடித்தமான உணவுகளை சாப்பிடுவீ்ர்கள். தொழில் விஷயமாக புதிய திட்டங்களை தீட்டுவீர்கள். எடுத்த முயற்சிகள் வெற்றிகரமாக முடியும்
அனுஷம்: பிரமாதமான வாரம் என்று சொல்வதற்கில்லை என்றாலும் விடாமுயற்சியால் நன்மைகளைத் தக்க வைத்துக் கொள்வீர்கள். வங்கிக்கடன் எதிர்பார்ப்பவர்களுக்கு இயல்பாகக் கிடைக்கும்.
கேட்டை: வியாபாரிகள் வாடிக்கையாளரின் விருப்பத்தை நிறைவேற்றுவர். பணியாளர்கள் அதிகாரிகளின் குறிப்பறிந்து செயல்படுவ்ர. அரசின் கெடுபிடிகள் குறையும். பக்தி மார்க்கத்தில் ஈடுபடுவீர்கள்.
தனுசு
சந்திரன், ராகு, புதன் தாராள நற்பலன் வழங்குவர்.குருவாயூரப்பன் வழிபாடு நல்லது.
மூலம்: பணிச்சுமை அதிகரிக்கும். எதிர்பார்த்த இடத்திலிருந்து பணம் வந்து சேரும். கடந்த கால முயற்சிக்கான நற்பலன் கிடைக்கும்.
பூராடம்: எதிர்பார்த்த நற்செய்தி வந்து சேரும். தயாள குணத்துடன் பிறருக்கு உதவுவீர்கள். ஆன்மிக சிந்தனை மேலோங்கும். பணியிடத்தில் செல்வாக்கு அதிகரிக்கும்.
உத்திராடம்1: நிதி நிலைமையில் இருந்த மந்த நிலை மறையும். திட்டமிட்ட பயணங்கள் தள்ளிப் போகும். வாழ்க்கையில் முன்னேற்றத்துக்கான புதிய வழிகள் புலப்படும்.
மகரம்
குரு, கேது, சந்திரனால் நன்மை கிடைக்கும்.சூரியன் வழிபாடு வளம் தரும்.
உத்திராடம் 2,3,4: பணவரவு எதிர்பார்த்த அளவு இருக்கும். இயந்திரப் பணியாளர்கள் கவனமாக இருப்பது நல்லது. பொருளாதார நிலை மேம்படும். தள்ளிப்போன சுப நிகழ்ச்சிகள் நடைபெறும்
திருவோணம்: திட்டமிட்ட பயணம் செல்ல முடியாத சூழல் உருவாகும். வீண்பயம் மறைந்து தைரியம் அதிகரிக்கும். எதையும் நியாயமான முறையில் அணுகி வெற்றி பெறுவீர்கள்.
அவிட்டம் 1,2: எதிர்பார்த்த ஆதாயம் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். வங்கிக் கடன்கள் கிடைக்கும் வாய்ப்புண்டு. அரசாங்கத்தின் மூலம் நன்மை கிடைக்கும். பணியாளர்களுக்கு வேலைப்பளு கூடும். ஆனால் பாராட்டு பெறுவீர்கள்
கும்பம்
புதன், சந்திரன், செவ்வாயால் நன்மை கிடைக்கும்.பெருமாள் வழிபாடு சுபிட்சம் தரும்.
அவிட்டம் 3,4: வாகன வசதிகள் அதிகரிக்கும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்த தடை, தாமதம் நீங்கும். மாணவர்களுக்குப் படிப்பிலோ, பணியாளர்களுக்குப் பணியிலோ ஆர்வம் குறைய அனுமதிக்காதீர்கள்.
சதயம் : ஆன்மிக ஈடுபாட்டால் மனக்கவலை மறையும். எண்ணங்கள் ஈடேறும் என சொல்வதற்கு இல்லை. எனினும் சீரான வளர்ச்சியும் முன்னேற்றம் ஏற்படும்.
பூரட்டாதி1,2,3: தடை தாமதம் தவிர்க்க முடியாததாகும். பொதுப்பணி செய்பவர்களுக்குச் சமூகத்தில் நல்ல புகழும், கவுரவமும் உண்டாகும். பிள்ளைகளால் நன்மை ஏற்படும்.
சந்திராஷ்டமம்: 13.8.2021 காலை 6:00 மணி - இரவு 8:48 மணி
மீனம்
ராகு, புதன், சனி அதிர்ஷ்ட பலன் வழங்குவர்.தட்சிணாமூர்த்தி வழிபாடு வினை தீர்க்கும்.
பூரட்டாதி 4: கவனமாக செயல்பட்டால் திட்டங்கள் அனைத்தும் குழப்பம் இன்றிக் கச்சிதமாக நிறைவேறும். முன்னேற்றம் ஏற்பட சற்றே மெனக்கெட வேண்டியிருக்கும். திடீர் செலவு குறுக்கிடும்.
உத்திரட்டாதி: பணமுடக்கம் ஏற்படலாம். தொழிலில் எதிர்பார்ப்பு நிறைவேற சற்று தாமதமாகும். புதிய நபர்களிடம் மிகுந்த எச்சரிக்கையுடன் இருத்தல் அவசியம். சிலருக்கு வீண் அலைச்சல் ஏற்படுத்திய விஷயங்கள் நல்ல முறையில் முடியும்.
ரேவதி: தொழில் முன்னேற்றம் ஏற்படும். வார ஆரம்பத்தில் பணவரவு தாமதப்படும். உறவினர்கள் நீங்கள் எதிர்பார்த்ததைவிட அதிக நெருக்கம் காட்டுவர். மகிழ்ச்சிக்குக் குறைவிருக்காது.
சந்திராஷ்டமம்: 13.8.2021 இரவு 8:49 மணி - 15.8.2021 இரவு11:27 மணி
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE