வேலூர்: சுதந்திரம் பெற்றவுடன், டில்லி செங்கோட்டையில் பட்டொளி வீசி பறந்த முதல் தேசிய கொடி வேலூர் மாவட்டம், குடியாத்தத்தில் தயாரிக்கப்பட்டது. இந்தியா சுதந்திர தினவிழா கொண்டாட்டங்களுக்கு, தேசிய கொடி ஏற்ற அதிகளவு தேவைப்பட்டது. இதனால் பல்வேறு நிறுவனங்களில், தேசிய கொடி தயாரிக்கும் பணி ஒப்படைக்கப்பட்டது. வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த பிச்சனூரை சேர்ந்த வெங்கடாசலம் என்பவர், இந்துஸ்தான் லுங்கி கம்பெனி நடத்தி வந்தார். அவரும், அவரது மனைவி முனிரத்தினம் அம்மாளும் இணைந்து, இரண்டு கோடி கொடியை கைத்தறியில் நெசவு செய்து டில்லிக்கு அனுப்பி வைத்தனர். அவர்கள் தயாரித்து அனுப்பிய கொடிதான், சுதந்திர தினத்தன்று டில்லி செங்கோட்டையில் ஏற்ற அதிகாரிகளால் தேர்வு செய்யப்பட்டது. 1947 ஆக., 15ல் சுதந்திர தினத்தில் டில்லி செங்கோட்டையில் முதல் தேசிய கொடியாக அது ஏற்றப்பட்டது. கொடியை சிறப்பாக தயாரித்ததற்காக, பிரதமர் நேரு பாராட்டி அனுப்பிய கடிதத்தை, அவரது குடும்பத்தினர் இன்றளவும் பொக்கிஷம் போல பாதுகாத்து வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE