பெட்ரோல் வரி ரூ.3 குறைப்பு: பட்ஜெட்டில் அறிவிப்பு

Updated : ஆக 13, 2021 | Added : ஆக 13, 2021 | கருத்துகள் (69) | |
Advertisement
சென்னை: பெட்ரோல் மீதான வரியில் ரூ.3 குறைக்க முதல்வர் உத்தரவிட்டு உள்ளதாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். இது நாளை(ஆக.14) முதல் அமலுக்கு வருகிறது.2020-21ம் ஆண்டுக்கான தமிழக அரசின் பொது பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று (ஆக.,13) தாக்கல் செய்தார். முதன்முறையாக காகிதமில்லா இ-பட்ஜெட்டாக தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள சிறப்பு
TNBudget2021, Palanivel Thiyagarajan, Budget, தமிழகம், பட்ஜெட், பழனிவேல் தியாகராஜன், தொல்லியல் ஆய்வு

சென்னை: பெட்ரோல் மீதான வரியில் ரூ.3 குறைக்க முதல்வர் உத்தரவிட்டு உள்ளதாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். இது நாளை(ஆக.14) முதல் அமலுக்கு வருகிறது.


2020-21ம் ஆண்டுக்கான தமிழக அரசின் பொது பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று (ஆக.,13) தாக்கல் செய்தார். முதன்முறையாக காகிதமில்லா இ-பட்ஜெட்டாக தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள சிறப்பு அம்சங்கள்:

பெட்ரோல் விலை குறைப்பு நள்ளிரவில் அமல் அரசு அறிவிப்பு

* உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்தின்கீழ் பெறப்பட்ட 4,57,645 மனுக்களில் 2,29,216 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டுள்ளது.
* வரிமுறையை சீர்செய்வதற்காக சட்ட, பொருளாதார வல்லுநர்களை கெண்ட குழு அமைக்கப்படும்.
* அனைத்து குடும்பங்களின் பொருளாதார நிலையை அறிவதற்கான தர்வுகளை திரட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
* அனைத்து பொதுசேவை துறைகளிலும் தமின்னணு அளவீட்டு முறை அறிமுகப்படுத்தப்படும்.


latest tamil news


* பொது வினியோக திட்டத்தில் மின்னணு கொள்முதல் முறை அமல்படுத்தப்படும்
* அனைத்து துறைகளின் நடைமுறைகளும் முழுமையாக கணினிமயமாக்கப்படும்
* 2.05 லட்சம் ஹெக்டேருக்கு அதிகமான நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருப்பது தணிக்கையில் கண்டறியப்பட்டுள்ளது
* பொது நிலங்களை முறையாக பயன்படுத்த ‛அரசு நில மேலாண்மை அமைப்பு' அமைக்கப்படும்
* அரசு நிதி சார்ந்த வழக்குகளை கையாள ‛வழக்கு இடர் மேலாண்மை அமைப்பு' உருவாக்கப்படும்.
* அனைத்து அரசு நிதியும் கருவூலத்தில் வைக்கப்படும்
* 1921ம் ஆண்டு முதலான சட்டசபை ஆவணங்கள் கணினி மயமாக்கப்படும்.
* அரசின் உட்தணிக்கை அமைப்பு முறையில் அடிப்படை சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படும்
* ஒவ்வொரு ஆண்டும் ‛ஜூன் 3ம் தேதி' கலைஞர் கருணாநிதி செம்மொழித்தமிழ் விருதும், ரூ.10 லட்சம் வழங்கப்படும்.
* செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலி திட்டத்திகீழ் தமிழ்ப் படைப்புகள் மொழிப்பெயர்க்கப்படும்.


latest tamil news


* தொல்லியல் துறைக்கு ரூ.29.43 கோடி நிதி ஒதுக்கப்படும்.
* தமிழகத்தில் நடைபெறும் தொல்லியல் ஆய்வுகளை அறிவியல் முறையில் மேற்கொள்ள ரூ..5 கோடி நிதி ஒதுக்கப்படும்.
* கீழடியில் திறந்தவெளி தொல்லியல் அருங்காட்சியகம் அமைக்கப்படும்.

*முதியோர் ஓய்வூதிய திட்டத்தில் சேர்த்தல், விலக்குதலில் எண்ணற்ற பிழைகள் உள்ளன.
*காவிரி கோதாவரி இணைப்பு திட்டத்தை விரைவாக செயல்படுத்த மத்திய அரசிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.


*பழைய வரிகளில் நிலுவையில் உள்ள ரூ.28 ஆயிரம் கோடியை வசூலிக்க சமாதான் திட்டம் அறிவிக்கப்படும்


அரசுக்கு வருவாய் இழப்பு* பெட்ரோல் மீதான வரியில் ரூ.3 குறைக்க முதல்வர் உத்தரவிட்டு உள்ளார். இதன் மூலம், தமிழக அரசுக்கு ரூ.1,160 கோடி வருவாய் இழப்பு ஏற்படும்.
* பெட்ரோல் வரி குறைப்பு மூலம் உழைக்கும் மற்றும் நடுத்தர குடும்பத்தினர் பயன்பெறுவார்கள்.


பெயர் மாற்ற தேவையில்லை


தியாகராஜன் பேசும் போது, குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் வழங்குவது மிக முக்கியமன திட்டம். குடும்ப தலைவர் பெண்ணாக இருந்தால் மட்டுமே உதவி வழங்கப்படும் என தவறாக புரிந்து கொள்ளப்பட்டு உள்ளது. இல்லத்தரசிகளுக்கு உதவி வழங்குவதே நோக்கம். குடும்ப தலைவர் பெயரை மாற்ற தேவையில்லை. ரூ.4ஆயிரம் நிதியுதவியை அரசு ஊழியர்கள், பணக்காரர்களுக்கு வழங்கக்கூடாது என விமர்சனம் எழுந்தது. ஏழை மக்களுக்கு அடிப்படை உரிமை தொகை செல்வதை உறுதி செய்யவே அளவுகோள் வகுக்கப்படுகிறது. தகுதி வாய்ந்த குடும்பங்களை கண்டறிந்த பின்னரே ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் எனக்கூறினார்.


பயிர்க்கடன் தள்ளுபடியில் குளறுபடிநிதி அமைச்சர் பேசும்போது, பயிர்க்கடன் தள்ளுபடி குறித்து ஆராய்ந்த போது பல்வேறு குளறுபடிகள் நடந்தது தெரியவந்தது. சில மாவட்டங்களில் அறிவிப்பதற்கு முன்னரே அதிகளவு பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது என தெரிவித்தார்.


நிதிப்பற்றாக்குறை


2021 - 22ம் ஆண்டு திருத்த வரவு - செலவு திட்ட மதிப்பீடுகளில் நிதிப்பற்றாக்குறை ரூ.92,529.43 கோடி என மதிப்பிடப்பட்டு உள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (69)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
subbu - Chennai,இந்தியா
13-ஆக-202121:38:56 IST Report Abuse
subbu லெஹ்மன் பிரோதெரஸ் போண்டி ஆனதுல அதிசயம் ஒன்னும் இல்ல. இந்த மாதிரி மூதேவியெல்லாம் வேலைக்கு வச்சா விளங்கிடும். இவன் மந்திரியா இருந்து என்னென்ன பண்ண போறானோ
Rate this:
Cancel
nizamudin - trichy,இந்தியா
13-ஆக-202120:15:17 IST Report Abuse
nizamudin பெட்ரோல் விலை குறைப்பு உலகில் எல்லோராலும் பாராட்டப்படும் கொரோன காலத்தில் மக்கள் சுமை குறைந்து நிம்மதி கிடைக்கும் மோடி ஜி அவர்களும் ஸ்டாலின் முடிவு போல அவரும் மக்கள் நலன் கருதி முடிந்த வரை பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைக்கவேண்டும்
Rate this:
Cancel
iloveindia - Ramanathapuram,இந்தியா
13-ஆக-202119:56:36 IST Report Abuse
iloveindia எல்லாத்தையும் குறை சொன்னால் எப்படி ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X