மாணவர்களிடம் குழப்பத்தை ஏற்படுத்திய அரசு: பழனிசாமி விமர்சனம்

Updated : ஆக 13, 2021 | Added : ஆக 13, 2021 | கருத்துகள் (25) | |
Advertisement
சென்னை: ‛நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என கூறிவிட்டு ஆட்சிக்கு வந்து 100 நாட்கள் ஆகியும் தீர்வு காணாமல், மாணவர்கள் மத்தியில் பெரிய குழப்பத்தை ஏற்படுத்திய விடியா அரசு,' என திமுக தலைமையிலான அரசை எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி விமர்சித்துள்ளார்.தமிழக பட்ஜெட் தாக்கலின் போது பேச அனுமதிக்கோரி அதிமுக எம்எல்ஏ.,க்கள் கோரியதற்கு சபாநாயகர் மறுப்பு தெரிவித்தார். இதனையடுத்து
TNBudget, ADMK, Palanisamy, EPS, தமிழகம், பட்ஜெட், அதிமுக, வெளிநடப்பு, பழனிசாமி, விடியா அரசு

சென்னை: ‛நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என கூறிவிட்டு ஆட்சிக்கு வந்து 100 நாட்கள் ஆகியும் தீர்வு காணாமல், மாணவர்கள் மத்தியில் பெரிய குழப்பத்தை ஏற்படுத்திய விடியா அரசு,' என திமுக தலைமையிலான அரசை எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி விமர்சித்துள்ளார்.

தமிழக பட்ஜெட் தாக்கலின் போது பேச அனுமதிக்கோரி அதிமுக எம்எல்ஏ.,க்கள் கோரியதற்கு சபாநாயகர் மறுப்பு தெரிவித்தார். இதனையடுத்து அனைத்து அதிமுக எம்எல்ஏ.,க்களும் வெளிநடப்பு செய்தனர். பின்னர் எம்எல்ஏ.,க்களுடன் எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கடந்த சட்டசபை தேர்தலின்போது 505க்கும் மேற்பட்ட நடைமுறைப்படுத்த முடியாத வாக்குறுதிகளை நிறைவேற்றுவதாக கூறி திமுக ஆட்சிக்கு வந்தது.
தேர்தல் சமயத்தில் முதல் கையெழுத்து நீட் தேர்வு ரத்து தான் எனக் கூறினார். ஆனால், ஆட்சி பொறுப்பேற்று 100 நாட்கள் ஆகியும் எந்த தீர்வும் எட்டப்படவில்லை. இதனால், மாணவர்கள் மத்தியில் பெரிய குழப்பத்தை இந்த விடியா அரசு ஏற்படுத்தியுள்ளது. நீட் தேர்வு ரத்துக்கு தீர்வு காணாத அரசை கண்டித்தும், தமிழக அரசின் நிதிநிலை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடுவதாக கூறி வெற்று அறிக்கையை நிதியமைச்சர் வெளியிட்டுள்ளார்.


latest tamil news



அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக முன்னாள் அமைச்சர்கள், நிர்வாகிகள் ஆகியோர் மீது திமுக அரசு பொய் வழக்கு போடுவதற்கு கண்டிக்கிறோம். உள்ளாட்சி தேர்தல் நெருங்கும்நேரத்தில் இப்படி பொய் வழக்குப்போட்டு கலங்கம் ஏற்படுத்துவதாக திமுக அரசு பகல் கனவு காண வேண்டாம். பொய் வழக்குகளுக்கு நாங்கள் அஞ்சமாட்டோம், சட்டப்படி எதிர்கொள்வோம். பத்திரிகை சுதந்திரம் பற்றி பேசிவரும் முதல்வர் ஸ்டாலின், ஆக.,9ம் தேதி நமது அம்மா பத்திரிகை அலுவலகத்தின் பூட்டை உடைத்து சோதனை செய்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (25)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Arachi - Chennai,இந்தியா
14-ஆக-202108:19:16 IST Report Abuse
Arachi ஹரியானா பிஹார் போன்ற மாநிலங்களிலிருந்து தமிழ்நாட்டிற்கு வேலைக்கு வருவது போல் வந்து ஏடிம் மற்றும் வங்கிகளிலும் பணம் கொள்ளையடித்து விட்டு வட இந்தியாவிற்கு ஓடிவிடுகிறார்கள். இத்திருடர்களைப்பிடிக்க துப்புதுலக்கி தமிழ்நாட்டிற்கு பிடித்து அதுவும் சென்னைக்கு நம் போலீஸ் திறமையாக கொண்டுவந்து சிறையில் தள்ளி விடுகிறார்கள். ஊர் நாட்டுல MLA க்கு நின்று வெற்றிபெற்று சென்னைக்கு வந்து மந்திரியாகி பலவகையில் மக்களின் வரிப்பணத்தை கொள்ளையடித்துவிட்டு ஊர் நாட்டுக்கு ஓடிவிடுகிறார்கள். போலீஸ் அவர்களையும் தேடி விசாரிக்கவும் நடவடிக்கை எடுக்கவும் மாவட்டம் விட்டு மாவடடம் செல்கிறார்கள். மேலே சொன்னவர்களும் இவர்களுக்கும் என்ன வித்தியாசம் இருக்க முடியும். வெட்கக்கேடு
Rate this:
Cancel
Arachi - Chennai,இந்தியா
14-ஆக-202107:53:45 IST Report Abuse
Arachi மாணவர்கள் மற்றும் பெற்றோர்களும் ஆசிரியர்களும் தெளிவாகத்தான் இறுக்கியிறார்கள் நீங்கள் குழப்பாமல் இருந்தால் சரிதான். தேர்தல் வாக்குறுதிகள் கொடுக்கும்போதே மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கு தெரியும் இதற்கு சட்ட சிக்கல் இருக்குமென்பது தெரிந்துதான் மாணவர்கள் எல்லோருமே நீட்டுக்காக படித்து கொண்டுதான் இருக்கிறார்கள். இதற்காக மயங்கி திமுகவிற்கு ஓட்டு போடவில்லை. உங்களை இன்னொரு ஐந்து ஆண்டுகள் ஆட்சி செய்ய விடக்கூடாது என்பதுதான். விட்டிருந்தால் என்ன நடக்கும் என்பது உங்களுக்கே தெரியும்.
Rate this:
Cancel
13-ஆக-202120:05:24 IST Report Abuse
அப்புசாமி உங்க கட்சியை விட போலியான வாக்குறுதிகளைக் குடுத்து அவிங்க ஜெயிச்சாங்க. தப்பு உங்களோடதே.. ரெண்டு கோடி வேலை வாக்குறுதி பார்ட்டியோட கூட்டு வெச்சதே தப்பு.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X