பொது செய்தி

தமிழ்நாடு

தமிழக பட்ஜெட் முக்கிய அம்சங்கள்

Updated : ஆக 13, 2021 | Added : ஆக 13, 2021 | கருத்துகள் (154)
Share
Advertisement
சென்னை: சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் இடம்பெற்ற முக்கிய அம்சங்கள்:*தொல்லியல் துறைக்கு ரூ. 29.43 கோடி*தொல்லியல் ஆய்வுகளை அறிவியல் முறையில் ஆய்வு செய்ய ரூ.5 கோடி*தமிழ் வளர்ச்சி துறைக்கு ரூ.80.26 கோடிகாலிப்பணியிடங்கள் நிரப்பப்படும்*பாசன திட்டங்களுக்கு ரூ.6,607.17 கோடி *சமூக பாதுகாப்பு ஓய்வூதியங்களுக்கான நிதி ரூ. 4,807 கோடியாக அதிகரிக்கப்பட்டு உள்ளது.*தமிழக
budget, tamilnadu, பட்ஜெட், நிதி ஒதுக்கீடு

சென்னை: சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் இடம்பெற்ற முக்கிய அம்சங்கள்:*தொல்லியல் துறைக்கு ரூ. 29.43 கோடி
*தொல்லியல் ஆய்வுகளை அறிவியல் முறையில் ஆய்வு செய்ய ரூ.5 கோடி
*தமிழ் வளர்ச்சி துறைக்கு ரூ.80.26 கோடி

தமிழக பட்ஜெட் முக்கிய அறிவிப்புகள் எந்த துறைக்கு எவ்வளவுக்கு நிதி ஒதுக்கீடு ?


காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும்



*பாசன திட்டங்களுக்கு ரூ.6,607.17 கோடி
*சமூக பாதுகாப்பு ஓய்வூதியங்களுக்கான நிதி ரூ. 4,807 கோடியாக அதிகரிக்கப்பட்டு உள்ளது.
*தமிழக போலீசாருக்கு ரூ.8,930.29 கோடி ஒதுக்கீடு.14,317 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும்
*தீயணைப்பு துறை ரூ.405.13 கோடி
*பேரிடர் மேலாண்மை துறைக்கு ₹1,360 கோடி ஒதுக்கீடு.
*சாலை பாதுகாப்பு திட்டங்களுக்கு ரூ.500 கோடி
*நீதித்துறை நிர்வாகத்திற்கு ரூ.1,713.30 கோடி
*பொது விநியோக திட்டத்தில் உணவு மானியத்திற்கு ரூ.8,437.57 கோடியாக அதிகரிப்பு
*29 குளங்களின் தரம் உயர்த்த ரூ.111.24 கோடி
*பாசன திட்டங்களுக்கு ரூ.6,607.17 கோடி
*ஊரக வேலை உறுதி திட்ட ஊதியத்தை ரூ.300 ஆகவும், பணிநாட்களை 150 நாட்களாக உயர்த்தவும் நடவடிக்கை எடுக்கப்படும்
*மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.20 ஆயிரம் கோடி கடன் உறுதி செய்யப்படும்
*நமக்கு நாமே திட்டத்திற்கு ரூ.100 கோடி
*மீன்வளத்துறைக்கு ரூ.303.66 கோடி
*6 இடங்களில் புதிய மீன்பிடி துறைமுகம் அமைக்க ரூ.6.25 கோடி செலவில் ஆய்வு மேற்கொள்ளப்படும்.
*150 கோடியில் காசிமேடு மீன்பிடித்துறைமுகம் மேம்படுத்தப்படும்
*மீனவர்கள் நலனுக்காக ரூ. 1,149.79 கோடி


latest tamil news




தடுப்பணைகள்

*10 ஆண்டுகளில் ஆயிரம் தடுப்பணைகள் கட்டப்படும்
*610 கோடி செலவில் நீர்நிலைகள் புனரமைப்பு பணிகள் உலக வங்கி உதவியுடன் செயல்படுத்தப்படும்.
*தமிழ்நாடு நீர்வள தகவல் மேலாண்மை அமைப்பு ரூ.30 கோடியில் செயல்படுத்தப்படும்
*மேட்டூர், அமராவதி, வைகை அணை நீர்த்தேக்க அளவை பழைய நிலைக்கு உயர்த்த நடவடிக்கை


வீட்டு குடிநீர் திட்டத்திற்கு ரூ.2000 கோடி


*காலநிலை மாற்றத்தை எதிர்த்து போராடுவது தமிழகம் போன்ற மாநிலங்களுக்கு பெரும் சவால்
*தமிழகத்தின் காடு மற்றும் மரங்களின் அடர்த்தியை 33 சதவீதம் உயர்த்த ரூ.500 கோடியில் பருவநிலை மாற்ற இயக்ககம், முதல்வர் தலைமையில் உருவாக்கப்படும்.
* அடுத்த 5 ஆண்டுகளில் சர்வதேச நீலக்கொடி சான்றிதழ் பெற 10 கடற்கரைகள் மேம்படுத்தப்படும்
* ஈர நிலங்களை சார்ந்தோரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த ரூ.150 கோடி
* 2021-22ம் ஆண்டில் 2,49,877 வீடுகள் கட்ட ரூ.8,017.41 கோடி
* கிராமப்புறங்களில் ரூ.400 கோடி செலவில் தூய்மை பாரத இயக்கம் செயல்படுத்தப்படும்
* ஜல்ஜீவன் இயக்கம் மூலம் வீட்டு குடிநீர் திட்டத்திற்கு ரூ.2000 கோடி
* அண்ணா மறுமலர்ச்சி திட்டத்திற்காக ரூ.1,200 கோடி ஒதுக்கீடு
* மாநில ஊரக வாழ்வாதார திட்டம் ரூ.809.79 கோடி
*அம்ருத் திட்டததிற்கு ரூ.1450 கோடி


மீண்டும் தொகுதி மேம்பாட்டு நிதி


*சீர்மிகு நகரங்களின் திட்டத்திற்கு ரூ.2,350 கோடி
*கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டம் ரூ.1,000 கோடி
*சென்னையில் புதிய மேம்பாலங்கள் கட்ட ரூ.500 கோடி ஒதுக்கீடு
*எம்எல்ஏ மேம்பாட்டு திட்டங்களுக்கு தலா ரூ.3 கோடி வழங்கப்படும்
*சென்னையி்ல 3 இடங்களில் பாதாள சாக்கடை திட்டத்திற்கு ரூ.2,056 கோடி ஒதுக்கீடு
*பள்ளிகல்வித்துறைக்கு ரூ.32,599.54 கோடி
*உயர்கல்வித்துறைக்கு ரூ.5369.09 கோடி
*மருத்துவம் மற்றும் குடும்ப நலத்துறைக்கு ரூ.18,933.20 கோடி


நெடுஞ்சாலைகள் மேம்பாடு


* ஜெர்மன் வளர்ச்சி வங்கி உதவியுடன் ஆயிரம் புதிய பஸ்கள் வாங்க ரூ.623.59 கோடி
*நெடுஞ்சாலை துறைக்கு 17,899.17 கோடி
*சீர்மிகு நகரங்களின் திட்டத்திற்கு ரூ.2350 கோடி
*சென்னை வெளிவட்ட சுற்றுச்சாலை திட்டம் 1,750 கோடி
*16 மாநில நெடுஞ்சாலைகள் மேம்பாடு ரூ.6448.28 கோடி
*வேளாண்மைக்கான இலவச மின்சாரம் வீட்டு மின்சார மானியத்திற்காக ரூ.19,872.77 கோடி
*கொரோனா கால நிவாரணமாக ரூ.9370.11 கோடி செலவிடப்பட்டுள்ளது.
*நகர்ப்புற ஊதிய வேலைவாய்ப்பு திட்டத்திற்கு ரூ.100 கோடி


பாதாள சாக்கடை திட்டம்


*சென்னையில் உள்ள நீர்வழிகளில் கழிவுநீர் கலப்பதை தடுக்கும் திட்டத்திற்கு ரூ.2,371 கோடி
*சென்னையில் பாதாள சாக்கடை திட்டத்திற்கு ரூ.2056 கோடி ஒதுக்கீடு
*குடிசை மாற்று வாரியம் திட்டங்களுக்கு ரூ.3954.44 கோடி
*மகளிர் இலவச பஸ் பயணத்திற்கு டீசல் மானியமாக ரூ.703 கோடி ஒதுக்கீடு
*தேவையுள்ள இடங்களில் புதிய ரேஷன் கடைகளை ஏற்படுத்துவதற்காக வழிகாட்டி நெறிமுறைகளை மறு ஆய்வு செய்வதற்கு குழு ஏற்படுத்தப்படும்.
*ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட 27 நகரங்களில் பாதாள சாக்கடை திட்டம்
*திருச்சியில் புதிதாக ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் மற்றும் வணிக வளாகம் செயல்படுத்தப்படும்.
* நகராட்சி, பேரூராட்சிகளில் உள்ள மண்சாலைகள் தரம் உயர்த்தப்படும்
*சென்னை - குமரி இடையே 8 வழிச்சாலை அமைக்கப்படும்
*சிங்கார சென்னை 2.0 பணிகள் துவங்கப்படும்.
*புதிய பெருநகர வளர்ச்சிக்குழுமங்கள் மதுரை, கோவை, திருப்பூர், ஓசூரில் ஏற்படுத்தப்படும்.


மதுரையில் மெட்ரோ ரயில்


*மெட்ரோ 2ம் கட்ட பணிகள் 2026ல் முடிவடையும்
*சென்னை விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்ட் வரையிலான மெட்ரோ ரயில் திட்ட பணிகள் விரைவில் துவங்கப்படும்
*கோடம்பாக்கம் - பூந்தமல்லி இடையிலான மெட்ரோ ரயில் சேவை 4 ஆண்டுகளுக்குள் துவங்கும்
*தமிழகத்தை மின்மிகை மாநிலம் எனக்கூறுவது தவறு.
*2500 மெகாவாட் மின்சாரத்தை மின்சந்தையில் கொள்முதல் செய்தே தமிழக அரசு சமாளிக்கிறது.
*மதுரையில் மெட்ரோ ரயில் திட்டத்தை கொண்டு வருவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராயப்படும்.
*அடுத்த 5 ஆண்டுகளில் வாடகை கட்டடங்களில் செயல்படும் நீதிமன்றங்களுக்கு போதிய கட்டடங்கள் கட்டப்படும்.
*உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்றங்களில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும்.


பள்ளி கல்வித்துறை


*கற்றல் செயல்பாட்டில் முதல் 3 இடங்களில் தமிழகத்தை கொண்டு வர நடவடிக்கை.
*ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைப்பதற்கு ரூ.20.76 கோடி
* அடிப்படை கல்வியறிவு, கணித அறிவை உறுதிசெய்ய எண்ணும் எழுத்தும் இயக்கத்திற்கு ரூ.66.70 கோடி ஒதுக்கீடு
* அரசுப்பள்ளி மாணவர்களின் கணினி திறனை உறுதிசெய்ய உயர் தொழில்நுட்ப கணினி ஆய்வகம் அமைக்க ரூ.114.18 கோடி நிதி
*மலைப்பாங்கான தொலைதூரப் பகுதிகளில் 12 தொடக்கப்பள்ளிகள் புதிதாக அமைக்கப்படும்.
*865 உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் 20.76 கோடியில் ஸ்மார்ட் வகுப்பறைகள் ஏற்படுத்தப்படும்.
* கூடுதல் வகுப்பறைகள் ஆய்வு கூடங்கள் உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த நிதி ரூ.123.02 கோடி
* விடுதிகளை மேம்படுத்த சிறப்பு மூலதனம் ரூ.25 கோடி


உயர்கல்வித்துறை


* முனைவர் பட்ட கல்வி உதவித்தொகை திட்டம் ரூ.16 கோடி
* 10 அரசு கலை அறிவியல் கல்லூரிகள் துவங்கப்படும்
*ரூ.10 கோடியில் 25 கலை அறிவியல் கல்லூரிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் ஏற்படுத்தப்படும்.
*413 கல்வி ஒன்றியங்களுக்கு தலா 40 தொடுதிரை கணினிகள் 13.22 கோடியில் ஏற்படுத்தப்படும்.
*தமிழ்நாடு ஆளில்லா விமான கழகம் துவங்கப்படும்


மசூதி, தேவாலயங்கள் புதுப்பிப்பு


*டாக்டர் முத்துலட்சுமி மகப்பேறு நிதி உதவி திட்டத்திற்கு ரூ.959.20 கோடி நிதி
*108 ஆம்புலன்ஸ்களின் எண்ணிக்கை 1,033 ஆக உயர்த்தப்படும்.
* ஆதிதிராவிடர் சிறப்பு கூறுகள் திட்டத்திற்கு மொத்த செலவீனம் ரூ.14,696.60 கோடி
* ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினரின் கல்வி முன்னேற்றத்திற்கான திட்டம் ரூ.1884.70 கோடி
* ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு நலனுக்கு ரூ. 4142.33 கோடி
* குடிசை மாற்று வாரிய திட்டங்களுக்கு ரூ.3955.44 கோடி நிதி
* குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்டம் ரூ. 2536.69 கோடி நிதி
* எம்ஜி ஆர் மதிய உணவு திட்டம் ரூ.1,725.41 கோடி நிதி ஒதுக்கீடு
* 3ம் பாலினத்தவர்கள் ஓய்வூதிய திட்டத்திற்கு ரூ.1.50 கோடி ஒதுக்கீடு
* அங்கன்வாடி மையங்களின் தரத்தை உயர்த்த சிறப்பு ஒதுக்கீடு ரூ.48.48 கோடி நிதி ஒதுக்கீடு
* ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டத்திற்கு ரூ.2,536.69 கோடி நிதி
* கல்விக்காக வெளிநாடு செல்ல ரூ.5 கோடி உதவி
* வேலைவாய்ப்பு திறன் பயிற்சிக்கு ரூ.60 கோடி
* அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரிய மானியத்திற்கு ரூ.215 64 கோடி
* மசூதிகள் மற்றம் தேவாலயங்களை புதுப்பிக்க ரூ.6 கோடி நிதி


2022ல் அகவிலைப்படி


* புவியியல் புகைபடிவ பூங்கா அமைக்க ரூ.10 கோடி நிதி
* இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டிற்காக ரூ.225.62 கோடி ஒதுக்கீடு
* 2022ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி வழங்கப்படும்.
* மகளிர் சுய உதவிகுழுக்களுக்கு வழங்கப்பட்ட ரூ.2,756 கோடி தள்ளுபடி செய்யப்படும்
* மோசடி ஆவணங்களின் பதிவை ரத்து செய்யும் அதிகாரம் பதிவாளருக்கே வழங்கப்படும்
*வரி ஏய்ப்பு செய்வோர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு பல்வேறு அம்சங்களை வெளியிட்டார் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்.

Advertisement




வாசகர் கருத்து (154)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
14-ஆக-202113:09:02 IST Report Abuse
Akilan Archana Please don't repeat the same comment
Rate this:
Cancel
thamodaran chinnasamy - chennai,இந்தியா
14-ஆக-202101:05:20 IST Report Abuse
thamodaran chinnasamy மாதம் ஒருமுறை மின் கட்டணம் வசூலிப்பு என்பதற்கு உண்டான எந்த விதமான அறிவிப்பும் கண்ணுக்கெட்டிய தூரம் வரை தெரியவில்லை. நிச்சயம் இது மக்களுக்கான பட்ஜெட் இல்லை இல்லை .
Rate this:
Cancel
Tamilan - Kongu Nadu,இந்தியா
13-ஆக-202122:26:09 IST Report Abuse
Tamilan அரசு ஊழியர்களுக்கு ஏப்ரல் முதல் அக விலைப்படி வழங்கப்படும்.........டக்லஸ் அண்னே .....2021-22ம் ஆண்டு நிதி நிலை அறிக்கையில் சொல்ல வேண்டிய அறிவிப்பு........இப்போ தெரியுதா...லேமன் பிரதர்ஸ் கம்பெனி திவாலான ரகசியம்..........கோமாளிகளுக்கு ஏற்ற அறிவாளி......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X