பெங்களூரில் 10 நாளில் 500 குழந்தைகளுக்கு தொற்று

Updated : ஆக 13, 2021 | Added : ஆக 13, 2021 | கருத்துகள் (13) | |
Advertisement
பெங்களூரு: கர்நாடக மாநிலம் பெங்களூருவில் ஆகஸ்ட் மாதத்தில் முதல் 10 நாட்களில் மட்டும் 499 குழந்தைகளுக்கு கோவிட் தொற்று ஏற்பட்டுள்ளதால் பெற்றோர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.கர்நாடகாவில் மீண்டும் கோவிட் பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. கடந்த 24 மணிநேரத்தில் 1,857 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கோவிட் 3வது அலையின் தாக்கம் விரைவில் வாய்ப்புள்ளதாக மருத்துவ வல்லுநர்கள்
Bengaluru, Children, Test Positive, Covid-19, பெங்களூரு, குழந்தைகள், கொரோனா, கோவிட், தொற்று, பாதிப்பு, 3வது அலை

பெங்களூரு: கர்நாடக மாநிலம் பெங்களூருவில் ஆகஸ்ட் மாதத்தில் முதல் 10 நாட்களில் மட்டும் 499 குழந்தைகளுக்கு கோவிட் தொற்று ஏற்பட்டுள்ளதால் பெற்றோர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

கர்நாடகாவில் மீண்டும் கோவிட் பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. கடந்த 24 மணிநேரத்தில் 1,857 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கோவிட் 3வது அலையின் தாக்கம் விரைவில் வாய்ப்புள்ளதாக மருத்துவ வல்லுநர்கள் எச்சரித்து வருகின்றனர். இந்நிலையில், பெங்களூருவில் 10 நாட்களில் 500 குழந்தைகளுக்கு கோவிட் தொற்று ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக கர்நாடக சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‛பெங்களூருவில் ஆகஸ்ட் மாதத்தின் முதல் 10 நாட்களில் மட்டும் 499 குழந்தைகளுக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. அதிலும் கடைசி 5 நாட்களில் மட்டும் 263 குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 9 வயதுக்கு உட்பட்டவர்கள் 88 பேரும், 10 முதல் 19 வயதுக்குள் உள்ளவர்கள் 175 பேரும் அடங்கும்,' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அடுத்த சில வாரங்களில் இந்த எண்ணிக்கை இதை விட மூன்று மடங்கு அதிகமாக இருக்கலாம் என்றும் சுகாதாரத் துறை எச்சரித்துள்ளது.


latest tamil newsபெற்றோர்கள் முதலில் இரண்டு டோஸ் கோவிட் தடுப்பூசி போட்டுக்கொள்ளவும், தங்கள் குழந்தைகளை முறையாக கண்காணிப்பது மட்டுமல்லாமல், கூட்டமான இடங்களுக்கு செல்வதை தவிர்க்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். குழந்தைகளுக்கும் அதிவேகமாக கோவிட் பரவி வருவதையடுத்து , மீண்டும் ஊரடங்கை அமல்படுத்துவது, பள்ளிகள் திறப்பதை ஒத்திவைப்பது, குடியிருப்புகளில் கோவிட் சிறப்பு சிகிச்சை மையம் அமைப்பது உள்ளிட்டவை குறித்து சுகாதார அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.

Advertisement
வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
13-ஆக-202115:27:07 IST Report Abuse
Pugazh V ஐயய்யோ டாஸ்மாக் தொறந்துட்டாங்க.. மக்கள் சாகறாங்க..என்று சொன்ன பாஜக வாசகர்கள் கருநாடக பாஜக அரசு பற்றி என்ன எழுதப் போகிறீர்கள்??
Rate this:
elakkumanan - Naifaru,மாலத்தீவு
13-ஆக-202116:23:49 IST Report Abuse
elakkumananசொந்த நாட்டுக்காரன் பாதிக்கப்பட்டால் மகிழும் மகான்..................திராவிடம் ன்னா சும்மாவா....தேசம், தேசப்பற்று இதெல்லாம் ஒரு அடையாள அளவில்கூட இல்லாமல், அரசியல் செய்யும் திராவிட மூளை...வேறென்ன சொல்ல...கடவுளிடம் உங்களுக்கும் வேண்டுகிறேன்.........நல்ல புத்தியை கொடுக்க சொல்லி.......
Rate this:
Nagarajan D - Coimbatore,இந்தியா
13-ஆக-202116:51:36 IST Report Abuse
Nagarajan Dகிறுக்கு தனமான கருத்து... ஏண் டாஸ்மாக் திறந்தீங்க என்று கேட்டால் BJP காங்கிரஸ் என உளறல்... எவன் திறந்தாலும் பாதிக்கப்படப்போவது பொதுமக்கள் எங்கிருந்து கட்சியை இதில் இழுக்க முடிகிறது... 200 ரூபாய் ஊ பீஸ் நபராக இருக்குமோ என்னவோ...
Rate this:
வாய்மையே வெல்லும் - மனாமா,பஹ்ரைன்
13-ஆக-202117:38:40 IST Report Abuse
வாய்மையே வெல்லும்புகழ் என்றழைக்க படும் நபர் ..நர் சிந்தனை யாளனுக்கு நேர் எதிர்மறை எண்ணம் கொண்டவர் என்பது தெள்ளத்தெளிவு...
Rate this:
Cancel
Vivekanandan Mahalingam - chennai,இந்தியா
13-ஆக-202115:16:26 IST Report Abuse
Vivekanandan Mahalingam சீனாக்காரன கேக்க வேண்டியதெல்லாம் இந்திய அரசை கேக்கறாங்க. சீன பொருள்களை சீப் என்று வாங்கியவர்களுக்கு விலை உயர்ந்த பரிசு கோரோனோ
Rate this:
Cancel
Visu Iyer - chennai,இந்தியா
13-ஆக-202114:22:29 IST Report Abuse
Visu Iyer வெளிநாட்டில் இருந்து இப்போ யார் வந்தார்கள் எப்படி இது இப்போ வருகிறது.. வெளிநாட்டில் இருந்து வரவில்லை என்றால்.. இதுவரை இவர்கள் செய்த ஓராண்டு லாக் டவுன் திட்டமில்லாத திறமையில்லாத செயல் முறை என்று சொல்வதா..? கருப்பு பணத்தை ஒழிக்க ஆயிரம் ரூபாயை செல்லாதாக்கி இறந்தாயிரம் அச்சடித்து அதையும் வெளியில் விடாமல் இருப்பது என்பது போல... என்று கேட்பதற்கு யாராவது வர போறாங்க.. பதில் தயாராக வைத்துக் கொள்ளுங்கள்.
Rate this:
elakkumanan - Naifaru,மாலத்தீவு
13-ஆக-202115:20:21 IST Report Abuse
elakkumananஅறுபது வருசமா வறுமையை ஒழிப்போம் னு சொல்லியே ஓட்டுனப்போ யாருமே கெக்கலியே நண்பா.. படிச்சவங்ககிட்ட கேளுங்க... இந்த கிருமி, தானாக உருமாறும்.. உருமாறிய பின், எளிதில் பாதிக்கக்கூடிய நபர்களை பாதிக்கும்.. தடுக்கமுடியாது. உலக நாடுகளில் எல்லாம், ரெண்டு தடுப்பூசி போட்ட நாடுகளிலும், மூன்றாவது அலை ஏற்படுகிறது.. தடுக்கமுடியாது. மக்கள், கவனமாக இருக்கணும்.. ரேஷனில் இலவசம் னு சொன்ன, வரி காட்டும் ஆளும் வரிசையில் நின்னா, இப்பிடித்தான்... ஐரோப்பாவில், தடுப்பூசி போட்டாலும், அதற்க்கு (அந்த ஆவணத்திற்கு) ஒன்பது மாதம்தான் வேலிடிட்டி.. இதையெல்லாம் படிங்க... சும்மா, சன் நியூஸ் விவாதம் பார்த்துட்டு வந்து கொமெண்ட் எழுதினா, இப்பிடித்தான் அய்யரே... மோடி அவர்கள் வியாதியை பரப்புனாரு ன்னு சொன்னாதான் சந்தோசமா இருப்பீங்க போல. நல்ல மூளை, நல்ல மனசு...நல்ல வளர்ப்பு...கண்ணை திறந்து பாருங்க......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X