75 வது சுதந்திர தின விழா கொண்டாட்ட ஒத்திகை ஜோர்..

Updated : ஆக 13, 2021 | Added : ஆக 13, 2021
Share
Advertisement
75 வது சுதந்திர தின விழாவினை கொண்டாட நாடு தயராகிவருகிறது.இதற்காக இன்று நடைபெற்ற ஒத்திகை மிக உற்சாகமாக காணப்பட்டது.ஒலிம்பிக்கில் கிடைத்த பதக்கங்களும், குறைந்துவரும் கொரோனா தொற்றும், 75 வது என்ற அந்த எண்ணிக்கையும் சுதந்திர தின விழாவிற்கு கூடுதல் உத்வேகம் தந்துள்ளது.,டில்லியில் உள்ள செங்கோட்டை அலங்கரிக்கப்பட்டு வருகிறது பள்ளிக்குழந்தைகள் நிறைய



latest tamil news


75 வது சுதந்திர தின விழாவினை கொண்டாட நாடு தயராகிவருகிறது.இதற்காக இன்று நடைபெற்ற ஒத்திகை மிக உற்சாகமாக காணப்பட்டது.


latest tamil news


ஒலிம்பிக்கில் கிடைத்த பதக்கங்களும், குறைந்துவரும் கொரோனா தொற்றும், 75 வது என்ற அந்த எண்ணிக்கையும் சுதந்திர தின விழாவிற்கு கூடுதல் உத்வேகம் தந்துள்ளது.


latest tamil news


Advertisement

,டில்லியில் உள்ள செங்கோட்டை அலங்கரிக்கப்பட்டு வருகிறது பள்ளிக்குழந்தைகள் நிறைய பேர் பங்கேற்பர் என தெரிகிறது.சுதந்திர தின விழாவின் போது எப்படி வருவார்களோ அதே போல முழுமையான சீருடையுடன் ராணுவத்தினர் மற்றும் போலீசார் பல மாநிலங்களில் அணிவகுத்து வந்தனர்.


latest tamil news


டில்லியில் ஹெலிகாப்டர் மூலமாக மலர் துாவுவது,தேசிய கொடியினை ஏந்தியபடி பாரசூட்டில் குதிப்பது என மக்களை மகிழ்விக்கப் போகும் பல நிகழ்வுகளுக்கான ஒத்திகை பிரமாதமாக இருந்தது.


latest tamil news


அணிவகுப்புகள் மட்டுமின்றி வாரணாசி போன்ற இடங்களில் மக்கள் பங்கேற்ற மாராத்தான் ஒட்டம் நடைபெற்றது.மும்பையில் இந்தியா கேட் அருகே உள்ள கடலில் இறங்கி ராணுவத்தினர் உடற்பயிற்சி செய்தனர்.ஹைதரபாத்தில் உள்ள ஏரியில் பாய்மர படகுகளின் அணிவகுப்பு நடந்தது,பிகானீரில் ராணுவத்தினரின் சாகச மோட்டார் பைக் பயணம் நடந்தது.


latest tamil news


இதையெல்லாம் பார்க்கும் போது நாளை மறுதினம் 75 வது சுதந்திர தினவிழா குதுாகலமாகவும் உற்சாகமாகவும் புது உத்வேகத்துடனும் நடைபெறப் போவது உறுதி என்பது தெரிகிறது.சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கோட்டையில் முதல் முறையாக கொடியேற்றப் போகிறார் என்பதால் கொஞ்சம் கூடுதல் சிறப்புடன் விழாவினை நடத்துவர் என்று எதிர்பார்க்கலாம்.
-எல்.முருகராஜ்.


Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X