சம்பவம் செய்தி

தமிழ்நாடு

திருவண்ணாமலையில் லாரி - கார் மோதல்: 6 பேர் பலி

Updated : ஆக 13, 2021 | Added : ஆக 13, 2021 | கருத்துகள் (9)
Share
Advertisement
திருவண்ணாமலை: போளூர் அருகே காரும் லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில், மூன்று மாத குழந்தை உள்பட, ஆறு பேர் சம்பவ இடத்திலேயே பலியாயினர். நான்கு பேர் படுகாயத்துடன், மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.வேலுார் மாவட்டம், விருபாட்சிபுரத்தை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த, 10 பேர், மாருதி சுசுகி காரில், திருவண்ணாமலை மாவட்டம், போளூர் அடுத்த புதுார்
திருவண்ணாமலை, வேன், லாரி, மோதல், பலி, உயிரிழப்பு, சாலைவிபத்து

திருவண்ணாமலை: போளூர் அருகே காரும் லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில், மூன்று மாத குழந்தை உள்பட, ஆறு பேர் சம்பவ இடத்திலேயே பலியாயினர். நான்கு பேர் படுகாயத்துடன், மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.

வேலுார் மாவட்டம், விருபாட்சிபுரத்தை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த, 10 பேர், மாருதி சுசுகி காரில், திருவண்ணாமலை மாவட்டம், போளூர் அடுத்த புதுார் கிராமத்தில் உள்ள குல தெய்வ கோவிலிற்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது, வேலுார் - திருவண்ணாமலை சாலையில், சந்தவாசல் அடுத்த முனியந்தாங்கல் கூட்ரோடு அருகே பிற்பகல் 2 மணி அளவில் சென்று கொண்டிருந்தபோது, திருவண்ணாமலையிலிருந்து, வேலுார் நோக்கி சென்ற லாரி, கார் மீது மோதியது.


latest tamil news


இதில், காரில் பயணம் செய்த, 3 மாத குழந்தை, 4 பெண்கள், ஒரு ஆண் என ஆறு பேர் சம்பவ இடத்திலேயே பலியாயினர். மேலும், படுகாயமடைந்த நான்கு பேர், சிகிச்சைக்காக வேலுார் அடுக்கம்பாறை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இது குறித்து சந்தவாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


latest tamil news


Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
M senthilkumar - Devakottai,இந்தியா
13-ஆக-202121:51:35 IST Report Abuse
M senthilkumar சாலை விதிகளை பின்பற்றி மிதமான வேகத்தில் சென்றால் விபத்துகே விபத்து ஏற்படும் கடவுளைச் சொல்லி ஒன்றும் மில்லை
Rate this:
Cancel
N.Purushothaman - Cuddalore,மலேஷியா
13-ஆக-202120:16:50 IST Report Abuse
 N.Purushothaman இரண்டு ஓட்டுனரில் யாராவது ஒருவர் கண் அயர்ந்திருக்க வாய்ப்பு உள்ளது ...பிஞ்சு குழந்தையும் கருகியது நெஞ்சை உருக்குகிறது ...ஒரு காரில் பத்து பேர் அடிச்சிக்கிட்டு போவதெல்லாம் கொடுமையான விஷயம் ...
Rate this:
Cancel
பாமரன் - நம்மூர்தான்,இந்தியா
13-ஆக-202120:05:45 IST Report Abuse
பாமரன் ஆழ்ந்த இரங்கல்கள்... மாருதியின் கார்களில் ஆம்னிக்கு அடுத்த மிகவும் பாதுகாப்பற்ற மாடல் எர்டிகா... இதன் கட்டுமானம் கிட்டத்தட்ட ஸ்விஃப்ட் மாடலை சேர்ந்தது.. இதன் அதிகாரப்பூர்வ கெபாசிடி ஏழு நபர்கள்... அதுவே மிகவும் அதிகம்... அதில் 11 பேர் சென்றது மிகவும் ரிஸ்க்... ஆழ்ந்த அனுதாபங்கள்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X