தலிபான்கள் பிடியில் கந்தகார்: அதிகாரிகள், போலீசார் சரண்

Updated : ஆக 13, 2021 | Added : ஆக 13, 2021 | கருத்துகள் (6)
Share
Advertisement
காபூல்: ஆப்கனில் நாளுக்கு நாள் ஆதிக்கம் செலுத்தி வரும் தலிபான்கள் கந்தகார் நகரை கைப்பற்றினர்.ஆப்கானிஸ்தானில் இருந்து இம்மாத இறுதிக்குள் அமெரிக்க படைகள் முழுமையாக வெளியேற உள்ளன. இதையடுத்து ஆப்கனை மீண்டும் கைப்பற்ற தலிபான் பயங்கரவாதிகள் ராணுவத்துடன் கடுமையாக போரிட்டு வருகின்றனர். அதில் பல மாகாணங்களை கைப்பற்றி வருகின்றனர்.இந்நிலையில், அந்நாட்டின் இரண்டாவது
தலிபான், கந்தகார், ஆப்கன், ஆப்கானிஸ்தான்,

காபூல்: ஆப்கனில் நாளுக்கு நாள் ஆதிக்கம் செலுத்தி வரும் தலிபான்கள் கந்தகார் நகரை கைப்பற்றினர்.

ஆப்கானிஸ்தானில் இருந்து இம்மாத இறுதிக்குள் அமெரிக்க படைகள் முழுமையாக வெளியேற உள்ளன. இதையடுத்து ஆப்கனை மீண்டும் கைப்பற்ற தலிபான் பயங்கரவாதிகள் ராணுவத்துடன் கடுமையாக போரிட்டு வருகின்றனர். அதில் பல மாகாணங்களை கைப்பற்றி வருகின்றனர்.

இந்நிலையில், அந்நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய நகரமான கந்தகாரை கடும் மோதலுக்கு பின்னர் தலிபான்கள் கைப்பற்றினர். இதனால், அந்நகர வாசிகள் பெரும்பாலானோர் அங்கிருந்து வெளியேறியுள்ளனர். பலர், வீடுகளுக்கு உள்ளேயே பதுங்கி உள்ளனர்.


சரண்

ஆப்கனின் ஹீரட் நகரம் தலிபான்களிடம் வீழ்ந்ததை தொடர்ந்து, அந்நகர கவர்னர் உள்ளிட்ட அனைத்து அரசு அதிகாரிகள், போலீஸ் தலைவர், உள்நாட்டு பாதுகாப்பிற்கான துணை அமைச்சர் உள்ளிட்டோர் சரணடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


latest tamil newsராணுவ உதவி

இந்நிலையில், அந்நாட்டில் உள்ள தூதரக அதிகாரிகள் மற்றும் தங்கள் நாட்டு குடிமக்களை பாதுகாப்பாக அழைத்து செல்வதற்கு அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் கனடா நாடுகள் ராணுவத்தை அனுப்பி வைக்க உள்ளதாக அறிவித்து உள்ளன.


எச்சரிக்கை

ஆப்கனில் நடக்கும் உள்நாட்டு போர் காரணமாக அங்கு உணவு பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உள்ளதாக எச்சரித்துள்ள ஐக்கிய நாடுகள் சபை, தலிபான்கள் காபூலை கைப்பற்றும் பட்சத்தில், அந்நாட்டு மக்கள் மோசமான விளைவுகளை சந்திக்க வாய்ப்பு உள்ளதாக தெரிவித்து உள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
13-ஆக-202121:32:16 IST Report Abuse
ramkumar Its epicentre of Terrorist culture, basically Anti civilization, Anti Human. Instigated by Pak like nations. World nations should smash this culture,otherwise only Persian desert culture of stone age alone can exist in all places. Slave women markets will crop up. Sad development for India. Pity is some nations want this terrorism/Barbarianism only.
Rate this:
Cancel
Marai Nayagan - Chennai,இந்தியா
13-ஆக-202119:51:09 IST Report Abuse
Marai Nayagan மூர்க்க கூட்டம் திருந்த மாட்டார்கள். முற்றிலும் அழித்து ஒழித்தால்தான் விடிவு மக்களுக்கு. அமெரிக்க ராணுவம் செய்ய தவறியது. வாய்ப்பு கிடைப்பின் இந்திய செய்து உலக அமைதிக்கு வித்திட வேண்டும்
Rate this:
Cancel
N. Srinivasan - Chennai,இந்தியா
13-ஆக-202118:37:40 IST Report Abuse
N. Srinivasan இந்த தீவிரவாதிகள் எப்படி நாட்டை நடத்தப்போகிறார்கள் என்பது புரியவில்லை. வெறும் ஆயுதங்களை வைத்து மற்ற எந்த நாட்டுடன் உறவு இல்லை. இவர்களுக்கு பின்னால் ஏதோ ஒரு நாடு உதவி புரிகின்றது என்பது தெரிகிறது. அதுவே பாகிஸ்தான் அகா இருந்தால் நமக்கு மிகவும் கஷ்டம். கடவுள் காப்பாற்ற வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X