2022 ஜூலை முதல் ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்களுக்கு தடை| Dinamalar

பொது செய்தி

இந்தியா

2022 ஜூலை முதல் ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்களுக்கு தடை

Updated : ஆக 13, 2021 | Added : ஆக 13, 2021 | கருத்துகள் (7)
Share
புதுடில்லி: ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்குகளுக்கு மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் தடை விதித்துள்ளது. இது அடுத்த ஆண்டு ஜூலை 1 முதல் அமலுக்கு வருகிறது.இது தொடர்பாக ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்குகளுக்கு தடை விதிக்கும், பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை திருத்த சட்டம் 2021-ஐ மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத்துறை அமைச்சகம்
பிளாஸ்டிக், தடை, மத்திய அரசு

புதுடில்லி: ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்குகளுக்கு மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் தடை விதித்துள்ளது. இது அடுத்த ஆண்டு ஜூலை 1 முதல் அமலுக்கு வருகிறது.

இது தொடர்பாக ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்குகளுக்கு தடை விதிக்கும், பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை திருத்த சட்டம் 2021-ஐ மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.


latest tamil news


இது குறித்த அறிக்கையில், ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்குகள் உற்பத்தி, இறக்குமதி, விநியோகம், விற்பனை மற்றும் பயன்பாட்டிற்கு தடை விதிக்கப்படுகிறது. இந்த உத்தரவு 2022 ஜூலை 1 முதல் அமலுக்கு வருகிறது எனக்கூறப்பட்டு உள்ளது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X