டுவிட்டர் இந்தியா பிரிவு தலைவர் அமெரிக்காவிற்கு மாற்றம்| Dinamalar

டுவிட்டர் இந்தியா பிரிவு தலைவர் அமெரிக்காவிற்கு மாற்றம்

Updated : ஆக 13, 2021 | Added : ஆக 13, 2021 | கருத்துகள் (2)
புதுடில்லி: காங்.,தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு கட்சிதலைவர்களின் டுவிட்டர் கணக்குகள் முடக்கப்பட்ட விவகாரத்தை அடுத்து அதன் இந்திய பிரிவு தலைவர் மணீஷ் மகேஸ்வரி அமெரிக்காவிற்கு மாற்றப்பட்டார். டுவிட்டர் இந்தியாவின் பிரிவு தலைவராக செயல்பட்டு வந்தவர் மணீஷ் மகேஸ்வரி. சமீப காலமாக காங்.,கட்சி தலைவர்களின் டுவிட்டர்கள் மற்றும் அதன் கட்சி தொண்டர்களின் டுவிட்டர்கள்

புதுடில்லி: காங்.,தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு கட்சிதலைவர்களின் டுவிட்டர் கணக்குகள் முடக்கப்பட்ட விவகாரத்தை அடுத்து அதன் இந்திய பிரிவு தலைவர் மணீஷ் மகேஸ்வரி அமெரிக்காவிற்கு மாற்றப்பட்டார்.



latest tamil news



டுவிட்டர் இந்தியாவின் பிரிவு தலைவராக செயல்பட்டு வந்தவர் மணீஷ் மகேஸ்வரி. சமீப காலமாக காங்.,கட்சி தலைவர்களின் டுவிட்டர்கள் மற்றும் அதன் கட்சி தொண்டர்களின் டுவிட்டர்கள் கணக்குகள் முடக்கப்பட்டன. மத்திய அரசின் அழுத்தம் காரணமாகவே காங்., கட்சி தலைவர்களின் டுவிட்டர் கணக்குகள், தொண்டர்கள் 5 ஆயிரம் பேர்களின் டுவிட்டர் கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டுள்ளதாக அக்கட்சி புகார் கூறியது. மேலும் அந்நிறுவனம் ஒரு தலைப்பட்சமாக நடந்து கொள்வதாகவும் குற்றம் சுமத்தப்பட்டது.


latest tamil news



இதனையடுத்து டுவிட்டர் நிறுவனத்தின் இந்திய பிரிவு அதிகாரியாக செயல்பட்டு வந்த மணீஷ் மகேஸ்வரி அமெரிக்காவுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X