சென்னை:கொரோனா தொற்று காரணமாக 1 முதல் 12 ம் வகுப்புவரையிலான பள்ளி பாடத்திட்டத்தை தமிழக பள்ளிக்கல்வித்துறை குறைத்துள்ளது
![]()
|
இது குறித்து தமிழக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது: கொரோனா பரவல் காரணமாகபள்ளிகள் சரிவர இயங்காததால் அனைத்து பாடத்திட்டஙகளையும் நடத்தி முடிக்க முடியாத சூழ்நிலை இருப்பதால் இத்தகைய நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
![]()
|
இதனையடுத்து 1 முதல் 12 ம் வகுப்புவரையிலான பள்ளி பாடத்திட்டம் 50 சதவீதம் வரையில் குறைக்கப்பட்டுள்ளது. அதன் விபரம் வருமாறு
1,2 ம் வகுப்புகளுக்கு 50 சதவீதம்
3,4 ம் வகுப்புகளுக்கு 49 சதவீதம்
5 ம் வகுப்பிற்கு 48 சதவீதம்
6 ம் வகுப்பிற்கு 47 சதவீதம்
7,8 ம் வகுப்புகளுக்கு 46 சதவீதம்
9 ம் வகுப்பிற்கு 38 சதவீதம்
10 ம் வகுப்பிற்கு 39 சதவீதம்
11,12 ம் வகுப்புகளுக்கு 35சதவீதம் வரையிலும் குறைக்கப்பட்டுள்ளதாக தமிழக பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. போட்டித் தேர்வில் பங்கேற்க விரும்புவர்கள் முழு பாடத்திட்டத்தையும் படித்துக்கொள்ள வேண்டியது.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement