சென்னை: தி.மு.க., அரசு பட்ஜெட்டில் பெட்ரோல் மீதான கலால் வரியை ரூ.3 குறைத்துள்ளது. நாளை (ஆக., 14) முதல் இவ்விலைக் குறைப்பு வாகன ஓட்டிகளுக்கு கிடைக்கும். இருப்பினும் டீசல் விலையை குறைக்காததால் சரக்கு போக்குவரத்து துறையினர், வியாபாரிகள், மீனவர்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.
![]()
|
தி.மு.க., தலைவர் ஸ்டாலின் கடந்த மார்ச் மாதம் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகளில் பெட்ரோல் மீதான கலால் வரி ரூ.5-ம், டீசல் மீதான கலால் வரி ரூ.4-ம் குறைக்கப்படும் என்றார். தொடர்ந்து சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று கடந்த மே 7 அன்று தி.மு.க., ஆட்சி அமைந்தது. தேர்தல் வாக்குறுதிகளில் அறிவித்தப்படி கொரோனா நிவாரணமாக குடும்ப அட்டைக்கு ரூ.4,000, மகளிருக்கு இலவச பேருந்து பயணம், ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.3 குறைப்பு போன்றவற்றை அமல்படுத்தினார். 2 மாதங்களுக்கு மேல் ஆகியும் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படாமல் இருந்தது. இதனை எதிர்க்கட்சிகள் விமர்சித்தன. கொரோனா 2-ம் அலையால் பல ஆயிரம் கோடி ரூபாய் எதிர்பாராத செலவுகள் ஏற்பட்டிருப்பதாக நிதியமைச்சர் விளக்கமளித்தார்.
இந்நிலையில் ரூ.5 குறைப்பதாக சொன்ன பெட்ரோல் மீதான கலால் வரியை, இன்றைய பட்ஜெட்டில் ரூ.3 மட்டும் குறைத்துள்ளனர். டீசல் விலையை ரூ.4 குறைப்பதாக அறிவித்து இருந்தனர். ஆனால் பட்ஜெட்டில் குறைக்கப்படவில்லை. பெட்ரோல் விலை குறைப்பால் இருசக்கர வாகன ஓட்டிகள், பெட்ரோல் கார் உரிமையாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கார் ஓட்டுநர்கள் பலரும் நாளை பெட்ரோல் போட்டுக்கொள்ளலாம் என இருக்கின்றனர். 35 லிட்டர் டேங்க் நிரப்புபவர்களுக்கு நூறு ரூபாய்க்கு மேல் மிச்சமாகும். இதனால் நாளை பெட்ரோல் பங்குகளில் கூட்டம் அதிகம் காணப்படும் என தெரிகிறது.
அதே சமயம் டீசல் விலையும் குறைக்கப்படும் என எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றமே எஞ்சியது. இதனால் டீசலில் ஓடும் சரக்கு வாகனம் வைத்திருப்போர், கால் டாக்சி ஓட்டுநர்கள், லோடு ஆட்டோ மற்றும் பயணிகள் ஆட்டோ ஓட்டுநர்கள், படகுகளுக்கு டீசல் வாங்கும் மீனவர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
![]()
|
டீசல் விலையை குறைக்கும் போது சரக்கு போக்குவரத்து கட்டணம் ஓரளவு குறைந்து, பொருட்களின் விலையும் குறையும், விலைவாசி கட்டுக்குள் இருக்கும் என்கின்றனர். மீனவர்கள் தாங்கள் ஆழ்கடலுக்கு சென்றால் 3 முதல் 6 வாரங்களுக்கு 5 ஆயிரம் முதல் 7 ஆயிரம் லிட்டர் டீசல் ஆகும். டீசல் விலையை குறைத்திருந்தால் எங்களுக்கு 20 ஆயிரம் வரை மிச்சமாகியிருக்கும் என்கின்றனர். முதல்வர் கவனத்தில் கொள்வாரா?
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement