சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வெள்ளகோவில் அருகே நூல் மில்லில் தீ விபத்து ரூ.5 லட்சம் அளவில் சேதம்

Added : ஆக 13, 2021
Share
Advertisement
காங்கேயம்:வெள்ளகோவில் அருகே நுால் மில்லில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.5 லட்சம் மதிப்பில் பொருட்கள் சேதமானது.வெள்ளகோவிலைச் சேர்ந்த தங்கராஜ்,25, என்பவர், வெள்ளகோவில் சுப்பிரமணியக்வுண்டன் வலசு அருகே எல்.எஸ்.எம் என்கும் நூல் மில், (கழிவு பஞ்சில் இருந்து நூல் தயாரிப்பு) கடந்த ஐந்து வருடங்களாக வைத்து நடத்தி வருகிறார். நேற்று மாலை 5:00 மணி அளவில் மில்லில் திடீரென கரும்புகை
 வெள்ளகோவில் அருகே நூல் மில்லில் தீ விபத்து ரூ.5 லட்சம் அளவில் சேதம்

காங்கேயம்:வெள்ளகோவில் அருகே நுால் மில்லில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.5 லட்சம் மதிப்பில் பொருட்கள் சேதமானது.

வெள்ளகோவிலைச் சேர்ந்த தங்கராஜ்,25, என்பவர், வெள்ளகோவில் சுப்பிரமணியக்வுண்டன் வலசு அருகே எல்.எஸ்.எம் என்கும் நூல் மில், (கழிவு பஞ்சில் இருந்து நூல் தயாரிப்பு) கடந்த ஐந்து வருடங்களாக வைத்து நடத்தி வருகிறார். நேற்று மாலை 5:00 மணி அளவில் மில்லில் திடீரென கரும்புகை வெளியேறியது. அங்குள்ள ஒரு பகுதி ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டது தெரிய வந்தது. அக்கம் பக்கம் உள்ளவர்கள் தீயை அணைக்க முயற்சி செய்தனர். ஆனால் தீ மளமளவென பிடித்து எரிந்தது.

தகவலந்த வெள்ளகோவில் தீயணைப்பு நிலைய அலுவலர் தனசேகரன், நிலைய போக்குவரத்து அலுவலர் வேலுச்சாமி உள்ளிட்ட குழுவின் வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, மூன்று மணி நேர போராட்டத்திற்கு பின் தீயை அணைத்தனர். இருப்பினும் நூல், இயந்திரம், கட்டடம் என ரூ.5 லட்சம் அளவிலான பொருட்கள் எரிந்து சேதமானது. மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக தெரிகிறது. இது குறித்து வெள்ளகோவில் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X