வைரஸ் பற்றி மீண்டும் விசாரணை: உலக சுகாதார நிறுவனம் கோரிக்கையை நிராகரித்தது சீனா

Updated : ஆக 13, 2021 | Added : ஆக 13, 2021 | கருத்துகள் (8)
Share
Advertisement
பெய்ஜிங்: கோவிட் வைரஸின் தோற்றம் குறித்த விசாரணையை புதுப்பிக்கும் படி உலக சுகாதார நிறுவனம் வைத்த கோரிக்கையை சீனா திட்டவட்டமாக மறுத்துவிட்டது. விசாரணை அறிவியல் பூர்வமானதாக இல்லாமல் அரசியல் நோக்கம் கொண்டதாக இருப்பதாக தெரிவித்துள்ளது.சீனாவின் வூஹான் நகரில் கடந்த 2019 இறுதியில் கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப் பட்டது. அது இயற்கையாக பரவியதா அல்லது மனித பிழையால்

பெய்ஜிங்: கோவிட் வைரஸின் தோற்றம் குறித்த விசாரணையை புதுப்பிக்கும் படி உலக சுகாதார நிறுவனம் வைத்த கோரிக்கையை சீனா திட்டவட்டமாக மறுத்துவிட்டது. விசாரணை அறிவியல் பூர்வமானதாக இல்லாமல் அரசியல் நோக்கம் கொண்டதாக இருப்பதாக தெரிவித்துள்ளது.



latest tamil news




சீனாவின் வூஹான் நகரில் கடந்த 2019 இறுதியில் கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப் பட்டது. அது இயற்கையாக பரவியதா அல்லது மனித பிழையால் வூஹான் ஆய்வகத்திலிருந்து வெளியான வைரஸா என்ற சந்தேகம் கிளம்பியது. இது தொடர்பாக உலக சுகாதார நிறுவனம் ஆய்வு செய்து உண்மையை கண்டறிய வேண்டும் என அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் அழுத்தம் தந்தன. நீண்ட காத்திருப்புக்கு பிறகு கடந்த ஜனவரி மாதம் உலக சுகாதார குழுவினருக்கு சீன அரசின் அனுமதி கிடைத்தது. இரண்டு மாதங்களாக வூகான் பரிசோதனைக் கூடத்தில் உலக சுகாதார குழுவினர் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணை பற்றி சீன குழுவினருடன் இணைந்து தயாரிக்கப்பட்ட முதல் கட்ட அறிக்கையில், வூஹான் பரிசோதனை கூடம் மூலம் வைரஸ் பரவியதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு என கூறினர். வைரஸ் எவ்வாறு பரவத் தொடங்கியது என்பது குறித்த ஒரு உறுதியான நிலையை கண்டுபிடிக்க முடியவில்லை என்றது அறிக்கை. வவ்வால்களிடமிருந்து மனிதர்களுக்கு ஏதாவது ஒரு இடைப்பட்ட விலங்கு மூலமாக பரவியதற்கான வாய்ப்புகளே அதிகம் என கூறியது.

இந்நிலையில் உலக சுகாதார நிறுவனம் வியாழனன்று, நோயின் தோற்றம் பற்றிய விசாரணையை மீண்டும் தொடங்க, ஆரம்பகால கோவிட் நோயாளிகளின் தரவுகளை பகிருமாறு சீனாவை வலியுறுத்தியது. அதனை சீனா இன்று திட்டவட்டமாக மறுத்துவிட்டது.


latest tamil news




“ஆரம்பக்கட்ட விசாரணையே போதுமானது. அறிவியல்பூர்வ விசாரணைக்கு பதில் அரசியல் நோக்கத்திற்காக மேற்கொண்டு தகவல்கள் கேட்கின்றனர். அரசியல் விசாரணையை எதிர்கின்றோம். உலக சுகாதார நிறுவனம் மற்றும் சீனாவின் கூட்டு அறிக்கையின் முடிவுகளை சர்வதேச சமூகம் மற்றும் அறிவியல் சமூகம் ஏற்றுக்கொண்டுள்ளது. இனி மேற்கொள்ளப்படும் விசாரணை புதியதாக இல்லாமல், அந்த அறிக்கையின் அடிப்படையில் தான் அமைய வேண்டும்” என கூறியுள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
N.Purushothaman - Cuddalore,மலேஷியா
14-ஆக-202106:51:20 IST Report Abuse
 N.Purushothaman ஐ நா ஒரு சக்தி வாய்ந்த அமைப்பாக இல்லை என்கிற மோதி அவர்களின் குற்றச்சாற்று உண்மையாகி உள்ளது ...சீனாவை உலக நாடுகள் தனிமைப்படுத்த சக்தி வாய்ந்த நாடுகள் ஒன்றிணைய வேண்டும் ....
Rate this:
Cancel
என்னுயிர்தமிழகமே - Ameerpet Hyderabad,இந்தியா
14-ஆக-202104:21:13 IST Report Abuse
என்னுயிர்தமிழகமே மயிலே மயிலே என்றால் இறகு போ?
Rate this:
Cancel
venkates - ngr,இந்தியா
14-ஆக-202100:26:20 IST Report Abuse
venkates சோற்றில் முழு பூசணிக்காயை மறைக்கக்கூடாது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X