சிறப்பு பகுதிகள்

டவுட் தனபாலு

'டவுட்' தனபாலு

Added : ஆக 13, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
ஓ.பி.எஸ்., - அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர்: அரசு ஊழியர்களுக்கு ஆண்டுக்கு இருமுறை வழங்கப்படும் அகவிலைப்படி உயர்வை மத்திய அரசு நிறுத்தி வைத்தது. அதை பின்பற்றி, தமிழக அரசும் நிறுத்தி வைத்தது. ஆனால் இப்போது மத்திய அரசு வழங்கி விட்டது. 20 நாட்களாகியும் தமிழக அரசு வழங்கவில்லை. வெள்ளை அறிக்கை வெளியிட்டுள்ள தமிழக அரசு அகவிலைப்படியை வழங்காதோ என, அரசு ஊழியர்கள்

'டவுட்' தனபாலு

ஓ.பி.எஸ்., - அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர்: அரசு ஊழியர்களுக்கு ஆண்டுக்கு இருமுறை வழங்கப்படும் அகவிலைப்படி உயர்வை மத்திய அரசு நிறுத்தி வைத்தது. அதை பின்பற்றி, தமிழக அரசும் நிறுத்தி வைத்தது. ஆனால் இப்போது மத்திய அரசு வழங்கி விட்டது. 20 நாட்களாகியும் தமிழக அரசு வழங்கவில்லை. வெள்ளை அறிக்கை வெளியிட்டுள்ள தமிழக அரசு அகவிலைப்படியை வழங்காதோ என, அரசு ஊழியர்கள் அஞ்சுகின்றனர்.

'டவுட்' தனபாலு: அகவிலைப்படி விவகாரத்தில் மத்திய அரசை பின்பற்றிய மாநில அரசு, பிற விதங்களிலும் பின்பற்ற தடையாக இருப்பது என்னவோ என்பதே, நடுநிலையாளர்களின் 'டவுட்!' ஏனெனில், மத்திய, மாநில அரசுகள் மக்கள் நலனுக்காகத் தானே செயல்பட வேண்டும்... மத்திய அரசு போலவே மாநில அரசும் செயல்பட்டால் நன்றாகத் தானே இருக்கும்!


அ.ம.மு.க., பொதுச் செயலர் தினகரன்
: அறிவிக்கப்படாத மின் கட்டண உயர்வு, மாநிலம் முழுவதும் செயல்படுத்தப்படுகிறது. இது குறித்து, தமிழக அரசு உரிய விளக்கம் அளிக்க வேண்டும். இந்நிலையில், வெளிப்படையான நிர்வாகம் பற்றி நிறைய பேசும் தி.மு.க., அரசு, மின் கட்டண விவகாரத்தில் மக்களிடம் மறைமுகமாக கட்டணக் கொள்ளையை அரங்கேற்றுவது ஏன்?

'டவுட்' தனபாலு: ஆட்சிக்கு வந்த நாள் முதல், தி.மு.க., அரசுக்கு சிக்கலாக இருப்பது மின்சாரத்துறை தான். இதனால், அந்த துறைக்கு தலைமை வகிப்பவர் மாற்றப்படுவாரோ என்ற 'டவுட்' தி.மு.க., வட்டாரங்களில் உலா வருகிறது. ஏனெனில், அரசின் வெளிப்படைத் தன்மைக்கு மின் துறை தடையாக இருக்கிறதோ என்ற 'டவுட்' பலதரப்பிலும், ஆளும் தரப்பில் உருவாகி விட்டது!


தமிழக காங்., தலைவர் அழகிரி
: காங்., முன்னாள் தலைவர் ராகுலின், 'டுவிட்டர்' கணக்கு மட்டும் முடக்கப்படவில்லை. மூத்த தலைவர்கள் பலரின், டுவிட்டர் சமூகவலைதள கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளன. இதன் மூலம், பா.ஜ., அரசுக்கு எதிராக சமூக ஊடகங்களில் எந்த பதிவும் வெளிவரக் கூடாது என்ற நோக்கத்தில், மத்திய அரசு செயல்படுவது ஜனநாயகத்தை குழி தோண்டி புதைக்கும் செயலாகும்.

'டவுட்' தனபாலு: கற்பழிக்கப்பட்ட சிறுமி மற்றும் குடும்பத்தினரின் அடையாளத்தை காட்டக் கூடாது என்ற சட்டம் இருக்கும் போது, அந்த சிறுமியின் பெற்றோரை கட்டிப்பிடித்து அழுது, ஆர்ப்பாட்டம் செய்த ராகுல், ஆட்சேபகரமான விஷயங்களை 'டுவிட்டர்' சமூகவலைதளத்தில் தொடர்ந்து பகிர்ந்து வந்துள்ளார். இவரை இப்படியே விட்டால், ரொம்ப சிக்கல் ஏற்படும் என கருதி, டுவிட்டர் நிறுவனம் இந்த நடவடிக்கை எடுத்துள்ளதோ என்பது தான், பலரின் 'டவுட்!'

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
a natanasabapathy - vadalur,இந்தியா
14-ஆக-202107:42:02 IST Report Abuse
a natanasabapathy பப்பு வுக்கும் அழகிரிக்கும் சட்டமும் மனிதாபிமானமும் தெரியாது தேவை இல்லாத விஷயங்களை செய்து வருகின்றனர் நாட்டை குட்டிசுவராக்கியது காங்கிரஸ் என்பது சிறுவர்களுக்கும் நன்கு தெரியும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X