பழைய வாகன அழிப்பு கொள்கை பொருளாதார வளர்ச்சிக்கு உதவும்

Updated : ஆக 15, 2021 | Added : ஆக 13, 2021 | கருத்துகள் (8)
Share
Advertisement
காந்தி நகர்,:''பழைய வாகனங்களை அழிப்பது தொடர்பான தேசிய கொள்கை நம் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பெரிதும் உதவும்,'' என, பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.குஜராத்தில் முதல்வர் விஜய் ரூபானி தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. காந்தி நகரில் முதலீட்டாளர்கள் மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி 'வீடியோ கான்பரன்சிங்' வழியாக நேற்று துவக்கி வைத்தார்.சுற்றுச்சூழல்
பழைய வாகனம், அழிப்பு கொள்கை,பொருளாதார வளர்ச்சி,


காந்தி நகர்,:''பழைய வாகனங்களை அழிப்பது தொடர்பான தேசிய கொள்கை நம் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பெரிதும் உதவும்,'' என, பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.குஜராத்தில் முதல்வர் விஜய் ரூபானி தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. காந்தி நகரில் முதலீட்டாளர்கள் மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி 'வீடியோ கான்பரன்சிங்' வழியாக நேற்று துவக்கி வைத்தார்.


சுற்றுச்சூழல் பாதுகாப்பு



அப்போது பழைய வாகனங்கள் அழிப்பு தொடர்பான தேசிய கொள்கையை பிரதமர் மோடி அறிமுகப்படுத்தினார். அப்போது அவர் பேசியதாவது:பழைய வாகன அழிப்பு கொள்கை, நாட்டின் நீடித்த பொருளாதார வளர்ச்சிக்கு பெரிதும் உதவியாக இருக்கும். சுற்றுச்சூழல் பாதுகாப்பை மனதில் வைத்து இந்த கொள்கை வடிவமைக்கப்பட்டுள்ளது.
பழைய மற்றும் பயன்படுத்த முடியாத வாகனங்களை மறுசுழற்சி முறைக்கு உட்படுத்த இந்த கொள்கையில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது; இது, இந்தியாவில் மோட்டார் வாகன துறையின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவியாக இருக்கும். சாலைகளில் ஓடும் தரமற்ற, பழைய வாகனங்களை அறிவியல் ரீதியாக அகற்ற இந்த கொள்கை வழிவகுத்துள்ளது.கழிவுகளை செல்வமாக்கும் திட்டத்துக்கு இந்த கொள்கை மிகவும் உறுதுணையாக இருக்கும்.


மறு சுழற்சி மையம்



இந்த கொள்கையால், வாகனங்களால் மாசு ஏற்படுவது குறையும். மோட்டார் வாகன தயாரிப்பில் இந்தியா தன்னிறைவு பெற இந்த கொள்கை வழிவகுக்கும்.
தன் பழைய வாகனத்தை மறுசுழற்சிக்கு தருபவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும். அவர்கள் புதிய வாகனம் வாங்கும்போது மீண்டும் பதிவு கட்டணம் செலுத்தத் தேவையில்லை. சாலை வரிகளிலும் அவர்களுக்கு சலுகை அளிக்கப்படும்.கடந்த ஆண்டு 23 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பழைய உருக்குகளை நாம் இறக்குமதி செய்தோம்.

புதிய கொள்கையின்படி இனி பழைய இரும்பு, உருக்குகளை பெருமளவில் இறக்குமதி செய்ய தேவையிருக்காது.

குஜராத் மாநிலம் பாவ்நகரில் உள்ள கப்பல் மறுசுழற்சி மையம், வாகனங்கள் மறுசுழற்சி மையமாகவும் செயல்பட வேண்டும். இவ்வாறு பிரதமர் பேசினார்.நிகழ்ச்சியில் குஜராத் முதல்வர் விஜய் ரூபானி, மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி ஆகியோர் பங்கேற்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
14-ஆக-202120:50:31 IST Report Abuse
முருகன் அப்படியே பழைய சட்டங்களையும் திருந்தினால் நாட்டில் குற்றங்கள் குறையும்.
Rate this:
Cancel
J.Isaac - bangalore,இந்தியா
14-ஆக-202114:48:38 IST Report Abuse
J.Isaac பொருளாதார வளர்ச்சி என்று சொல்லி லாபத்தில் இயங்கிய பொது நிறுவனங்களை கூட தனியாருக்கு தாரை வார்த்தாச்சு. இப்பொழுது பழைய இரும்பு வியாபாரம் அரசே நடத்துகிறது.
Rate this:
Cancel
அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா
14-ஆக-202114:18:33 IST Report Abuse
அசோக்ராஜ் "எதிரிகளை உற்பத்தி செய்வது எப்படி?" என்று மோடி புஸ்தகம் எழுதலாம். Fully qualified to write such a book.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X