சிறப்பு பகுதிகள்

இது உங்கள் இடம்

விட்டு கொடுப்பரா எம்.எல்.ஏ.,க்கள்?

Added : ஆக 13, 2021 | கருத்துகள் (5)
Share
Advertisement
விட்டு கொடுப்பரா எம்.எல்.ஏ.,க்கள்?க.அருண்குமார், நெல்லையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் வானத்தை வில்லாக வளைப்போம், மணலை கயிறாக திரிப்போம்' என்ற ரீதியில் பலவிதமான வாக்குறுதிகளை அள்ளி வீசினர், தி.மு.க.,வினர்.இப்போது ஆட்சி கட்டிலில் அமர்ந்த பின், அந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாது என்று உணர்ந்து பேய் முழி முழிக்கின்றனர்,


விட்டு கொடுப்பரா எம்.எல்.ஏ.,க்கள்?க.அருண்குமார், நெல்லையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் வானத்தை வில்லாக வளைப்போம், மணலை கயிறாக திரிப்போம்' என்ற ரீதியில் பலவிதமான வாக்குறுதிகளை அள்ளி வீசினர், தி.மு.க.,வினர்.இப்போது ஆட்சி கட்டிலில் அமர்ந்த பின், அந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாது என்று உணர்ந்து பேய் முழி முழிக்கின்றனர், அதே தி.மு.க.,வினர்!தமிழக அரசு மீது இருக்கும் 5.70 லட்சம் கோடி ரூபாய் கடன் சுமையே, தங்கள் வாக்குறுதிகளை நிறைவேற்ற இயலாததற்கு காரணம் என, பிரச்னையை திசை திருப்பி ஒதுங்கி கொள்ள முயற்சிக்கிறது, தி.மு.க., அரசு.'எதை தின்றால் பித்தம் தீரும்' என்பது போல, எந்தெந்த செலவினங்களின் மீது, 'கை' வைத்தால் கொஞ்சமாவது சேமிக்கலாம் என, தமிழக அரசு யோசிக்கிறது போலும்!வீடுகளுக்கு 100 யூனிட் இலவச மின்சாரத்தை விரும்பாதோர், அதை அரசுக்கு விட்டுக் கொடுக்கும் வசதியை துவக்க, தமிழக அரசு முடிவு செய்துள்ளதாம்.இதை விட நல்ல யோசனை ஒன்று இருக்கிறது...தி.மு.க., மற்றும் அதன் கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.,க்கள் 159 பேர் உள்ளனர். அவர்கள் அத்தனை பேரும் கோடீஸ்வரர்கள் தானே தவிர, யாரும் அன்றாடங்காய்ச்சி கிடையாது.ஒரு எம்.எல்.ஏ.,வுக்கு ஊதியம் மற்றும் இதர படிகளாக, மாதம்தோறும் 2 லட்சம் ரூபாய் அரசு வழங்குகிறது. 159 பேருக்கும் மாதம்தோறும் 3.18 கோடி ரூபாய் வழங்குகிறது.அடுத்த ஐந்து ஆண்டுகளில், 200 கோடி ரூபாய் அவர்களுக்கு செலவு செய்தாக வேண்டிய நிர்ப்பந்தத்தில், அரசுஉள்ளது.மக்கள் சேவை செய்ய வந்திருக்கும், தி.மு.க., மற்றும் அதன் கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.,கள், தங்கள் ஊதியம் மற்றும் இதர படிகளை விட்டுக் கொடுக்க முன் வந்தால் பாராட்டலாம். செய்வரா?


விளையாட்டு வீரர்களை உருவாக்குவோம்!ரா.எத்திராஜன், சர்வதேச டேபிள் டென்னிஸ் கூட்டமைப்பில் சான்றிதழ் பெற்ற பயிற்சியாளர், சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: சில தினங்களுக்கு முன் நிறைவடைந்த 32வது ஒலிம்பிக் போட்டியில், 205 நாடுகளைச் சேர்ந்த 11 ஆயிரம் வீரர்கள் பங்கேற்றனர்.ஒலிம்பிக் போட்டியில், 33 வகையான விளையாட்டுகளில் 46 பிரிவுகள் இடம் பெற்றன. இந்தியாவின் சார்பில் 126 வீரர்கள், 18 விளையாட்டுகளில் பங்கேற்றனர்.இதில் ஒரு தங்கம், இரண்டு வெள்ளி, நான்கு வெண்கலம் என ஏழு பதக்கங்கள் வென்று, இதுவரையிலான ஒலிம்பிக்கில் அதிகபட்ச பதக்கங்களை நம் நாடு வென்றிருக்கிறது.வெற்றி பெற்ற வீரர்களுக்கு வாழ்த்து சொல்வது, பரிசு வழங்குவதோடு நம் கடமை முடிந்து விடவில்லை.பெரும் மக்கள்தொகை உடைய நம் நாட்டிற்கு, இரட்டை இலக்கத்திலாவது பதக்கங்கள் கிடைத்திருக்க வேண்டும்.
இந்த தருணத்தில் அரசும், பொதுமக்களும் ஒரு முக்கிய உறுதிமொழி எடுத்துக் கொள்ள வேண்டும்.சிறந்த விளையாட்டு வீரர்களை கண்டறிந்து, அவர்களுக்கு தேவையான வசதிகளை, அரசு ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். பொருளாதாரத்தில் கீழ்நிலையில் இருப்போருக்கு நிதியுதவி அளித்து, பயிற்சி அளிக்க வேண்டும்.பெற்றோர் தங்கள் குழந்தைகளை விளையாட்டுப் போட்டியில் பங்கேற்க துணை புரிய வேண்டும்; அவர்களுக்கு தேவையான ஊக்கத்தை அளிக்க வேண்டும்.விளையாட்டிற்கு ஒதுக்கும் நேரம், நம் உடல் நலத்திற்கு செலுத்தும் சிறந்த முதலீடு.மாரடைப்பு, உடல் பருமன், மன அழுத்தம் போன்ற ஏராளமான நோய்களில் இருந்து விடுவிப்பது, விளையாட்டு என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.கல்வி நிலையங்களில் பாடத்திற்கு ஒதுக்கப்பட்டிருக்கும் நேரத்தை போல விளையாட்டிற்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையின்படி, விளையாட்டை கட்டாய பாடமாக அறிவித்திருப்பது பாராட்டுக்குரியது.விளையாட்டு வீரர்களுக்கு நிதி பிரச்னை பெரும் சவாலாக உள்ளது. அரசும், தனியார் நிறுவனங்களும் அவர்களுக்கு தேவையான விளையாட்டு உபகரணங்களை வழங்கினால், அடுத்த ஒலிம்பிக்கில் நம் தேசம் பெரிய அளவில் சாதிக்க முடியும்.
ஊர் கூடி ஆங்காங்கே விளையாட்டு மைதானங்களை அமைப்போம்; வலிமையான வீரர்களை உருவாக்குவோம்!


ஓட்டைகளைஅடையுங்கள்!வி.ஹெச்.கே.ஹரிஹரன், திண்டுக்கல்லிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: நம் மாநிலத்தில் அரசு பஸ்கள் மட்டும் நஷ்டத்தில் இயங்குவது ஏன்?கடந்த 10 ஆண்டுகளில் அரசு போக்குவரத்து கழகம், 33 ஆயிரம் கோடி ரூபாய் நஷ்டம் ஈட்டியுள்ளது' என, அத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார். ஊழலும், நிர்வாக முறைகேடும் தான் இதற்கு காரணம் என்றும் அமைச்சர் சுட்டிக் காட்டியுள்ளார். அவரின் கூற்று 100க்கு 100 உண்மையே!
அரசு பஸ்களில் உள்ள இன்ஜின் உள்ளிட்ட உதிரிப்பாகங்கள் தரமானதாகவும், முறையான பராமரிப்புடன் இருந்தால் சேதமடைவது குறையும்.ஒரே வழித்தடத்தில் நிமிடத்துக்கு ஒரு அரசு பஸ் இயக்குவதால், வருவாய் மிகவும் குறைகிறது. பெண்களுக்கு இலவச பயணம் என்ற அறிவிப்பால், அரசு பஸ் வருவாய் மேலும் குறைந்துவிட்டது.பஸ் புறப்படும் நேரத்தை சீரமைக்க வேண்டும். பராமரிப்பு பணிக்கு ஆர்வம் மற்றும் திறமையுடையோரை நியமிக்க வேண்டும்.ஓட்டுனர், நடத்துனர் தட்டுப்பாடு காரணமாக 'ட்ரிப்' ரத்து செய்யக் கூடாது. தனியார் பேருந்துக்கு இணையாக அரசு பஸ்சை சுத்தமாக பராமரிக்க வேண்டும்.எந்த ஆட்சி நடந்தாலும், அரசு போக்குவரத்து கழகம் நஷ்டத்தில் தான் இயங்குகிறது. அதற்கு காரணம் நிர்வாக சீர்கேடும், ஊழலும் தான்.
அரசு போக்குவரத்து கழகத்தில் தேவையற்ற பதவிகள் நிறைய உள்ளன. அப்பதவியில் இருப்போருக்கு, மாதந்தோறும் பல லட்சம் ரூபாய் சம்பளம் கொடுக்கப்படுகிறது.உதிரிப்பாகம் கொள்முதல் முதல் புதிய பஸ் வாங்குவது வரை அனைத்திலும் நடக்கிற முறைகேடு தான், அரசு போக்குவரத்து கழகத்தை அதல பாதாளத்தில்
தள்ளியுள்ளது. நிர்வாகத்தில் உள்ள ஓட்டையை அடைக்காமல், நஷ்டத்தை சரி செய்ய முடியாது என்பதை அரசு புரிந்து கொள்ள வேண்டும்.

Advertisement
வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Anantharaman Srinivasan - chennai,இந்தியா
15-ஆக-202100:25:32 IST Report Abuse
Anantharaman Srinivasan வி.ஹெச்.கே.ஹரிஹரன், திண்டுக்கல்லிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: செவிடன் காதில் ஊதிய சங்கு போலாகும். அரசு செயல்படுத்தாது.
Rate this:
Cancel
gopalasamy N - CHENNAI,இந்தியா
14-ஆக-202119:59:40 IST Report Abuse
gopalasamy N தமிழக அரசு பணியாளர்கள் ஆசிரியர்கள் ஊதிய உயர்வை இரண்டு ஆண்டுகளுக்கு நிறுத்திவைக்கலாம் சட்ட மன்ற உறுப்பினர்களுக்கு மூன்று கோடி நிதியை நிறுத்தி வைக்கலாம் இதனால் அரசுக்கு 2000 கோடி மிச்சப்படும் மந்திரி களை குறைக்கலாம் வரியா தலைவர்களை குறைக்கலாம் மேலும் 2000 செலவு குறையும்
Rate this:
Cancel
R VENKATARAMANAN - Chennai,இந்தியா
14-ஆக-202115:14:26 IST Report Abuse
R VENKATARAMANAN திரு. அருண்குமார் நெல்லையிலிருந்து அனுப்பிய கடிதத்தை வரவேகிறேன். அவர் சொல்வதுபோல் தற்போது M L A ஆக இருப்பவர்களும் ஏற்கனேவே MLA ஆக இருந்தவர்களும் / பொதுவாக DMK ல் இருப்பவர்கள் யாருமே அன்றாடம் காட்சியல்லர் . அரசியலுக்கு வந்து கொள்ளை அடித்து சம்பாதித்தவர்கள் தான். மோடி MP களிடம் GAS மானியத்தை விட்டுக்கொடுக்க கேட்டதுபோல் தானும் 100 UNIT இலவச மின்சார சலுகையை விட்டுக்கொடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று முதல்வர் கேட்கிறேன் என்பது மிகவும் பரிதாபமாக இருப்பதுடன் பொருத்தமாக இல்லை.. மத்தியில் BJP ஆட்சி ஏற்பட்டதிலிருந்து இன்றுவரை ஒரு MP யும் இன்றுவரை லஞ்சம் வாங்கியதாக ஒரு புகார் கூட வரவில்லை . ஆனால் DMK ல் வார்டு கவுசிலர் கூட கோடீஸ்வரனாக இருக்கிறான் . கொஞ்சம் கூட ஈவு இரக்கம் இல்லாமல் லஞ்சம் வாங்குகிறார்கள்.. . லஞ்சம் வாங்குவது மட்டுமின்றி MLA களின் சம்பளத்தை இவைகளே தன இஷ்டத்திற்கு உயர்திக்கொள்கிறார்கள். நன்கு படித்தவன் படிக்க்காதவன் எல்லோரும் எப்படியோ MLA ஆகிவிடுகிறார்கள். நன்கு படித்தவன் வேலையின்றி திரிகிறான். அல்லது அதற்கு ஏற்ற ஊதியம் கிடைப்பதில்லை. படிப்பு இருக்கோ இல்லையோ சம்பளத்தை ஏற்றிக்கொண்டு PENSION நும் பெருகிர்ரக்ள்.எனவே அவரது கட்சி மற்றும் கூட்டணி கட்சி MLA கல் சம்பளத்தை கொடுக்க சொல்லாம் .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X