சில வரிச் செய்திகள்...: இந்தியா

Added : ஆக 13, 2021
Share
Advertisement
பயங்கரவாதி சுட்டுக்கொலை ஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீரின் குல்கம் மாவட்டத்தில் உள்ள ஜம்மு - ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில், நேற்று முன்தினம் பாதுகாப்புப் படையினர் வாகனங்களில் சென்றபோது, பயங்கரவாதிகள் மறைந்திருந்து, துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதற்கு நம் வீரர்கள் தக்க பதிலடி கொடுத்தனர். இருதரப்புக்கும் இடையில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் உஸ்மான் என்ற பயங்கரவாதி

பயங்கரவாதி சுட்டுக்கொலை

ஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீரின் குல்கம் மாவட்டத்தில் உள்ள ஜம்மு - ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில், நேற்று முன்தினம் பாதுகாப்புப் படையினர் வாகனங்களில் சென்றபோது, பயங்கரவாதிகள் மறைந்திருந்து, துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதற்கு நம் வீரர்கள் தக்க பதிலடி கொடுத்தனர். இருதரப்புக்கும் இடையில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் உஸ்மான் என்ற பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டார்.

சிறுவன் உயிரிழப்பு

ரஜோரி: ஜம்மு - காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் பா.ஜ., நிர்வாகி ஜஸ்பிர் சிங், தன் குடும்பத்துடன் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு இவரது வீட்டின் மீது கையெறி குண்டு வீசி, பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் ஜஸ்பிர் சிங் உறவினரின், 3 வயது மகன் படுகாயமடைந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த சிறுவன், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

உ.பி.,க்கு முதலிடம்

கோல்கட்டா: நம் நாட்டில் மாநில வாரியாக மது அருந்துவோர் குறித்த தகவல்களை சேகரிக்க சமீபத்தில், ஆய்வு நடத்தப்பட்டது. அதன் முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. நாட்டிலேயே உத்தர பிரதேசத்தில் தான் அதிகமானோர் மது அருந்துவதாக இதில் தெரியவந்து உள்ளது. இதற்கு அடுத்த இடத்தை மேற்கு வங்கம் பிடித்துள்ளது. இங்கு, 1.4 கோடி மக்கள், மது அருந்துவது ஆய்வில் தெரியவந்துள்ளது.

நிலச்சரிவு பலி உயர்வு

சிம்லா: ஹிமாச்சல பிரதேசத்தின் கின்னாவூர் மாவட்டத்தில் சமீபத்தில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் சிக்கியோரை மீட்கும் பணிகளில் பேரிடர் மீட்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர். ஏற்கனவே 14 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ள நிலையில், நேற்று மேலும் ஒருவரின் உடல் கண்டெடுக்கப்பட்டது. இதையடுத்து பலி எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது.

உயிர் உள்ளவரை சிறை

மதுரா: உத்தர பிரதேசத்தின் மதுராவைச் சேர்ந்த சவுபி என்பவர், தன் மனைவி மற்றும் அவரது முதல் கணவரின், 15 வயது மைனர் மகளை 2013ம் ஆண்டு பாலியல் வன்கொடுமை செய்து உள்ளார். இதுகுறித்து வந்த புகார் அடிப்படையில் சவுபி மீது 'போக்சோ' சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில், மதுரா சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 'குற்றவாளியான சவுபி, கடைசி மூச்சு இருக்கும் வரை சிறை தண்டனையை அனுபவிக்க வேண்டும்' என, தீர்ப்பு வழங்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X