சிறப்பு பகுதிகள்

டீ கடை பெஞ்ச்

இப்படி இருந்தா எப்படி மழை பெய்யும்?

Added : ஆக 13, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
இப்படி இருந்தா எப்படி மழை பெய்யும்? ''ராத்திரியானா போனை போட்டு, தொல்லை குடுக்காங்க...'' என்றபடியே, பெஞ்சுக்கு வந்தார் அந்தோணிசாமி.''யாருக்கு, யாருவே தொல்லை தர்றது...'' எனக் கேட்டார், அண்ணாச்சி.''சென்னை, அண்ணா சாலையில மின்வாரிய தலைமை அலுவலகம் செயல்படுதுங்க... இதுல, எட்டாவது மாடியில பணிபுரியும் ரெண்டு, மூணு அதிகாரிகள், தங்களுக்கு கீழே வேலை பார்க்கிற

டீ கடை பெஞ்ச்


இப்படி இருந்தா எப்படி மழை பெய்யும்?


''ராத்திரியானா போனை போட்டு, தொல்லை குடுக்காங்க...'' என்றபடியே, பெஞ்சுக்கு வந்தார் அந்தோணிசாமி.

''யாருக்கு, யாருவே தொல்லை தர்றது...'' எனக் கேட்டார், அண்ணாச்சி.

''சென்னை, அண்ணா சாலையில மின்வாரிய தலைமை அலுவலகம் செயல்படுதுங்க... இதுல, எட்டாவது மாடியில பணிபுரியும் ரெண்டு, மூணு அதிகாரிகள், தங்களுக்கு கீழே வேலை பார்க்கிற பெண்களின் மொபைல் போன்களுக்கு ராத்திரி கால் பண்ணி, ஜொள்ளு விடுறாங்க...

''பெண் ஊழியர்கள் பலரும் சொல்லவும் முடியாம, மெல்லவும் முடியாம தவிக்கிறாங்க... இது சம்பந்தமா, அலுவலகத்துலயே புகார் குடுத்தா, தங்களுக்கு தான் அசிங்கம்னு பொறுத்துட்டு இருக்காங்க...
''ஆனாலும், 'இது சம்பந்தமா பெண் ஊழியர்களுக்கு தனியா ஆய்வு கூட்டம் நடத்தி, அவங்களிடம் ரகசியமா புகார் வாங்கி, சபல ஆசாமிகள் மேல நடவடிக்கை
எடுக்கணும்'னு எதிர்பார்க்குறாங்க...'' என்றார் அந்தோணிசாமி.

''ஆரம்பத்துல இருந்த சுறுசுறுப்பு காணாம போயிட்டு வே...'' என, அடுத்த தகவலுக்கு நகர்ந்த அண்ணாச்சியே தொடர்ந்தார்...

''பெரம்பலுார் மாவட்ட ஊரக வளர்ச்சி துறையில, 2019 - 20ம் வருஷம் பஞ்சாயத்துகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில, பல பொய் கணக்குகள் காட்டி, 52.44 கோடி ரூபாய் மதிப்புல ஊழல் நடந்துட்டு... இது போக, கொட்டரை கிராமத்துல, பிரதமர் வீடு கட்டும் திட்டத்துல, 4.20 லட்சம் ரூபாயை சிலர் கையாடல் பண்ணிட்டாவ வே...

''இந்த மாதிரி பல முறைகேடுகள் நடந்துச்சு... இது சம்பந்தமா லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் விசாரிச்சதோட, கொட்டரை சம்பவத்துல வழக்கும் போட்டாவ வே...

''அதோட சரி... அடுத்தக்கட்ட நடவடிக்கை எதுவும் எடுக்கலை... இதனால, ஊழல்ல ஈடுபட்ட அதிகாரிகள், ஊழியர்கள், 'எங்களை யாரும் ஆட்டவோ, அசைக்கவோ முடியாது'ன்னு மார் தட்டுதாவ... இதனால, 'லஞ்ச ஒழிப்பு போலீசாரையும் இவங்க சரிக்கட்டிட்டாவளோ'ன்னு நேர்மையான ஊழியர்கள் சந்தேகப்படுதாவ வே...'' என்றார்
அண்ணாச்சி.

''பல லட்சங்களோட தயாரா இருக்காங்க பா...'' என, கடைசி தகவலுக்கு மாறினார் அன்வர்பாய்.

''ஏதாவது பதவியை பிடிக்கற விவகாரமா ஓய்...'' எனக் கேட்டார் குப்பண்ணா.

''சரியா சொன்னீங்க... தமிழக வனக் கோட்டங்கள்ல, மூணு வருஷம் சர்வீஸ் முடிச்ச வனச்சரகர்கள் பலர் இன்னும் மாற்றப்படலை... பல வனச்சரகர்கள் அஞ்சு வருஷத்துக்கும் மேலா ஒரே இடத்துல பணியில இருக்காங்க பா...

''இதனாலயே, நீலகிரி, ஆனைமலை மாதிரியான வனப்பகுதிகள்ல, வன குற்றங்களும், நிர்வாக முறைகேடுகளும் நிறைய நடந்துட்டு இருக்குது... இப்ப, மூணு வருஷம் முடிச்ச வனச்சரகர்களை இடமாற்றம் செய்ய பட்டியல் தயாரிச்சிட்டு இருக்காங்க பா...

''இதுல, வனப்பரப்பு அதிகம் இருக்கிற, 'பசை'யான இடங்களுக்கு, 'போஸ்டிங்' வாங்க, 'ரேட்'டும் நிர்ணயம் பண்ணிட்டாங்க... இந்த இடங்களை பிடிக்க, பலரும் லட்சக்கணக்குல பணத்தை தயார் பண்ணிட்டு இருக்காங்க பா...'' என்றார் அன்வர்பாய்.

''இப்படிப்பட்டவா எப்படி காடுகளை காப்பாத்துவா... அப்பறம் எப்படி மழை பெய்யும்...'' என, அலுத்தபடியே குப்பண்ணா எழ, மற்றவர்களும்
கிளம்பினர்.

Advertisement
வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
r.sundaram - tirunelveli,இந்தியா
14-ஆக-202114:03:18 IST Report Abuse
r.sundaram அவர்கள் காட்டில் மழை பெய்யுமே, அது போதாதா அவர்களுக்கு.
Rate this:
Cancel
duruvasar - indraprastham,இந்தியா
14-ஆக-202112:05:38 IST Report Abuse
duruvasar இரவுகளில் பெரும்பாலும் அணில் தொல்லை அதிகமாகத்தான் இருக்கு. இருட்டுல கண்தெரியாம ஆத்ததுகாரிக்ககு போன் போட்டுஜொல்லுவுடட்ற போரா ஓய் என தம்மண்ணா சொல்லவும். நண்பர்கள் சிரிப்புடன் நடைய கட்டிருப்பாங்கன்னு நினைக்கிறேன்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X