தேர்தல் ஆணைய இணையதளம் 'ஹேக்' செய்த இளைஞர் கைது

Added : ஆக 13, 2021
Share
Advertisement
சஹாரன்பூர்:தேர்தல் ஆணையத்தின் இணைய தளத்தை, 'ஹேக்' செய்து, போலி வாக்காளர் அடையாள அட்டைகளை தயாரித்து வந்த இளைஞர் உத்தர பிரதேசத்தில் கைது செய்யப்பட்டார். உ.பி.,யில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது.இணைய தளம்இங்குள்ள சஹாரன்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த விபுல் சைனி என்ற இளைஞர், கம்ப்யூட்டர் கடை நடத்தி வந்துள்ளார். பி.சி.ஏ., பட்டம் பெற்றுள்ள இவர்

சஹாரன்பூர்:தேர்தல் ஆணையத்தின் இணைய தளத்தை, 'ஹேக்' செய்து, போலி வாக்காளர் அடையாள அட்டைகளை தயாரித்து வந்த இளைஞர் உத்தர பிரதேசத்தில் கைது செய்யப்பட்டார்.

உ.பி.,யில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது.இணைய தளம்இங்குள்ள சஹாரன்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த விபுல் சைனி என்ற இளைஞர், கம்ப்யூட்டர் கடை நடத்தி வந்துள்ளார். பி.சி.ஏ., பட்டம் பெற்றுள்ள இவர் இந்திய தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணைய தள பக்கத்தை ஹேக் செய்துள்ளார்.மேலும், தேர்தல் ஆணைய அதிகாரிகள் பயன்படுத்தும் 'பாஸ்வோர்ட்'களை உபயோகித்து, அந்த இணையதள பக்கத்தை பயன்படுத்தி வந்துள்ளார்.

அதன் வாயிலாக ஆயிரக்கணக்கான போலி வாக்காளர் அடையாள அட்டைகளை தயாரித்து வந்துள்ளார். இதை அறிந்த தலைமை தேர்தல் ஆணையம், விசாரணை அமைப்புகளிடம் இதுகுறித்து புகார் அளித்தது. விசாரணைஇந்நிலையில் புலனாய்வுப் பிரிவினரும், சஹாரன்பூர் போலீசாரும் இணைந்து, விபுல் சைனியை கைது செய்தனர்.

சைனியின் வங்கிக் கணக்கில் பல லட்சம் ரூபாய் உள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X