பொது செய்தி

தமிழ்நாடு

இதே நாளில் அன்று

Added : ஆக 13, 2021
Share
Advertisement
ஆக., 14, 2016காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கன்னிகாபுரத்தில், 1975 ஜூலை 12ம் தேதி பிறந்தவர், நா.முத்துகுமார். எழுத்தில் ஆர்வமுடையவர், இயக்குனர் பாலு மகேந்திராவிடம் உதவியாளராக பணிபுரிந்தார். 2000ம் ஆண்டில் வெளியான வீரநடை படத்தின் மூலம் பாடலாசிரியராக அறிமுகமானார்.தொடர்ந்து பல படங்களில் பாடல்கள் எழுதியவர், 2016 வரை தமிழ் சினிமாவில் முன்னணி பாடலாசிரியராக இருந்தார். சில


இதே நாளில் அன்று


ஆக., 14, 2016



காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கன்னிகாபுரத்தில், 1975 ஜூலை 12ம் தேதி பிறந்தவர், நா.முத்துகுமார். எழுத்தில் ஆர்வமுடையவர், இயக்குனர் பாலு மகேந்திராவிடம் உதவியாளராக பணிபுரிந்தார். 2000ம் ஆண்டில் வெளியான வீரநடை படத்தின் மூலம் பாடலாசிரியராக அறிமுகமானார்.தொடர்ந்து பல படங்களில் பாடல்கள் எழுதியவர், 2016 வரை தமிழ் சினிமாவில் முன்னணி பாடலாசிரியராக இருந்தார். சில ஆண்டுகளிலேயே 1,500 பாடல்களுக்கு மேல் எழுதினார்.'ஆனந்த யாழை மீட்டுகிறாள், அழகே அழகே எதுவும் அழகே...' ஆகிய பாடல்களுக்காக அடுத்தடுத்து இரண்டு முறை தேசிய விருதை வென்றார். தமிழக அரசின் விருதுகளை, நான்கு முறை பெற்றுள்ளார். கிரீடம் உள்ளிட்ட சில படங்களுக்கு வசனமும் எழுதியுள்ளார்.
'பட்டாம்பூச்சி விற்பவன், அணிலாடும் மூன்றில்' உட்பட ஏராளமான நுால்கள் எழுதியுள்ளார். 2016 ஆக., 14ம் தேதி தன் 41வது வயதில், மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.
பாடலாசிரியர் நா.முத்துகுமார் காலமான தினம் இன்று!

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X