சுதந்திர தினத்தன்று விவசாயிகள் ஊர்வலம்| Dinamalar

சுதந்திர தினத்தன்று விவசாயிகள் ஊர்வலம்

Updated : ஆக 13, 2021 | Added : ஆக 13, 2021 | கருத்துகள் (15)
Share
புதுடில்லி :நாடு முழுதும் உள்ள விவசாயிகள் 75வது சுதந்திர தினத்தை, விவசாய தொழிலாளர்கள் சுதந்திர புரட்சி தினமாக கொண்டாட போவதாக, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாய சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து பஞ்சாப், உத்தர பிரதேசம், ஹரியானாவைச் சேர்ந்த விவசாய சங்கத்தினர் டில்லி எல்லையில் போராட்டத்தில் ஈடுபட்டுஉள்ளனர். மத்திய அரசுடன்
சுதந்திர தினத்தன்று  விவசாயிகள் ஊர்வலம்

புதுடில்லி :நாடு முழுதும் உள்ள விவசாயிகள் 75வது சுதந்திர தினத்தை, விவசாய தொழிலாளர்கள் சுதந்திர புரட்சி தினமாக கொண்டாட போவதாக, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாய சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து பஞ்சாப், உத்தர பிரதேசம், ஹரியானாவைச் சேர்ந்த விவசாய சங்கத்தினர் டில்லி எல்லையில் போராட்டத்தில் ஈடுபட்டுஉள்ளனர். மத்திய அரசுடன் நடத்தப்பட்ட பல சுற்று பேச்சில் முடிவு எட்டப்படாததை அடுத்து போராட்டம் தொடர்கிறது.கடந்த குடியரசு தினத்தன்று டில்லி செங்கோட்டையை நோக்கி விவசாயிகள் டிராக்டர் பேரணி நடத்தினர். இதில் சில சமூக விரோத கும்பல் ஊடுருவியதை அடுத்து பயங்கர கலவரம் வெடித்தது.


latest tamil news



இந்நிலையில் 75வது சுதந்திர தினத்தன்று மூவர்ண கொடி ஏந்தி, ஊர்வலம் நடத்தப் போவதாக விவசாய சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.இது குறித்து சம்யுக்த் கிசான் மோர்சா அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:நம் நாட்டின் 75வது சுதந்திர தினத்தை விவசாய தொழிலாளர்கள் சுதந்திர புரட்சி தினமாக கொண்டாட, அனைத்து விவசாயிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அன்றைய தினம் நாடு முழுதும் உள்ள விவசாயிகள் டிராக்டர், இரு சக்கர வாகனங்கள், சைக்கிள்கள், மாட்டு வண்டிகளில் மூவர்ண கொடி ஏந்தி ஊர்வலம் நடத்த உள்ளனர். அந்தந்த மாவட்டங்களில் தாலுகா, வட்டார அளவில் இந்த ஊர்வலங்கள் நடத்தப்படும்.

டில்லி எல்லையில் சிங்கூ, திக்ரி, காஸிபூர் பகுதிகளில் நாள் முழுதும் ஊர்வலம் நடத்தப்படும். இந்த ஊர்வலம் எக்காரணத்தை முன்னிட்டும் டில்லிக்குள் நுழையாது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X