அரசியல் செய்தி

தமிழ்நாடு

மலைப் பகுதிகளில் 12 தொடக்க பள்ளிகள்

Added : ஆக 13, 2021
Share
Advertisement
பள்ளி கல்வித்துறைக்கான பட்ஜெட் அறிவிப்பு:*தமிழகத்தின் வரலாற்று மரபு, தற்போதைய நிலை, எதிர்கால குறிக்கோள்களுக்கு ஏற்ப, மாநிலத்துக்கான தனித்துவமான கல்வி கொள்கை வகுக்கப்படும். இதற்கு, கல்வியாளர்கள் மற்றும் வல்லுனர்கள் இடம் பெற்ற உயர்மட்டக் குழுவை அரசு அமைக்கும்* பள்ளி கல்விக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் விதமாக, 32 ஆயிரத்து 599.54 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

பள்ளி கல்வித்துறைக்கான பட்ஜெட் அறிவிப்பு:

*தமிழகத்தின் வரலாற்று மரபு, தற்போதைய நிலை, எதிர்கால குறிக்கோள்களுக்கு ஏற்ப, மாநிலத்துக்கான தனித்துவமான கல்வி கொள்கை வகுக்கப்படும். இதற்கு, கல்வியாளர்கள் மற்றும் வல்லுனர்கள் இடம் பெற்ற உயர்மட்டக் குழுவை அரசு அமைக்கும்

* பள்ளி கல்விக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் விதமாக, 32 ஆயிரத்து 599.54 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மலை பாங்கான பகுதிகளில், 12 தொடக்க பள்ளிகள் துவக்கப்படும்; 22 பள்ளிகள் தரம் உயர்த்தப்படும்

* அரசு பள்ளிகளில், 2012ம் ஆண்டில் 76 சதவீதமாக இருந்த மாணவர் எண்ணிக்கை, 2020ல் 53 சதவீதமாக குறைந்துள்ளது. தேசிய அளவிலான தரவரிசையில், தமிழகத்தை முதல் மூன்று மாநிலங்களுக்குள் கொண்டு வருவதை அரசு உறுதி செய்யும்

* ஆசிரியர்கள் தொழில்நுட்ப அடிப்படையில் பணியாற்ற பயிற்சி அளிக்கும் வகையில், 413 கல்வி ஒன்றியங்களுக்கும், 13.22 கோடி ரூபாய் செலவில்,தலா 40 'டேப்லெட்' வழங்கப்படும் எட்டு வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கு, அடிப்படை கல்வியறிவு மற்றும் கணித அறிவை உறுதி செய்ய, எண்ணும், எழுத்தும் இயக்கம், 66.70 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்படும்

* அரசு பள்ளி மாணவர்கள், இளம் வயதில் கணினி திறன் பெறுவதை உறுதி செய்யும் வகையில், 1,784 அரசு நடுநிலை பள்ளிகளில், 114.18 கோடி ரூபாய் மதிப்பில், உயர் கல்வி தொழில்நுட்ப ஆய்வகங்கள் ஏற்படுத்தப்படும். மேலும், 865 உயர் மற்றும் மேல்நிலை பள்ளிகளில், 20.76 கோடி ரூபாய் செலவில் ஸ்மார்ட் வகுப்பறைகள் துவங்கப்படும்

* அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள், கல்வி, கவின் திறன் மற்றும் விளையாட்டில் சிறந்து விளங்க, மாதிரி பள்ளி கள் சிறப்பு திட்டம் செயல்படுத்தப்படும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X