அரசியல் செய்தி

தமிழ்நாடு

பற்றாக்குறை ரூ.59 ஆயிரம் கோடி ரூ.92 ஆயிரம் கோடி கடன் வாங்க முடிவு

Added : ஆக 13, 2021
Share
Advertisement
சென்னை:தமிழக அரசின் வருவாய் பற்றாக்குறை, 58 ஆயிரத்து 692 கோடியே 68 லட்சம் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது, இடைக்கால பட்ஜெட்டில் குறிப்பிட்டதை விட, 17 ஆயிரத்து 275 கோடியே 35 லட்சம் ரூபாய் அதிகம். இது, அடுத்த நிதியாண்டில் இருந்து குறையும் என்கிறார், நிதி அமைச்சர் தியாகராஜன். லட்சம் கோடி ரூபாய்மேலும், நடப்பு நிதியாண்டில் மாநில அரசு, 92 ஆயிரத்து 484 கோடி ரூபாய்க்கு நிகரக்

சென்னை:தமிழக அரசின் வருவாய் பற்றாக்குறை, 58 ஆயிரத்து 692 கோடியே 68 லட்சம் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது, இடைக்கால பட்ஜெட்டில் குறிப்பிட்டதை விட, 17 ஆயிரத்து 275 கோடியே 35 லட்சம் ரூபாய் அதிகம். இது, அடுத்த நிதியாண்டில் இருந்து குறையும் என்கிறார், நிதி அமைச்சர் தியாகராஜன்.


லட்சம் கோடி ரூபாய்

மேலும், நடப்பு நிதியாண்டில் மாநில அரசு, 92 ஆயிரத்து 484 கோடி ரூபாய்க்கு நிகரக் கடன் பெற திட்டமிட்டு உள்ளது. இதனால், தமிழக அரசின் கடன் 5.77 லட்சம் கோடி ரூபாயாக அதிகரிக்கும்.

நிதி அமைச்சர் தியாகராஜன் கூறியதாவது:மத்திய அரசின் நிதியுதவி உட்பட, மாநில அரசின் மொத்த வருவாய் வரவுகள் 2.02 லட்சம் கோடி ரூபாயாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. மாநில அரசின் சொந்த வரி வருவாய், இடைக்கால பட்ஜெட்டில் 1.35 லட்சம் கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டிருந்தது. திருத்திய பட்ஜெட் மதிப்பீடுகளில் 1.26 லட்சம் கோடி ரூபாயாக இருக்கும்.


வரி அல்லாத வருவாய்

நடப்பு ஆண்டிற்கான திருத்திய பட்ஜெட்டில் மாநிலத்தின் சொந்த வரி அல்லாத வருவாய், 14 ஆயிரத்து 139 கோடி; மத்திய அரசிடமிருந்து பெறப்படும் உதவி மானியம், 34 ஆயிரத்து 564 கோடி ரூபாயாக இருக்கும். மத்திய அரசு நிலுவை தொகைகளை குறிப்பிட்ட கால வரையறைக்குள் விடுவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வருவாய் செலவினங்கள், 2 லட்சத்து 61 ஆயிரத்து 188 கோடியே 57 லட்சம் ரூபாயாக இருக்கும்.

பற்றாக்குறைபட்ஜெட்டில் வருவாய் பற்றாக்குறை, 58 ஆயிரத்து 692 கோடியே 68 லட்சம் ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது, இடைக்கால பட்ஜெட்டில் மதிப்பிடப்பட்டதை விட அதிகம். வருவாய் பற்றாக்குறை இல்லாத நிலையை அடைவதற்கு, இடைக்கால நிதி நிலவர திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. வருவாய் மற்றும் செலவினங்களுக்கு இடையே சம நிலையை பேணுவதன் வழியே இந்த நிலையை அடையலாம்.

இதற்காக, வருவாய் ஆதாரங்களை மேம்படுத்த தேவையான வழிமுறைகளை ஆராய முன்னுரிமை வழங்கப்படும். அடுத்து வரும் நிதி ஆண்டுகளில் வருவாய் பற்றாக்குறை குறையும். அதாவது, 2022 - 23ம் ஆண்டில் வருவாய் பற்றாக்குறை, 36 ஆயிரத்து 376 கோடி ரூபாயாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.


கடன்கள்

நடப்பு நிதியாண்டில் மாநில அரசு, 92 ஆயிரத்து 484 கோடி ரூபாய் கடன் பெற திட்டமிட்டுள்ளது. இதில், ஜி.எஸ்.டி., இழப்பீட்டிற்கு ஈடாக மத்திய அரசால் வழங்கப்படும் 8,095 கோடி ரூபாய் அடங்காது.தற்போது பொருளாதார மந்த நிலை நிலவினாலும், வரும் ஆண்டுகளில் நாட்டின் பொருளாதாரம், வளர்ச்சியை நோக்கி செல்லும். தற்போதைய பொருளாதார மந்த நிலையிலும், நாட்டின் பொருளாதார வளர்ச்சியை ஒப்பிடும்போது, தமிழகம் உயர் வளர்ச்சி பெற்றுள்ளது.

வரும் ஆண்டுகளில் இந்த வளர்ச்சி மேலும் வலுப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.

2021 - 22ம் ஆண்டு வரவு, செலவு கணக்கு (ரூபாய் கோடியில்)

வருவாய் - 2,02,495.89

செலவு - 2,61,188.57

பற்றாக்குறை - 58,692.68

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X