பொது செய்தி

தமிழ்நாடு

நடைபாதையில் கடைகள் தாராளம்: நடவடிக்கை இல்லாததால் ஏராளம்

Added : ஆக 13, 2021
Share
Advertisement
வால்பாறை:வால்பாறையில், ரோட்டோர ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற வேண்டும், என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.வால்பாறை நகரில், ஆக்கிரமிப்பு கடைகள் அதிக அளவில் உள்ளன. இது தவிர, ரோட்டோரத்தில் இருபக்கமும் வாகனங்கள் நிறுத்தப்படுவதால், மக்கள் நடந்து செல்ல வழியில்லாமல் அவதிப்படுகின்றனர். நடைபாதை கடைகளை அகற்ற நகராட்சி அதிகாரிகளும், நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்ப்பதால்
 நடைபாதையில் கடைகள் தாராளம்: நடவடிக்கை இல்லாததால் ஏராளம்

வால்பாறை:வால்பாறையில், ரோட்டோர ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற வேண்டும், என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.வால்பாறை நகரில், ஆக்கிரமிப்பு கடைகள் அதிக அளவில் உள்ளன. இது தவிர, ரோட்டோரத்தில் இருபக்கமும் வாகனங்கள் நிறுத்தப்படுவதால், மக்கள் நடந்து செல்ல வழியில்லாமல் அவதிப்படுகின்றனர். நடைபாதை கடைகளை அகற்ற நகராட்சி அதிகாரிகளும், நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்ப்பதால் மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.மக்கள் கூறியதாவது:வால்பாறையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலால், ரோட்டில் பயணிப்பதே சிரமமாக உள்ளது. இதை தவிர்க்க, நகராட்சி சார்பில் கடந்த, 15 ஆண்டுகளுக்கு முன் நடைபாதை அமைக்கப்பட்டது. சில மாதங்களாக, நடைபாதை, ரோட்டோர கடைகள் அகற்றப்பட்டு, நகராட்சி சார்பில் அவர்களுக்கு மாற்று இடமும் வழங்கப்பட்டது. மக்கள் நிம்மதியாக நடைபாதையை பயன்படுத்தி வந்தனர்.இந்நிலையில், மீண்டும் நடைபாதையை ஆக்கிரமித்து சிலர் கடைகள் வைத்துள்ளனர். இதனால், மக்கள் நடைபாதையை பயன்படுத்த முடியாமல் ரோட்டில் நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. சில நேரங்களில் விபத்துகள் ஏற்படுகின்றன. எனவே, நகராட்சி அதிகாரிகள் விதிமுறையை மீறி நடைபாதையை ஆக்கிரமித்து அமைக்கப்படும் கடைகளை உடனடியாக அகற்ற வேண்டும். இவ்வாறு, தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X