அரசியல் செய்தி

தமிழ்நாடு

மகளிர் சுய உதவி கடன் ரூ.2,756 கோடி தள்ளுபடி

Added : ஆக 13, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
*கூட்டுறவு கடன் சங்கங்கள் வாயிலாக, மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வழங்கப்பட்ட கடன் தொகை, 2,756 கோடி ரூபாய் தள்ளுபடி செய்யப்படும்* பயிர் கடன் தள்ளுபடி பெற்றவர்களின் தகுதியை ஆராய்ந்த போது, பல முறைகேடுகள் நிகழ்ந்துள்ளன* விவசாய நகை கடன்களில், அடமானம் வைக்கப்பட்ட நகைகளின் தரம், துாய்மை சரியாக கணக்கிடப்படவில்லை. இந்த கடன் தள்ளுபடியை தொடர்ந்து அனுமதிக்கும் பட்சத்தில், தவறு

*கூட்டுறவு கடன் சங்கங்கள் வாயிலாக, மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வழங்கப்பட்ட கடன் தொகை, 2,756 கோடி ரூபாய் தள்ளுபடி செய்யப்படும்

* பயிர் கடன் தள்ளுபடி பெற்றவர்களின் தகுதியை ஆராய்ந்த போது, பல முறைகேடுகள் நிகழ்ந்துள்ளன

* விவசாய நகை கடன்களில், அடமானம் வைக்கப்பட்ட நகைகளின் தரம், துாய்மை சரியாக கணக்கிடப்படவில்லை. இந்த கடன் தள்ளுபடியை தொடர்ந்து அனுமதிக்கும் பட்சத்தில், தவறு செய்தவர்கள் பலரும், பலனை பெறக்கூடிய வாய்ப்புகள் நிகழும். எனவே, இந்த முறைகேடுகள் குறித்து, தீர ஆராய்ந்து, அத்திட்டம் முழுதுமாக செயல்படுத்தப்படும்

* இதர நகை கடன்களை தள்ளுபடி செய்யும் போதும், இதே நிகழ்வு பொருந்தும் என்பதால், அதுகுறித்து உரிய விசாரணைக்கு பின், தள்ளுபடி குறித்து முடிவு எடுக்கப்படும். அப்போது தான் தவறு செய்பவர்கள் தவிர்க்கப்பட்டு, உண்மையான பயனாளிகள் பலன் அடைவர்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R.RAMACHANDRAN - Sundivakkam,இந்தியா
14-ஆக-202110:07:21 IST Report Abuse
R.RAMACHANDRAN சுய உதவிக் குழுவினர்களுக்கு கடன் வழங்குவது என்பது அவர்கள் சுய தொழில் செய்து வருமானம் ஈட்டவே ஆகும்.பெரும்பாலான சுய உதவிக் குழுக்கள் எந்த தொழிலும் செய்யவில்லை.அவர்கள் நூறு நாள் வேலை திட்டத்தில் பனி செய்து கொண்டு கூலி வேலை செய்பவர்களாக உள்ளனர்.வாக்காளர்களை தக்க வைத்துக் கொள்ள அவர்கள் பெற்ற கடன்கள் தள்ளுபடி.
Rate this:
Cancel
R.RAMACHANDRAN - Sundivakkam,இந்தியா
14-ஆக-202109:46:46 IST Report Abuse
R.RAMACHANDRAN லஞ்ச ஊழல் மிக்க அரசு ஊழியர்களை வைத்துக்கொண்டு எந்த விதமான குற்றத்தையும் கண்டுபிடிக்க இயலாது/தடுக்க முடியாது.அவர்கள் குற்றவாளிகளிடம் லஞ்சம் பெற்றுக்கொண்டு அவர்களுக்கு சாதகமாகவே அறிக்கை அளிப்பர்.2006 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் விவசாயிகள் கடன் தள்ளுபடி என்ற பெயரின் அரசின் நிதியத்தை சூறையாடியது குறித்து நான் அனுப்பிய புகார்களை குற்றவாளிகளுக்கே அனுப்பி என்னை காவல் துறையை தூண்டி சுட்டுத் தள்ள ஏற்பாடு செய்ததால் மற்றும் தாவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கூட்டுறவு சங்கங்கள் வராது என முடிவு எடுத்துள்ளதால் 2021 ல் செய்த குற்றங்களை ஆராய்ந்து வெளியிட முடியவில்லை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X