டில்லி செங்கோட்டைக்குள் காலிஸ்தான் ஆதரவாளர்கள் நுழைய சதி!

Updated : ஆக 15, 2021 | Added : ஆக 13, 2021 | கருத்துகள் (11)
Share
Advertisement
புதுடில்லி சுதந்திர தினத்தன்று காலிஸ்தான் ஆதரவாளர்கள் போலீஸ் வேடத்தில் டில்லி செங்கோட்டைக்குள் நுழைய திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. வன்முறையை கட்டவிழ்த்து விடும் நோக்கில் பயங்கரவாதிகள் ஊடுருவ வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளதை அடுத்து, டில்லி முழுதும் பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளது. நம் நாட்டின் 75வது சுதந்திர தினம்
டில்லி செங்கோட்டை,  காலிஸ்தான் , நுழைய.. சதி!

புதுடில்லி சுதந்திர தினத்தன்று காலிஸ்தான் ஆதரவாளர்கள் போலீஸ் வேடத்தில் டில்லி செங்கோட்டைக்குள் நுழைய திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

வன்முறையை கட்டவிழ்த்து விடும் நோக்கில் பயங்கரவாதிகள் ஊடுருவ வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளதை அடுத்து, டில்லி முழுதும் பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளது. நம் நாட்டின் 75வது சுதந்திர தினம் நாளை கொண்டாடப்படுகிறது. இதையடுத்து, தலைநகர் டில்லியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. டில்லி முழுதும் அனைத்து பாதுகாப்பு படையினரும் உஷார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளனர்.




நாச வேலை



சுதந்திர தினத்தன்று பாகிஸ்தானின் லஷ்கர் - இ - தொய்பா பயங்கரவாதிகள், டில்லியில் நாசவேலையில் ஈடுபட திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறையினர் ஏற்கனவே எச்சரித்தனர். இதையடுத்து கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டது.இந்நிலையில், டில்லி உயர் போலீஸ் அதிகாரிகள் பங்கேற்ற உயர் நிலை கூட்டம் நேற்று நடந்தது. இதில், சுதந்திர தினத்தன்று செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள், உளவுத்துறை அளித்துள்ள புதிய எச்சரிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. அப்போது, டில்லியின் வழிபாட்டு தலங்களில் சட்டம் - ஒழுங்கு பிரச்னையை உருவாக்க விஷமிகள் திட்டமிட்டு உள்ளதாக உளவுத்துறை எச்சரித்ததாக கூறப்படுகிறது.

மேலும், பஞ்சாபை தனி நாடாக அறிவிக்கக் கோரி போராட்டம் நடத்தி வரும் காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பின் ஆதரவாளர்கள் சிலர், டில்லி செங்கோட்டைக்குள் நுழைய திட்டமிட்டுள்ளதாகவும் உளவுத்துறை எச்சரித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.இதையடுத்து, செங்கோட்டையை சுற்றியுள்ள பகுதிகளில் பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கோட்டையை சுற்றி உள்ள உயரமான கட்டடங்களில், 250 - 300 கமாண்டோ போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டுஉள்ளனர்.




சென்னையில் பாதுகாப்பு



சுதந்திர தின விழாவை சீர்குலைக்க பயங்கரவாதிகள் சதி திட்டம் தீட்டி இருப்பதாக, மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, நாடு முழுதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.பிரிட்டன் நாட்டில் மருத்துவம் படிக்க, சென்னையில், ஆறு நட்சத்திர ஓட்டல்கள் உட்பட பல்வேறு இடங்களில் நுழைவு தேர்வு நடந்தது.இத்தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து தலிபான் பயங்கரவாதிகள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்து இருப்பதாக, 'இன்டர்போல்' போலீசார் உஷார் படுத்தி உள்ளனர்.

இதனால் நட்சத்திர ஓட்டல்களில் சோதனை நடத்தப்பட்டு, போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அத்துடன், சுதந்திர தின விழா கொண்டாட்டத்தை ஒட்டி, சென்னையில் 15 ஆயிரம் போலீசார் உட்பட, மாநிலம் முழுதும் ஒரு லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.தலைமை செயலகம் மற்றும் விமான நிலையங்களுக்கு ஐந்து அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த இடங்களில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகும் காட்சிகளை, 24 மணி நேரமும் சுழற்சி முறையில் போலீசார் கண்காணித்து வருகின்றனர்.


எழும்பூர் ரயில் நிலையம்



மக்கள் அதிகம் கூடும் இடங்களில், போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்களில் சோதனைக்கு பின், பயணியர் அனுமதிக்கப்படுகின்றனர்.சென்னை திருவொற்றியூர் முதல், ராமேஸ்வரம் வரை கடலோர பாதுகாப்பு குழும போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். மாநிலம் முழுதும் உளவுத்துறை போலீசார், ரகசிய தகவல் சேகரிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.போலீஸ் உயர் அதிகாரிகள் கூறுகையில், 'பொதுமக்கள் சந்தேக நபர்கள் குறித்து, அவசர போலீஸ் எண்: 100க்கு தகவல் தெரிவிக்க வேண்டும். பெயர், முகவரி உள்ளிட்ட விபரங்கள் ரகசியம் காக்கப்படும்' என்றனர்.


பயங்கரவாதிகளுக்குஉதவிய போலீசார்



பஞ்சாப் மாநிலம் பதன்கோட்டில் உள்ள இந்திய விமானப்படை தளத்துக்குள், 2016ல் பாகிஸ்தானைச் சேர்ந்த ஜெய்ஷ் - இ - முகமது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.பாதுகாப்பு படையினரின் பதிலடியில் ஆறு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இந்த மோதலில், விமானப்படை வீரர்கள் ஏழு பேர் உயிர் தியாகம் செய்தனர்.இது குறித்து, என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்பு விசாரித்து வருகிறது.இந்நிலையில் பதன்கோட் தாக்குதல் பற்றி பத்திரிகையாளர்கள் அட்ரியன் லெவி, கேதி ஸ்காட்கிளார்க் ஆகியோர் எழுதியுள்ள 'ஸ்பை ஸ்டோரீஸ்: இன்சைட் தி ஸீக்ரட் வேர்ல்டு ஆப் தி ரா அண்டு தி ஐ.எஸ்.ஐ' என்ற தலைப்பிலான ஆங்கில புத்தகத்தில் கூறியிருப்பதாவது:

எல்லையில் ஓடும் ராவி ஆற்றின் கிளை நதியை கடந்து, பயங்கரவாதிகள் பதன்கோட் விமானப்படை தளத்துக்குள் நுழைந்தனர்.விமானப்படை தளத்துக்குள் நுழைவதற்கு பயங்கரவாதிகளுக்கு பெரும் உதவியாக இருந்தவர்கள் உள்ளூர் போலீஸ் அதிகாரிகள் தான். பயங்கரவாத அமைப்பிடம் பணம் வாங்கி,பயங்கரவாதிகளுக்கு உதவி செய்து உள்ளனர். விமானப்படை தளத்தை நோக்கி பயங்கரவாதிகள் வந்த பகுதியில் கண்காணிப்பு குறைக்கப்பட்டது. போதிய மின்சார வெளிச்சம் கூட இல்லை. வெடி பொருட்கள், துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களை பயங்கரவாதிகள் எடுத்து வரவும் போலீசார் உதவி செய்துள்ளனர். பயங்கரவாதிகள் விமானப்படை தளத்துக்குள் ஊடுருவ உள்ளது, உள்ளூர் போலீஸ் அதிகாரிகள் சிலருக்கு முன்கூட்டியே தெரிந்திருந்தது. இது குறித்து அவர்கள் தெரிவித்திருந்தால் தாக்குதலை தவிர்த்திருக்க முடியும்.
இவ்வாறு புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
14-ஆக-202113:38:01 IST Report Abuse
Pugazh V புருடா விட்டு, பொய்யான தகவல்கள் சொல்லி மக்களை ஏமாற்ற ஆரம்பித்து விட்டார்கள். போன வாட்டி பாகிஸ்தான், இந்த வாட்டி காலிஸ்தானா? ஏன் சீன உளவாளிகள் இல்லை யா? ஓ..சீனா என்ற வார்த்தை யை ஜி சொல்ல மாட்டாரே.
Rate this:
Anand - chennai,இந்தியா
14-ஆக-202116:28:31 IST Report Abuse
Anandஉண்மையை என்னதான் உரைத்து சொன்னாலும் மூர்க்கனுக்கு இப்படித்தான் புத்தி போகும்......
Rate this:
Cancel
Krish - Bengalooru,இந்தியா
14-ஆக-202113:17:17 IST Report Abuse
Krish நீங்கள் சீக்கிய கோயில்களுக்கு சென்றுவாருங்கள். அங்கே சீக்கியர்கள் எவ்வாரு மொகலாய மன்னர்கள் துன்புறுத்தப்பட்டு படு அழிவை சந்தித்தார்களோ அவைகள் விவரிக்கப்பார்த்து இருக்கும்
Rate this:
Cancel
Anand - chennai,இந்தியா
14-ஆக-202111:20:08 IST Report Abuse
Anand மீண்டும் மிதிபட்டு அழியப்போகிறார்கள்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X