பொது செய்தி

தமிழ்நாடு

கொப்பரை கிலோவுக்கு ரூ.150 மத்திய அமைச்சரிடம் மனு

Added : ஆக 13, 2021
Share
Advertisement
பொள்ளாச்சி:கொப்பரை குறைந்த பட்ச ஆதார விலையாக, கிலோவுக்கு, 150 ரூபாய் நிர்ணயிக்க வேண்டும், என, தென்னை உற்பத்தியாளர் நிறுவனங்களின் நிர்வாகிகள், மத்திய வேளாண் அமைச்சரை சந்தித்து வலியுறுத்தினர்.மாநில தென்னை உற்பத்தியாளர் நிறுவனங்களின் நிர்வாகிகள், சமீபத்தில் டில்லி கிரிஷிபவனில், மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை இணை அமைச்சர் ஷோபா கரண்ட்லாஜே மற்றும் வேளாண்

பொள்ளாச்சி:கொப்பரை குறைந்த பட்ச ஆதார விலையாக, கிலோவுக்கு, 150 ரூபாய் நிர்ணயிக்க வேண்டும், என, தென்னை உற்பத்தியாளர் நிறுவனங்களின் நிர்வாகிகள், மத்திய வேளாண் அமைச்சரை சந்தித்து வலியுறுத்தினர்.மாநில தென்னை உற்பத்தியாளர் நிறுவனங்களின் நிர்வாகிகள், சமீபத்தில் டில்லி கிரிஷிபவனில், மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை இணை அமைச்சர் ஷோபா கரண்ட்லாஜே மற்றும் வேளாண் உயர் அதிகாரிகளை சந்தித்து, தமிழக தென்னை விவசாயிகளின், கோரிக்கை மனுவை கொடுத்தனர்.மனுவில் கூறியிருப்பதாவது:தென்னை வளர்ச்சி வாரியத்தின் தலைவராக, முன்னோடி விவசாயி ஒருவரை நியமிக்க வேண்டும். தமிழகத்தில், மீண்டும் மாதிரி பண்ணை திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.பயிர் காப்பீடு முறையில், மற்ற பயிர்களுக்கு மாற்றம் கொண்டு வந்ததை போன்று, தென்னைக்கான பயிர் காப்பீடு திட்டத்தில் மாற்றம் கொண்டு வர வேண்டும். கொப்பரை குறைந்த பட்ச ஆதார விலையாக, கிலோவுக்கு, 150 ரூபாய் நிர்ணயிக்க வேண்டும். ஆண்டு முழுவதும் கொப்பரை கொள்முதலை நீட்டிக்க வேண்டும்.தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த, நீரா உற்பத்திக்கு அரசு அனுமதி அளித்துள்ளது. நீராவை, 90 நாட்கள் வரை கெடாமல் சேமித்து வைக்கும், தொழில் நுட்பத்தை நீரா உற்பத்தியாளர்களுக்கு வழங்க வேண்டும்.கடந்த இரண்டு ஆண்டுகளாக, கொரோனா பரவல் காரணமாக, நீரா உற்பத்தி மற்றும் விற்பனை முடங்கியுள்ளது. இந்நிலையில், நீரா உற்பத்தியாளர்களுக்கு,தென்னை வளர்ச்சி வாரியம் வாயிலாக, கொரோனா நிவாரண நிதி வழங்க வேண்டும். இவ்வாறு, தெரிவித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X