அரசியல் செய்தி

தமிழ்நாடு

தூத்துக்குடியில் ரூ.1,000 கோடியில்அறைகலன்களுக்கான சர்வதேச பூங்கா

Updated : ஆக 13, 2021 | Added : ஆக 13, 2021
Share
Advertisement
*வணிகம் செய்வதை எளிதாக்குவதில், தேசிய அளவில் தற்போது 14வது இடத்தில் தமிழகம் உள்ளது. இது, முதல் மூன்று இடங்களுக்குள் கொண்டு வரப்படும்* ஒற்றைச்சாளர அமைப்பு முறை திறம்பட செயல்படுத்தப்பட்டு, அதன் கீழ், 2021 ஜூலை மாதத்தில், மேலும் 100 சேவைகள் கொண்டு வரப்பட்டுள்ளன. 2022 மார்ச் மாதத்தில் மேலும் 110 சேவைகள் கொண்டு வரப்படும்* தமிழ்நாடு தொழில் வசதி திட்டத்தை திருத்தி, சுய சான்றிதழ்

*வணிகம் செய்வதை எளிதாக்குவதில், தேசிய அளவில் தற்போது 14வது இடத்தில் தமிழகம் உள்ளது. இது, முதல் மூன்று இடங்களுக்குள் கொண்டு வரப்படும்

* ஒற்றைச்சாளர அமைப்பு முறை திறம்பட செயல்படுத்தப்பட்டு, அதன் கீழ், 2021 ஜூலை மாதத்தில், மேலும் 100 சேவைகள் கொண்டு வரப்பட்டுள்ளன. 2022 மார்ச் மாதத்தில் மேலும் 110 சேவைகள் கொண்டு வரப்படும்

* தமிழ்நாடு தொழில் வசதி திட்டத்தை திருத்தி, சுய சான்றிதழ் அடிப்படையில் ஆய்வுகள் இல்லாமல், முதல் மூன்று ஆண்டுகளில், புதிய தொழிற்சாலைகளை அமைக்க வழிவகை செய்யப்படும்

* வளர்ந்து வரும் துறைகளான உயிரியல் அறிவியல், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, உற்பத்தி ஆகியவற்றிற்கான புதிய தொழில் கொள்கைகள் அறிவிக்கப்படும்

* அதிக முதலீடுகளை ஊக்குவிக்க, புலம்பெயர் தமிழர்கள் உடனான உறவு வலுப்படுத்தப் படும். முதலீடு சார்ந்த முடிவுகளுக்கு ஆதரவு அளிப்பதற்காகவும், சிறப்பாக திட்டமிடுவதற்கும், தமிழகத்தில் உள்ள தொழிற்சாலைகள் குறித்து விபரமான, துல்லியமான தரவு தளம் உருவாக்கப்படும்

* பின்தங்கிய மாவட்டங்களை மையமாக வைத்து, ஐந்து ஆண்டுகளில், 45 ஆயிரம் ஏக்கர் அளவிலான நில வங்கித் தொகுப்புகள் உருவாக்கப்படும்

* துாத்துக்குடி மாவட்டத்தில், 4,500 கோடி ரூபாய் முதலீட்டை ஈர்க்கும் விதமாகவும், 3.5 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையிலும், 1,100 ஏக்கர் பரப்பில், 1,000 கோடி ரூபாய் செலவில், அறைகலன்களுக்கான சர்வதேச பூங்கா அமைக்கப்படும்.


ஆலைகளுக்காக கடல் நீர் சுத்திகரிப்பு ஆலை

* திருவள்ளூர் மாவட்டம், மாநல்லுாரில், மின் வாகன பூங்கா, காஞ்சிபுரம் மாவட்டம், ஒரகடத்தில் மருத்துவ சாதனங்கள் பூங்கா, ராணிப்பேட்டை மாவட்டம், பணப்பாக்கத்தில் தோல் பொருட்கள் உற்பத்தி பூங்கா, மணப்பாறை, தேனி மற்றும் திண்டிவனம் ஆகிய ஊர்களில், மூன்று உணவு பூங்காக்களும் நிறுவப்படும்

* தொழில் துறை அலகுகளுக்காக, துாத்துக்குடியில், 60 எம்.எல்.டி., அளவு கடல்நீர் சுத்திகரிப்பு ஆலை மற்றும் ஓசூரில் உள்ள தொழிலகங்களுக்காக, 10 எம்.எல்.டி., - டி.டி.ஆர்.ஓ., கழிவு நீர் சுத்திகரிப்பு ஆலை நிறுவப்படும்l நிதி நுட்பத் துறை வளர்ச்சிக்கு, தமிழகத்தில் அதிக வாய்ப்பு கள் உள்ளன. அதை முன்னெடுக்கும் வகையில், நிதி நுட்ப கொள்கை வெளியிடப்படும்.

மேலும், வழிகாட்டி நிறுவனத்தில், இதற்கென பிரத்யேகமான நிதி நுட்ப பிரிவு அமைக்கப் பட்டு, அனைத்து உதவிகளும் அளிக்கப்படும். சென்னையில் இரண்டு கட்டங்களாக, நந்தம்பாக்கம் மற்றும் காவனுாரில் நிதி நுட்ப நகரம் உருவாக்கப்படும். முதற்கட்டமாக, நந்தம்பாக்கத்தில் நிதி நுட்ப நகரம், 165 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உருவாக்கப்படும்.


கோவையில் பாதுகாப்பு கருவிகள் உற்பத்தி பூங்கா!*தமிழகத்தில் இரண்டு மற்றும் மூன்றாம் நிலை நகரங்களிலும், 'டைடல்' பூங்காக்கள் ஏற்படுத்தப்படுகின்றன. முதல் கட்டமாக, விழுப்புரம் மாவட்டத்தின் திருச்சிற்றம்பலம், வேலுார், திருப்பூர் மற்றும் துாத்துக்குடி ஆகிய நகரங்களில் டைடல் பூங்காக்கள் உருவாக்கப்படும்

* ஓசூர், சேலம், திருச்சி மற்றும் கோவையை இணைக்கும், பாதுகாப்பு தொழில் துறை பெருவழிகளில், கோவையில், 500 ஏக்கர் பரப்பளவில், 225 கோடி ரூபாய் மதிப்பில் பாதுகாப்பு கருவிகள் உற்பத்தி பூங்காவை, தமிழக அரசு அமைத்து செயல்படுத்தும். இதன் வாயிலாக, 3,500 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகள் ஈர்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது

* தொழில் வளர்ச்சியில் பின்தங்கி உள்ள திருவண்ணாமலை, தர்மபுரி, திருநெல்வேலி, விருதுநகர், சிவகங்கை, விழுப்புரம், நாமக்கல், தேனி மற்றும் நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில், புதிய சிப்காட் தொழில் பூங்காக்கள் அமைக்கப்படும். இந்த பூங்காக்களில், தயார் நிலையில் உள்ள தொழில்கூடங்கள் உட்பட, உலகத் தரம் வாய்ந்த உட்கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்படும். இதற்கு முதல் கட்டமாக, 1,500 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 4,000 ஏக்கர் நிலங்கள் மேம்படுத்தப்படும்.


தொழில் நிறுவனங்களின்சிக்கல்களை ஆராய குழு

*தமிழகத்தில் உள்ள சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் எதிர்கொள்ளும் நிதி, கட்டமைப்பு, இதர சிக்கல்களை ஆய்வு செய்யவும், இந்த நிறுவனங்கள் வளர்ச்சிக்கான நடவடிக்கைகளை பரிந்துரைக்கவும், ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி சுந்தரதேவன் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது

* சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின், வணிகத் திறன் அடிப்படையில், நிதி நிறுவனங்களும், நவீன நிதி தொழில்நுட்ப நிறுவனங்களும் கடன் வழங்க ஏதுவாக, மின்னணு தகவல் தரவுகள் அடிப்படையிலான, கடன் மதிப்பீட்டு முறை ஏற்படுத்தப்படும்

* இந்த நிறுவனங்களுக்கு கடன் வழங்க, தொழில் கூட்டுறவு வங்கியை மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடன் பெற ஏதுவாக, இணைய வழியில் பதிவு செய்ய சட்டத் திருத்தங்கள், பதிவுச் சட்டத்தில் கொண்டு வரப்படும்.


ரூ.100 கோடியில் புதிய தொழில் தொகுப்பு

*மருந்து மற்றும் பெட்ரோ ரசாயனங்கள், உற்பத்தி, பாதுகாப்பு, விண்வெளி மற்றும் 'ஸ்மார்ட்' போக்குவரத்து ஆகிய துறைகளில், 100 கோடி ரூபாய் மதிப்பில், ஐந்து பெரிய தொழில் தொகுப்புகள் அமைக்கப்பட உள்ளன

* புகைப்படம் எடுத்தல், அட்டைப் பெட்டி அச்சிடுதல், உணவுப் பொருட்கள், கயிறு தயாரித்தல் மற்றும் அச்சிடும் துறைகளுக்கு, செங்கல்பட்டு, திருப்பத்துார், கன்னியாகுமரி, திண்டுக்கல் மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில், 55 கோடி ரூபாய் செலவில், ஐந்து பொது வசதி மையங்கள் நிறுவப்படும்

* 265 ஏக்கர் பரப்பளவில், ஐந்து இடங்களில் நில வங்கிகளை, 'சிட்கோ' நிறுவ உள்ளது. சிட்கோ தொழில் துறை பூங்காக்களில், விற்கப்படாத மனைகளை விரைவாக பயன்பாட்டிற்கு கொண்டு வருவதை உறுதி செய்ய, விலைக் கொள்கை சீரமைக்கப்படும்

* சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறை நிறுவனங்களின் தொழிலாளர்களுக்கான, மலிவான வாடகையில் குடியிருப்பு வளாகங்கள், முதலில் சென்னை மற்றும் கோவையிலும், பின்னர் பிற இடங்களிலும் துவங்கப்படும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X