பொது செய்தி

தமிழ்நாடு

ஓணமும், பட்ஜெட்டும் கைகொடுக்கல: கொப்பரை உற்பத்தியாளர்கள் ஏமாற்றம்

Added : ஆக 13, 2021
Share
Advertisement
நெகமம்:கொப்பரை விலை தொடர்ந்து சரிவை கண்டுள்ள நிலையில், ஓணம் பண்டிகை, கை கொடுக்காத நிலையில், தமிழக பட்ஜெட்டிலும் விலை நிர்ணயிக்காததால் கொப்பரை உற்பத்தியாளர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.தமிழகத்தில், விவசாயிகள் பெரும்பாலும் தென்னை சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர். ஆண்டுதோறும், ஓணம் திருவிழா காலங்களில், கொப்பரை, இளநீர், தேங்காய் மற்றும் தேங்காய் எண்ணெய், தேங்காய் பவுடர்

நெகமம்:கொப்பரை விலை தொடர்ந்து சரிவை கண்டுள்ள நிலையில், ஓணம் பண்டிகை, கை கொடுக்காத நிலையில், தமிழக பட்ஜெட்டிலும் விலை நிர்ணயிக்காததால் கொப்பரை உற்பத்தியாளர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.தமிழகத்தில், விவசாயிகள் பெரும்பாலும் தென்னை சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர். ஆண்டுதோறும், ஓணம் திருவிழா காலங்களில், கொப்பரை, இளநீர், தேங்காய் மற்றும் தேங்காய் எண்ணெய், தேங்காய் பவுடர் ஆகியவற்றுக்கு கிராக்கி ஏற்பட்டு விலை உயரும். இது, கொரோனா தொற்று பரவலுக்கு முந்தைய ஆண்டுகளில், கொப்பரை மற்றும் ஆயில் உற்பத்தியாளர்களுக்கு வரவேற்பான காலமாக இருந்தது.நடப்பு ஆண்டில், கொரோனா பரவல் காரணமாக, கேரளாவில் ஓணம் பண்டிகை கொண்டாடப்படவில்லை. இதனால், தமிழகத்தில் இருந்து தேங்காய், கொப்பரை மற்றும் எண்ணெய் விற்பனையில் தேக்கம் ஏற்பட்டுள்ளதால், உற்பத்தியாளர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.தற்போது, தேங்காய் விலையும் சரிவை கண்டுள்ளது. நேற்றைய நிலவரப்படி, ஒரு டன் உரித்த பச்சை தேங்காய் - 28 ஆயிரம் ரூபாய், கருப்பு தேங்காய் - 30 ஆயிரம்; தேங்காய் பவுடர் கிலோ - 165, 15 கிலோ எடைகொண்ட தேங்காய் எண்ணெய் டின் - 2,250, சாதாரண ரக கொப்பரை கிலோ - 99, ஸ்பெஷல் ரக கொப்பரை கிலோ - 101 ரூபாய்க்கும் விற்றது. கொப்பரை விலை தொடர்ந்து சரிவை கண்டுள்ளதால், உற்பத்தியாளர்கள் இருப்பு கொப்பரையை விற்க முன்வந்துள்ளனர். இருப்பினும் கொள்முதல் செய்ய வியாபாரிகள் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழக பட்ஜெட்டில், கொப்பரைக்கு நிலையான விலை அறிவிப்பு வெளியாகும் என, உற்பத்தியாளர்கள் எதிர்பார்த்தனர். நேற்றைய பட்ஜெட்டிலும், கொப்பரை கொள்முதலுக்கான அறிவிப்பு இல்லாததால், கொப்பரை உற்பத்தியாளர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X