இந்தியா

அமளி செய்த எம்.பி.,க்கள் மீது நடவடிக்கை எடுக்க முடிவு?

Updated : ஆக 15, 2021 | Added : ஆக 13, 2021 | கருத்துகள் (11)
Share
Advertisement
ராஜ்யசபாவில் அமளியில் ஈடுபட்ட எம்.பி.,க்கள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து சபை தலைனர் வெங்கையா நாயுடு ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. ராஜ்யசபாவில் சமீபத்தில் அதிகாரிகளின் மேஜை மீது ஏறி, எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் அமளியில் ஈடுபட்டனர். சபையின் கண்ணியத்தை குலைக்கும் அந்த செயல்களால் அன்றிரவு முழுதும் தூக்கம் இல்லாமல் தவித்ததாக சபை தலைவர் வெங்கையா நாயுடு
 அமளி ,எம்.பி.,க்கள் மீது  நடவடிக்கை , முடிவு?

ராஜ்யசபாவில் அமளியில் ஈடுபட்ட எம்.பி.,க்கள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து சபை தலைனர் வெங்கையா நாயுடு ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
ராஜ்யசபாவில் சமீபத்தில் அதிகாரிகளின் மேஜை மீது ஏறி, எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் அமளியில் ஈடுபட்டனர். சபையின் கண்ணியத்தை குலைக்கும் அந்த செயல்களால் அன்றிரவு முழுதும் தூக்கம் இல்லாமல் தவித்ததாக சபை தலைவர் வெங்கையா நாயுடு கண்ணீருடன் கூறினார்.

மேலும், ஓ.பி.சி., இட ஒதுக்கீடு மசோதா குறித்த விவகாரத்தில், சபை பாதுகாவலர்களுடன், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மோதலில் ஈடுபட்டனர். கையில் வைத்திருந்த சில அறிக்கைளை கிழித்து வீசி விட்டு, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளியேறினர். எம்.பி.,க்கள் தங்களை தாக்கியதாக பாதுகாவலர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

பாதுகாவலர்கள் தங்களை தாக்கியதாக எம்.பி.,க்கள் ஆவேசமாக குறிப்பிட்டனர்.
இது தொடர்பாக ராஜ்யசபா செயலக உயர் அதிகாரிகள், பார்லிமென்ட் பாதுகாப்பு நடவடிக்கைகள் உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் வீடியோ காட்சிகளை ஆய்வு செய்து, அறிக்கை தயார் செய்து சபைத் தலைவர் வெங்கையா நாயுடுவிடம் தந்துள்ளனர்.

இந்த விவகாரத்தில் அடுத்து என்ன செய்வது என்பது குறித்து வெங்கையா நாயுடு, தீவிர ஆலோசனையில் உள்ளார். இதுபோன்ற முன்மாதிரி சம்பவங்கள் முந்தைய காலங்களில் என்னென்ன நடந்துள்ளன என்றும், அதற்கு எந்த மாதிரியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்பது குறித்தும் ஆய்வு செய்து வருகிறார் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.


வெங்கையா நாயுடு உருக்கம்

ராஜ்யசபா தலைவர் வெங்கையா நாயுடு நேற்று கூறியதாவது: சபை சுமுகமாக நடக்க வேண்டுமெனில் அரசு மற்றும் எதிர்க்கட்சி என இரு தரப்புகளுக்கும் அதற்கான கடமையும், பொறுப்பும் உள்ளது.அரசும், எதிர்க்கட்சிகளும் என் இரு கண்கள். எந்தவொரு விஷயத்தையும் தெளிவாக பார்க்க வேண்டுமெனில் இரு கண்களும் இருந்தால்தான் முடியும். எனவே இரு தரப்பையும் சமமாகவே கருதுகிறேன்.

விவாதங்கள் நடத்துவதற்குதான் சபை உள்ளது. தங்களுக்குள்ள அரசியல் மோதல்களை எல்லாம் சபைக்குள் காட்ட கூடாது.நடந்த சம்பவங்கள் குறித்து உரிய முறையில் ஆய்வு செய்யப்படுகிறது. அனைத்து கோணங்களிலும் ஆராய்ந்து, இருதரப்பினரது வாதங்களையும் கருத்தில் வைத்து உரிய முறையில் நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார். - நமது டில்லி நிருபர் -

Advertisement
வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
14-ஆக-202118:32:28 IST Report Abuse
Pugazh V //கடினமான இலக்குக்களை நிர்னயித்து கண்காணிக்க வேண்டும்.// அவர்கள் என்ன ஸேல்ஸ்மென்களா? கடினமான டார்கெட் யா கொடுத்து கண்காணிக்க வேண்டுமா? யார் டார்கெட் கொடுப்பது? அவர்கள் கேட்பார்களா?யார் கண்காணிப்பது? பைத்தியக்காரத்தனமான கருத்து.
Rate this:
Cancel
ravikumark - Chennai,இந்தியா
14-ஆக-202118:08:15 IST Report Abuse
ravikumark Is there a provision in the constitution to disqualify them, we need to do that.
Rate this:
Cancel
r.sundaram - tirunelveli,இந்தியா
14-ஆக-202113:57:18 IST Report Abuse
r.sundaram அந்த மேஜையின்மேல் ஏறி நின்று அட்டகாசம் செய்த எம் பி யை, அவரின் எம் பி பதவியை வகிக்க தகுதியற்றவர் என்று கூறி அரசின் எம் பி பதவியை பறித்து, இனிமேலும் அவர் தேர்தலில் நிற்கவும் தடை விதிக்க வேண்டும். அவரை ஊக்கப்படுத்தியவர்களுக்கும் கடுமையான தண்டனை தர வேண்டும்.ஆறு மாதங்கள் சபை நடவடிக்கைகளில் கலந்துகொள்ள தடை விதிக்கலாம். இந்த மாதிரி கடுமையான தண்டனைகள் கொடுத்தாலே இவர்களை வழிக்கு கொண்டுவர முடியும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X