பொது செய்தி

தமிழ்நாடு

40 கிலோ கலப்பட டீத்தூள் பறிமுதல்: உணவு பாதுகாப்புத்துறை அதிரடி

Added : ஆக 13, 2021
Share
Advertisement
உடுமலை;உடுமலை அருகே, உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வில், கடையில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த, 40 கிலோ கலப்பட டீத்துாள் பறிமுதல் செய்யப்பட்டது.திருப்பூர் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் டாக்டர் விஜயலலிதாம்பிகை தலைமையில், அதிகாரிகள் குழுவினர் உடுமலை ஒன்றியத்திற்குட்பட்ட, பள்ளபாளையம், கொங்கலக்குறிச்சி, குறிச்சிக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு
 40 கிலோ கலப்பட டீத்தூள் பறிமுதல்: உணவு பாதுகாப்புத்துறை அதிரடி

உடுமலை;உடுமலை அருகே, உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வில், கடையில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த, 40 கிலோ கலப்பட டீத்துாள் பறிமுதல் செய்யப்பட்டது.திருப்பூர் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் டாக்டர் விஜயலலிதாம்பிகை தலைமையில், அதிகாரிகள் குழுவினர் உடுமலை ஒன்றியத்திற்குட்பட்ட, பள்ளபாளையம், கொங்கலக்குறிச்சி, குறிச்சிக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள கடைகள், உணவு உற்பத்தி நிறுவனங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.அப்போது, டீக்கடை மற்றும் பேக்கரிகளில் கலப்பட டீத்துாள் பயன்படுத்துவது கண்டறியப்பட்டது. அதிகாரிகள் விசாரணையில், குறிச்சிக்கோட்டையிலுள்ள மளிகை கடையில் வாங்கியதாக தெரிவித்தனர்.அதன் அடிப்படையில், அங்கு சென்ற அதிகாரிகள், 40 கிலோ கலப்படம் செய்து விற்பனைக்கு வைத்திருந்த தரமற்ற டீத்துாள் பாக்கெட்களை பறிமுதல் செய்தனர். மாதிரி எடுக்கப்பட்டு, பரிசோதனை செய்ய ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.இந்த அறிக்கை அடிப்படையில், கடை உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும், தொடர்ந்து ஆய்வு செய்து, செயற்கை நிறமிகள் சேர்த்து, கலப்பட டீத்துாள் பயன்படுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.உணவு பொருட்கள் கலப்படம் குறித்து, 94440 42322 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.ஆய்வில், உணவு பாதுகாப்பு அலுவலர்கள் கோடீஸ்வரன், விஜயராஜா, பாலமுருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X