பொது செய்தி

இந்தியா

தேர்தல் ஆணைய இணையதளம் 'ஹேக்' செய்த இளைஞர் கைது

Updated : ஆக 13, 2021 | Added : ஆக 13, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
சஹாரன்பூர் :தேர்தல் ஆணையத்தின் இணைய தளத்தை, 'ஹேக்' செய்து, போலி வாக்காளர் அடையாள அட்டைகளை தயாரித்து வந்த இளைஞர் உத்தர பிரதேசத்தில் கைது செய்யப்பட்டார். உ.பி.,யில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது.இணைய தளம்இங்குள்ள சஹாரன்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த விபுல் சைனி என்ற இளைஞர், கம்ப்யூட்டர் கடை நடத்தி வந்துள்ளார். பி.சி.ஏ., பட்டம் பெற்றுள்ள
 தேர்தல் ஆணைய இணையதளம் 'ஹேக்' செய்த இளைஞர் கைது


சஹாரன்பூர் :தேர்தல் ஆணையத்தின் இணைய தளத்தை, 'ஹேக்' செய்து, போலி வாக்காளர் அடையாள அட்டைகளை தயாரித்து வந்த இளைஞர் உத்தர பிரதேசத்தில் கைது செய்யப்பட்டார். உ.பி.,யில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது.


இணைய தளம்



இங்குள்ள சஹாரன்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த விபுல் சைனி என்ற இளைஞர், கம்ப்யூட்டர் கடை நடத்தி வந்துள்ளார். பி.சி.ஏ., பட்டம் பெற்றுள்ள இவர் இந்திய தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணைய தள பக்கத்தை ஹேக் செய்துள்ளார்.மேலும், தேர்தல் ஆணைய அதிகாரிகள் பயன்படுத்தும் 'பாஸ்வோர்ட்'களை உபயோகித்து, அந்த இணையதள பக்கத்தை பயன்படுத்தி வந்துள்ளார். அதன் வாயிலாக ஆயிரக்கணக்கான போலி வாக்காளர் அடையாள அட்டைகளை தயாரித்து வந்துள்ளார். இதை அறிந்த தலைமை தேர்தல் ஆணையம், விசாரணை அமைப்புகளிடம் இதுகுறித்து புகார் அளித்தது.


latest tamil news





விசாரணை



இந்நிலையில் புலனாய்வுப் பிரிவினரும், சஹாரன்பூர் போலீசாரும் இணைந்து, விபுல் சைனியை நேற்று கைது செய்தனர். சைனியின் வங்கிக் கணக்கில் பல லட்சம் ரூபாய் உள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
iloveindia - Ramanathapuram,இந்தியா
13-ஆக-202123:54:11 IST Report Abuse
iloveindia அப்போ போனை hack செய்தவர்கள்?
Rate this:
Cancel
அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா
13-ஆக-202123:42:07 IST Report Abuse
அசோக்ராஜ் என்னப்பா இது பொசுக்குன்னு அரெஸ்ட் பண்ணிட்டாங்க? ஹேக்கிங் எதுவும் இருக்காது. கான்கிராஸ் சார்பு அதிகாரிகள் ஐடி பாஸ்வேர்டு இவனோடு ஷேர் செய்து ரோஹிங்கியாக்களுக்கும் பங்களாதேசிகளுக்கும் பாக்கிஸ்தானி மூர்கர்களுக்கும் தேர்தல் அடையாள அட்டை தயாரித்து இருப்பார்கள். ஆபரேஷன் ஆபிரகாமியா.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X