உங்க கையில தான் எல்லாம் இருக்கு! மானியத்தில் கடன்; தாட்கோ மேலாளர் பேச்சு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

உங்க கையில தான் எல்லாம் இருக்கு! மானியத்தில் கடன்; தாட்கோ மேலாளர் பேச்சு

Added : ஆக 13, 2021
Share
அன்னுார்;'சுய உதவிக்குழுக்களுக்கு தொழில் கடனில், 50 சதவீதம் மானியம் வழங்கப்படும்' என அன்னுாரில் நடந்த கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.பிள்ளையப்பம்பாளையம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில், 'தாட்கோ' சார்பில் மானியத் திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. ஊராட்சி தலைவர் லட்சுமண மூர்த்தி தலைமை வகித்தார்.'தாட்கோ' மேலாளர் செல்வன் பேசியதாவது:'தாட்கோ'
 உங்க கையில தான் எல்லாம் இருக்கு! மானியத்தில் கடன்; தாட்கோ மேலாளர் பேச்சு

அன்னுார்;'சுய உதவிக்குழுக்களுக்கு தொழில் கடனில், 50 சதவீதம் மானியம் வழங்கப்படும்' என அன்னுாரில் நடந்த கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.பிள்ளையப்பம்பாளையம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில், 'தாட்கோ' சார்பில் மானியத் திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. ஊராட்சி தலைவர் லட்சுமண மூர்த்தி தலைமை வகித்தார்.'தாட்கோ' மேலாளர் செல்வன் பேசியதாவது:'தாட்கோ' திட்டத்தில், 18 முதல் 65 வயது வரையுள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பயன்பெறலாம். தனிநபர் தொழில் செய்ய கடன் பெற்றால், 30 சதவீதம், சுய உதவி குழுக்கள் கடன் பெற்றால், 50 சதவீதம் மானியம் வழங்கப்படும். திட்டமிட்டுள்ள தொழில் குறித்து முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டும். பின், அந்த திட்டம் குறித்த அறிக்கையுடன், வங்கிக் கடனுக்கு விண்ணப்பித்தால் மானியம் வழங்கப்படும்.தற்போது, கால்நடை பராமரிப்பில் நல்ல வருமானம் கிடைக்கிறது. பால் பண்ணை, நாட்டுக் கோழி, ஆடு வளர்ப்பு இறால் வளர்ப்பு, மீன் வளர்ப்பு ஆகியவற்றை மேற்கொள்வதன் வாயிலாக, வங்கிக் கடனும் பெறலாம். மானியமும் பெற்று தங்கள் வாழ்க்கை தரத்தை உயர்த்திக் கொள்ளலாம். தாட்கோ சார்பில் தொழில் பயிற்சிகளும் அளிக்கப்படுகின்றன. இளைஞர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. நிலமற்ற விவசாய பெண் தொழிலாளர்கள் நிலம் வாங்கவும் கடன் வழங்கப்படுகிறது. விவசாயிகள் போர்வெல் அமைத்தல், கொட்டகை அமைத்தல் ஆகியவற்றுக்கும் மானியம் வழங்கப்படுகிறது. இதற்கு, ஆண்டு வருமானம் 2 லட்ச ரூபாய்க்குள் இருக்க வேண்டும். வருமான சான்று இணைக்க வேண்டும்.வருமான சான்று ஒரு வருடத்திற்கு மட்டும் செல்லுபடியாகும். அத்துடன் ஸ்மார்ட் கார்டு, ஆதார் அட்டை, துவங்கயிருக்கும் தொழிலுக்கான விலை புள்ளி, அசல் திட்ட அறிக்கை ஆகியவற்றை, 'ஆன்லைன்' வாயிலாக 'ஜேபேக்' வடிவில்பதிவேற்றம் செய்யவேண்டும்.கூடுதல் தகவலுக்கு, கோவையில் உள்ள தாட்கோ அலுவலகத்தை (0422) - 2240111 என்ற தொலைபேசி எண்ணில், காலை 10:00 முதல் மாலை 5:30 மணி வரை அலுவலக நாட்களில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.குழுக்களுக்கு உதவிமகளிர் திட்ட மேலாளர் கந்தசாமி பேசுகையில், ''மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு தொழில் செய்யவும், புதிதாக குழு துவக்கவும், வங்கி கடன் பெற்று தரவும் உதவி செய்யப்படுகிறது. எனவே, சுய உதவி குழுக்கள் தொழில் செய்ய, வங்கி கடன் பெற, 99407 08581 என்னும் மொபைல் எண்ணை தொடர்பு கொள்ளலாம்,'' என்றார்.பங்கேற்ற சுய உதவிக்குழு உறுப்பினர்கள், 'வங்கியில் கடன் தருவதற்கு அலைக்கழிக்கின்றனர்' என புகார் தெரிவித்தனர்.'வங்கிகள் கேட்கும் ஆவணங்களையும், தொழில் குறித்த தெளிவான திட்ட அறிக்கையும் சமர்ப்பித்தால், வங்கியில் எளிதில் கடன் பெறலாம்' என, அதிகாரிகள் பதில் அளித்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X