எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்! ஊராட்சி நிர்வாகிகளிடம் விசாரணை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்! ஊராட்சி நிர்வாகிகளிடம் விசாரணை

Added : ஆக 13, 2021
Share
அன்னுார்:ஊராட்சியில் பல லட்சம் ரூபாய் முறைகேடு நடந்ததாக எழுந்த புகார் குறித்து, ஒன்றிய அலுவலகத்தில் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.குன்னத்துார் ஊராட்சியில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாக, துணை தலைவர் மற்றும் 3 வார்டு உறுப்பினர்கள், ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும், கலெக்டர் அலுவலகத்திலும் புகார் அளித்தனர். இதையடுத்து, குன்னத்துார் ஊராட்சி அலுவலகத்துக்கு சென்ற

அன்னுார்:ஊராட்சியில் பல லட்சம் ரூபாய் முறைகேடு நடந்ததாக எழுந்த புகார் குறித்து, ஒன்றிய அலுவலகத்தில் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.குன்னத்துார் ஊராட்சியில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாக, துணை தலைவர் மற்றும் 3 வார்டு உறுப்பினர்கள், ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும், கலெக்டர் அலுவலகத்திலும் புகார் அளித்தனர். இதையடுத்து, குன்னத்துார் ஊராட்சி அலுவலகத்துக்கு சென்ற அதிகாரிகள், முதல்கட்ட விசாரணை நடத்தினர். இரண்டாம் கட்டமாக, அன்னுார் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகும்படி, தலைவர், துணைத் தலைவர், வார்டு உறுப்பினர்கள் மற்றும் ஊராட்சி செயலருக்கு கடிதம் அனுப்பினர்.நேற்று, ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் விசாரணை நடந்தது. வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) அசோகன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முத்துராஜ், வீராசாமி ஆகியோர் விசாரணை நடத்தினர்.இதில், தலைவர் கீதா தங்கராஜ் மற்றும் ஐந்து வார்டு உறுப்பினர்கள் ஒரு அணியாகவும், துணைத் தலைவர் மூர்த்தி மற்றும் மூன்று உறுப்பினர்கள் ஒரு அணியாகவும், ஊராட்சி செயலாளர் ஸ்ரீபதியும் பங்கேற்றனர்.விசாரணையில், துணைத் தலைவர் மற்றும் 3 வார்டு உறுப்பினர்கள் கூறுகையில், 'சொத்து வரி ரசீது புத்தகத்தை முறைகேடாக பயன்படுத்தி, பல லட்ச ரூபாய் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. அடிப்படை வசதிகள் இல்லாத 'லே-அவுட்'களுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. ஊராட்சி தலைவரின் கணவர் நிர்வாகப் பணிகளை செய்கிறார். தரமில்லாத பிளீச்சிங் பவுடர், கிருமி நாசினி திரவம் கொள்முதல் செய்யப்படுகிறது' என புகார் தெரிவித்தனர்.தலைவர் கீதா தங்கராஜ் கூறுகையில், ''இது பொய்யான குற்றச்சாட்டு. அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்ட லே-அவுட்டுகளுக்கு மட்டுமே அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. ரசீது புத்தகங்களுக்கு ஊராட்சி செயலாளர் தான் பொறுப்பு. தலைவர் வரிவசூல் செய்வதில்லை. கொள்முதல் செய்த பொருட்களின் தரத்தை ஆய்வு செய்து கொள்ளலாம்,'' என்றார்.அதிகாரிகள், இரு தரப்பினருடைய புகார்கள் மற்றும் பதில்களை, எழுத்துப்பூர்வமாக தரும்படி கேட்டுக் கொண்டனர். இதையடுத்து, இரு தரப்பினரும் தங்களது குற்றச்சாட்டு மற்றும் பதில்களை எழுத்துப்பூர்வமாக அதிகாரிகளிடம் சமர்ப்பித்தனர். விசாரணை அறிக்கை, மாவட்ட நிர்வாகத்திடம்வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X