பொது செய்தி

தமிழ்நாடு

ரொம்ப கவனமா இருக்கணும்...! பயிற்சி முகாமில் அறிவுறுத்தல்

Added : ஆக 13, 2021
Share
Advertisement
சூலுார்;''பூச்சி மருந்து தெளிக்கும் போது முழு கவச உடை கட்டாயம் அணிய வேண்டும்,'' என, பயிற்சி முகாமில் அறிவுறுத்தப்பட்டது.வேளாண் மற்றும் உழவர் நலத்துறையின் 'அட்மா' திட்டத்தின் சார்பில், பயிர் பாதுகாப்புக்கான பூச்சிக்கொல்லி மருந்துகளை பாதுகாப்பாக கையாளும் முறைகள் குறித்து, விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. அருகம்பாளையம் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன்
 ரொம்ப கவனமா இருக்கணும்...! பயிற்சி முகாமில் அறிவுறுத்தல்

சூலுார்;''பூச்சி மருந்து தெளிக்கும் போது முழு கவச உடை கட்டாயம் அணிய வேண்டும்,'' என, பயிற்சி முகாமில் அறிவுறுத்தப்பட்டது.வேளாண் மற்றும் உழவர் நலத்துறையின் 'அட்மா' திட்டத்தின் சார்பில், பயிர் பாதுகாப்புக்கான பூச்சிக்கொல்லி மருந்துகளை பாதுகாப்பாக கையாளும் முறைகள் குறித்து, விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. அருகம்பாளையம் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில் நடந்த பயிற்சி முகாமில், வட்டார வேளாண் உதவி இயக்குனர் விஜய கல்பனா தலைமை வகித்தார்.கோவை வேளாண் பல்கலை பூச்சியியல் துறை உதவி பேராசிரியர் சுகந்தி பேசியதாவது:'நோயற்ற பயிரே நிறைவான விளைச்சல் தரும்' என்பதால், பூச்சி கொல்லி மருந்துகளை தெளித்து நோய்களை கட்டுப்படுத்த வேண்டிய நிலை உள்ளது. மருந்துகளை பயன்படுத்தும் போது, பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றுவது அவசியம். முதலில் பூச்சி மருந்துகளை தேவைப்படும் போது மட்டுமே தெளிக்க வேண்டும். அதை வாங்கியவுடன், அதன் மீதுள்ள பாதுகாப்பாக பயன்படுத்தும் முறைகளை படித்து பின்பற்றவேண்டும்.பரிந்துரைக்கப்பட்ட சரியான அளவை மட்டுமே பயன்படுத்த வேண்டும். மருந்து தெளிப்பவர் பயிற்சி பெற்றிருக்க வேண்டும். பாதுகாப்பு கவச உடைகள், முகக்கவசம், ரப்பர் காலணி, கையுறைகள் கட்டாயம் அணிந்திருக்க வேண்டும். மருந்து தெளிக்கும் போது, குடிநீர் குடிக்கவோ, உணவு உண்ணவோ கூடாது.ஒன்றுக்கும் மேற்பட்ட பூச்சி கொல்லிகள், பூஞ்சான கொல்லிகள் அல்லது களைக்கொல்லிகள், நுண்ணுாட்டங்களை கலந்து தெளிக்க கூடாது. தெளிப்பானில் உள்ள 'நாசில்களை' வாயால் ஊதி சுத்தம் செய்வது தவறு. மருந்து தெளித்து பின் சோப்பு போட்டு குளிக்க வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்.'அட்மா' தலைவர் ஜெகநாதன், ஊராட்சி தலைவர் கவிதா மதன்குமார், கூட்டுறவு சங்க துணைத்தலைவர் குமாரசாமி, வேளாண் அலுவலர் திவ்யா, உதவி வேளாண் அலுவலர் சந்தோஷ்குமார், தினேஷ்குமார், முனுசாமி உட்பட தொழில்நுட்ப அலுவலர்கள் மற்றும் விவசாயிகள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X