பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா சிகிச்சை விபரம் கட்டாயம்

Added : ஆக 13, 2021
Share
Advertisement
சென்னை: ''சென்னையில், கொரோனா அறிகுறி மற்றும் தொற்றுடன் சிகிச்சை பெறுவோர் விபரங்களை, தனியார் மருத்துவமனைகள், மாநகராட்சிக்கு கட்டாயம் தெரியப்படுத்த வேண்டும்,'' என, மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி கூறினார்.சென்னை மாநகராட்சி, ரிப்பன் மாளிகை வளாகத்தில், தனியார் மருத்துவமனைகளுடனான ஆலோசனை கூட்டம், மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி தலைமையில் நேற்று

சென்னை: ''சென்னையில், கொரோனா அறிகுறி மற்றும் தொற்றுடன் சிகிச்சை பெறுவோர் விபரங்களை, தனியார் மருத்துவமனைகள், மாநகராட்சிக்கு கட்டாயம் தெரியப்படுத்த வேண்டும்,'' என, மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி கூறினார்.

சென்னை மாநகராட்சி, ரிப்பன் மாளிகை வளாகத்தில், தனியார் மருத்துவமனைகளுடனான ஆலோசனை கூட்டம், மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி தலைமையில் நேற்று நடந்தது.கூட்டத்தில் கமிஷனர் பேசியதாவது:தனியார் மருத்துவமனைகள் மற்றும் ஒரு நபர் மருத்துவரை கொண்டு இயங்கும் கிளினிக்குகள், காய்ச்சல், இருமல், சளி போன்ற அறிகுறிகளுடன் வரும் நபர்கள் குறித்த தகவல்களை, மாநகராட்சிக்கு கட்டாயம் தெரியப்படுத்த வேண்டும். அதேபோல், தொற்று பாதித்த நபர், 12 நாட்களுக்கு முன்னதாக, டிஸ்சார்ஜ் செய்யப்படும் போது, மாநகராட்சிக்கு, தெரியப்படுத்துதல் அவசியம். மாநகராட்சியின் முயற்சிக்கு, தனியார் மருத்துவமனைகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X